பிக் பாஸ் சீசன் 7: ஐஷு வெளியேறியது ஏன்?

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலிருந்து ஐஷூ வெளியேறியது ஏன் என்பது தெரியவந்துள்ளது. வழக்கம்போல பிக்பாஸ் ஐஷுவை வெளியேற்றினாரா அல்லது வேறு ஏதும் காரணமா என ரசிகர்கள் குழம்பி வந்த நிலையில், இந்த உண்மை வெளிவந்துள்ளது.
கடந்த அக்டோபர் 1ம் தேதி துவங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 42வது நாளில் உள்ளது. இந்த வாரம் எவிக்ஷன் ப்ராசஸின் அடிப்படையில் ஐஷு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ஐஷுவின் வெளியேற்றம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை எபிசோடில் கமல்ஹாசன் புல்லி கேங்கிற்கு கடுமையான அறிவுரைகளை வழங்கியது போல புரோமோவில் காட்டப்பட்டது. அதேநேரம் பெண்களின் கண்ணியம் குறையக்கூடாது என்பதிலும் கமல்ஹாசன் கவனமாக இருந்தார். அவர் மீண்டும் மீண்டும் அந்த பெண்கள் பொய் சொல்லவில்லை தங்களுக்கு நிகழ்ந்ததை உறுதியாக சொல்கிறார்கள் என்பதை அவர்கள் வாயாலேயே கேட்டுப் பெற்றார்.
பிரதீப் ஆண்டனியின் செயல்பாடுகள் பெண்களுக்கு மட்டுமல்ல வீட்டில் இருந்த ஆண்களுக்கும் முகம்சுளிக்கும் வகையில் இருந்ததைக் காணமுடிந்தது. கமல்ஹாசனும் தன்னிலை விளக்கத்தை அளித்தார். இதில் முடிவு எடுத்தவர்கள் பெண்கள்தான். தாமதமான நீதி அநீதி என்று ஒரு வாக்கு உண்டு, ஆனால் அதற்காக நடந்த விசயங்களை மாற்றிவிட முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர் செய்த குற்றங்கள் காலம் தாழ்த்தி வெளியில் வந்தாலும் தண்டனை கொடுக்கப்படவேண்டும் என்பதே நீதி என்பதுபோல கமல்ஹாசன் பேசியிருந்தார்.
பிரதீப் ஆண்டனியின் செயல்பாடுகள் மிகவும் தவறானவை என பிக்பாஸ் பார்வையாளர்களே சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பரப்பி பேசி வருகின்றனர். இந்நிலையில் அந்த அலை ஓய்ந்து இப்போது ஐஷு வெளியேற்றப்பட்டதுக்கு காரணத்தை பேசி வருகிறார்கள்.
ஐஷு வெளியேற்றப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில் முக்கியமானது அவரது சர்ச்சைகள். ஐஷு பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது, சக போட்டியாளரான நிக்சனுடன் நெருக்கமாக பழகினார். இருவரும் கண்ணாடி வழியே முத்தங்களை பரிமாறிக்கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தின. இதனால் ஐஷுவின் பெற்றோர் மிகவும் கோபமடைந்தனர். பிக் பாஸ் செட்டுக்கு சென்று ஐஷுவை வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்த சர்ச்சையால் ஐஷுவின் பெயர் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதனால் அவருக்கு ஆதரவாக வாக்களிக்க பலர் தயங்கியதாக கூறப்படுகிறது.
மேலும், ஐஷு பிக் பாஸ் வீட்டில் பிற போட்டியாளர்களுடன் சண்டையிடுவது, தவறான வார்த்தைகளை பயன்படுத்துவது போன்ற செயல்களால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார். இவை அனைத்தும் ஐஷுவின் எலிமினேஷனுக்கு காரணமாக அமைந்துள்ளன.
ஐஷுவின் வெளியேற்றம் குறித்து ரசிகர்கள் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சிலர் அவரது சர்ச்சைகள் காரணமாகவே வெளியேற்றப்பட்டதாக கூறுகின்றனர். மற்றவர்கள் அவரது நடத்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகவே வெளியேற்றப்பட்டதாக கூறுகின்றனர்.
எது எப்படியோ, ஐஷு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வார கேப்டனாக தினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக புரோமோவில் காட்டப்பட்டுள்ளது.
கடந்த வாரம் போல இந்த வாரமும் பரபரப்பாக நிகழ்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் தினேஷை பழிவாங்க நிச்சயமாக மாயா கேங்க் முயற்சி செய்யும் என்பதுதான்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu