/* */

அடடே..! விஜய் திருமணம் செய்யவிருந்த பிரபலத்தின் மகள்! குறுக்கே வந்த சங்கீதா?

அடடே..! விஜய் திருமணம் செய்யவிருந்த பிரபலத்தின் மகள்! குறுக்கே வந்த சங்கீதா?

HIGHLIGHTS

அடடே..! விஜய் திருமணம் செய்யவிருந்த பிரபலத்தின் மகள்! குறுக்கே வந்த சங்கீதா?
X

தளபதி விஜய், தனது மனைவியான சங்கீதாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன் வேறொருவரை திருமணம் செய்துகொள்வதாக இருந்தது எனவும், பின்னாளில் விஜய்யின் வாழ்வில் காதல் நுழைந்ததால் அது நடக்காமல் போயிவிட்டது எனவும் பிரபல பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் தளபதி விஜய்யின் திருமணம் குறித்து பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தற்போது ஒரு புதிய தகவலை தெரிவித்துள்ளார்.

யார் அவர்?

விஜய்யின் தாய் மாமாவும், ஷோபனாவின் தம்பியும்.. பின்னணி பாடகர்மான சுரேந்தரின் மகளை தான் விஜய்யை திருமணம் செய்து வைக்க எஸ்.ஏ.சி மற்றும் ஷோபனா முடிவு செய்ததாகவும், ஆனால் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் ஏற்பட்ட காதலால் தங்களுடைய முடிவை மாற்றிக் கொண்டு சங்கீதாவுக்கே விஜய்யை திருமணம் செய்து வைத்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

பயில்வான் ரங்கநாதன்

இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் கூறுகையில், "விஜய்யின் தாய் மாமாவும், ஷோபனாவின் தம்பியும் சுரேந்தரின் மகள் மிகவும் அழகாகவும், புத்திசாலித்தனமாகவும் இருப்பதால், அவளை விஜய்க்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். ஆனால் விஜய்க்கு சங்கீதா மீது காதல் ஏற்பட்டது. விஜய்யின் பெற்றோரும் சங்கீதாவை மிகவும் நேசித்தனர். எனவே, விஜய்யின் விருப்பப்படியே சங்கீதாவை திருமணம் செய்து வைத்தனர்" என்று தெரிவித்தார்.

காதல் திருமணம்

விஜய்யும் சங்கீதாவும் கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். மகன் விரைவில் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். விஜய்யின் திருமணத்திற்கு பிறகு, சங்கீதா தன்னுடைய குடும்பத்தை கவனித்து வருகிறார்.

இருப்பினும், சமீப காலமாக இவர்கள் இருவருக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக சில தகவல்கள் சமூக வலைதளத்தில் அவ்வபோது வெளியாகி வருகிறது. ஆனால் இந்த தகவல்களுக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. மகன் லண்டனில் இருப்பதால் அவருக்கு உதவியாக சங்கீதாவும் அங்கு வசித்து வருவதாக கூறப்படுகிறது.

விஜய் மற்றும் சங்கீதாவின் திருமணம் குறித்த இந்த புதிய தகவல், ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் உண்மையா இல்லையா என்பதை விஜய் மற்றும் சங்கீதா இருவரும் தான் தெரிவிக்க வேண்டும்.

தளபதி 68

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ஜோடியாக சினேகா, மீனாட்சி சௌத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, லைலா, மோகன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் இருக்கிறது. அடுத்த ஷெட்யூலுக்கு படக்குழு தயாராகி வருகிறது.

Updated On: 17 Nov 2023 7:30 AM GMT

Related News