/* */

யார் எதிரி? யார் உங்கள் நண்பர்..? லட்டு கேம்... ஒற்றுமையை உண்டாக்குமா? சீர்குலைக்குமா?

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைய 2வது புரோமோ வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

யார் எதிரி? யார் உங்கள் நண்பர்..? லட்டு கேம்... ஒற்றுமையை உண்டாக்குமா?  சீர்குலைக்குமா?
X

இன்றைய புரோமோ 2

விளையாட்டு பெயர் : நீல லட்டு சிகப்பு லட்டு

இரண்டு வகை லட்டுகள் அங்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் நீல ட்ரே லட்டு நண்பர்களாக நினைப்பவர்களுக்கும், சிகப்பு ட்ரே லட்டு எதிரிகளாக நினைப்பவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என சொல்லப்பட்டிருக்கிறது.

இதில் வழக்கம்போல அனைவரும் தங்களது எதிரிகள், நண்பர்கள் என நினைப்பவர்களுக்கு லட்டுகளை வழங்குகிறார்கள்.

விஷ்ணு மாயாவுக்கும், அர்ச்சனா விசித்ராவுக்கும், விசித்ரா ஜோவிகாவுக்கும், பூர்ணிமா அர்ச்சனாவுக்கும், மாயா விஷ்ணுவுக்கும்,நிக்ஷன் மணிக்கும், மணி தினேஷுக்கும், தினேஷ் பூர்ணிமாவுக்கும் என வழங்குவதாக புரோமோவில் காட்டப்படுகிறது.

இன்றைய புரோமோ 1

இந்த டாஸ்க்கில் தோற்றால் பெரிய பெட்ரூம் மூடப்படும் என்கிற டிஸ்கிளைமரோடு புதிய டாஸ்கை அறிமுகப்படுத்துகிறார் பூர்ணிமா. ஆனால் இந்த டாஸ்க்கில் தோற்று விடுகிறார்கள் என்பதையும் காட்டுகிறது புரோமோ. இதனால் பெட்ரூமின் கதவுகள் மூடப்படுகின்றன. கூல் சுரேஷ் கொதித்தெழுகிறார்.

முந்தைய நாள் ஹைலைட்ஸ்

மதுர குலுங்க பாடலின் மூலம் நிகழ்ச்சி துவங்கியது. பிராவோ, நிக்ஸன், ரவீனா, விசித்ரா, மணி, அக்ஷயா, அர்ச்சனா என அனைவரும் ஆடி தீபாவளி நாளைத் துவங்கினர்.

பிக்பாஸ் வீட்டிலுள்ள அனைவருக்கும் பிக்பாஸ் தீபாவளி திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்த வாரம் பிக்பாஸ், ஸ்மால்பாஸ் பிரிவினை இல்லாமல், ஒரே வீட்டில் இருக்கப்போகிறார்கள்.

கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட தினேஷை, நான்கு அணிகளாக பிரிக்கச் சொல்கிறார் பிக்பாஸ். பிக்பாஸ் வீட்டிலுள்ள அனைவருக்கும் பிக்பாஸ் ட்ரீட் கொடுக்க விரும்புவதாகவும் அதனால் முழு நாளும் அவரே சாப்பாடு அனுப்பிவிடுவதாகவும் தெரிவித்து மற்ற யாரும் சமைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

நிக்ஷன், ப்ராவோ, ஜோவிகா, விஷ்ணு - கிச்சன் டீம்

மாயா, பூர்ணிமா - வெஸல் வாஷிங்

கூல் சுரேஷ், மணி, அர்ச்சனா - பாத்ரூம் கிளீனிங்

தீபாவளிக்கென சிறந்த உடைகளை பிக்பாஸ் அனுப்பி வைத்திருக்கிறார்.

மாயா - பூர்ணிமா

அர்ச்சனா குறித்து பூர்ணிமா ஏதேதோ சொல்கிறார். இதைக் கேட்டு மாயா சிரிக்கிறார். மாயாவை உசுப்பேற்றி விடுகிறார் பூர்ணிமா.

இந்த நாட்டின் மிகப் பெரிய பண்டிகைய பிக்பாஸ்ல கொண்டாடுறாங்க. அதில் சிறப்பு விருந்தினர் ஒருத்தரு வந்திருக்காங்க.. என்று ரவீனா கொடுக்கப்பட்டதை வாசிக்கிறார்.

ரவுண்ட் 1

ஆக்டிவிட்டி ஏரியாவுல 200 அகல் விளக்குகள் இருக்கிறது.அதனை பெயிண்ட் செய்யவேண்டும். சில விதிமுறைகளும் இருக்கிறது. இரண்டு பேர் சேர்ந்து இந்த குச்சியால் விளக்கை பெயிண்டில் முக்கி எடுக்கவேண்டும்

சிறப்பு விருந்தினர்களாக சிருஷ்டி டாங்கே மற்றும் புகழ் இருவரும் வந்துள்ளார்கள்.

178 விளக்குகள் மட்டுமே பெயிண்ட் அடிக்கப்பட்டதால், இந்த டாஸ்க்கில் தோற்றுவிட்டார்கள்.

உள்ளே விருந்தினராக வந்த சிருஷ்டி புல்லியிங் பண்றீங்க என்று சொல்ல, திடீரென பயந்த அவர் பல்டி அடிக்கிறார் சிருஷ்டி.

ரவுண்ட் 2

புகழ், சிருஷ்டி போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்கள் பூந்திகளை லட்டுகளாக உருட்ட வேண்டும். இந்த லட்டுகளை வெளியில் இருக்கும் மக்கள் சாப்பிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷ்ணு, கூல் சுரேஷ் உள்ளிட்ட ஆண்கள் அணியும், விசித்ரா, அர்ச்சனா உள்ளிட்ட பெண்கள் அணியும் மோத இருவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ரவுண்ட் 3

கொளுத்தி போடு பட்டாச

கானா பாலா - பாம்பு வெடி

பொருள் : புகை மட்டும்தான் வரும்

பாலா: கூல் அண்ணே..!

ரவீனா - சங்கு சக்கரம்

காலா சுத்திடும்

ரவீனா : அர்ச்சனா

நிக்ஷன் - ஆட்டம் பாம்

வெடிச்சா பயங்கரமா இருக்கும்

நிக்ஷன் : மாயா

இப்படி ஒவ்வொருவராக பட்டாசுகளை எடுக்கவும் கொடுக்கவும் என இருக்கிறார்கள். ஆனா முக்கியமான வெடி புல்லட் பாம்..

விசித்ரா பூர்ணிமாவைத் தேர்ந்தெடுக்கிறார். இது பின்னாடி நிச்சயமாக வெடிக்கும் என்பது தெரிகிறது.

விஷ்ணு புல்லட் பாமை விசித்ராவுக்கு கொடுக்கிறார். மாயாவுக்கும் அர்ச்சனாவுக்கும் இடையில் மீண்டும் பற்றிக் கொள்கிறது.

Updated On: 14 Nov 2023 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு