/* */

Lokesh Kanagaraj Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டதா? இதுதான் உண்மை!

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர் விளக்கம் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

Lokesh Kanagaraj Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டதா? இதுதான் உண்மை!
X

காலையிலேயே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறித்த தகவல்கள் டிரெண்டிங்கில் வந்துகொண்டிருக்கின்றன. இதற்கு காரணம் அவரது பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டு அதில் தொடர்பில்லாத புகைப்படங்களும், வீடியோக்களும் பதிவானதுதான் என சமூக வலைத்தளங்களிலும், செய்தி ஊடகங்களிலும் தகவல் பரவின.

ரசிகர்களும் உடனடியாக லோகேஷ் கனகராஜ் பேஸ்புக் பக்கத்துக்கு சென்று பார்வையில, அதில் அவரது பெயரே மாற்றப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். சமூக வலைத்தளங்களில் இருக்கும் பிரபலங்களுக்கு ஹேக்கிங் என்பது புதிய விசயமல்ல. இந்தியாவின் பெரிய பெரிய அரசு நிறுவனங்களின் கணக்குகளே ஹேக் செய்யப்படும்போது ஒரு சினிமா பிரபலத்தின் இணைய பக்கம் ஹேக் செய்யப்படுவது பெரிய விசயமாக இல்லை என்றாலும், லோகேஷ் கனகராஜ் என்று இருந்த அந்த பக்கம், வைரல் யோகா என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், ரசிகர்கள் பலரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

அது என்ன வைரல் யோகா?

வைரல் யோகா என லோகேஷ் கனகராஜே பெயர் மாற்றம் செய்தாரா அல்லது அவரது பக்கம் ஹேக் செய்யப்பட்டதா என பலரும் மாறி மாறி தகவல்களை பரப்பிய நிலையில், இந்த தகவல் லோகேஷ் காதுகளுக்கே சென்றுவிட்டது. அவரின் நெருங்கிய செய்தி தொடர்பாளர்கள் மூலம் இந்த தகவலைத் தெரிந்துகொண்ட லோகேஷ் கனகராஜ், ஒரு டிவிஸ்ட் வைத்துள்ளார்.

பேஸ்புக் கணக்கே இல்லையாம்!

ஹேக் செய்யப்பட்டதாக சொல்லப்படும் லோகேஷ் கனகராஜின் பேஸ்புக் பக்கம் அவருடைய சொந்த கணக்கே இல்லையாம். அவர் டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மட்டுமே கணக்கு வைத்திருக்கிறார் எனவும், தன்னிடம் வேறு எந்த சோசியல் தளங்களிலும் கணக்கு இல்லை எனவும் அறிவித்துள்ளார்.

பேஸ்புக் பக்கம் அவருடையது என நம்பி அதில் வரும் அப்டேட்டுகளை வேக வேகமாக சென்று பார்த்து வரும் பல ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அநேகமாக டிவிட்டரில் லோகேஷ் கனகராஜ் வெளியிடும் பதிவுகளை அப்படியே காப்பி செய்து உடனடியாக பேஸ்புக்கில் குறிப்பிட்ட கணக்கை வைத்திருக்கும் நபர்கள் வெளியிட்டு வந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

தலைவர் 171

லோகேஷ் கனகராஜ் ஒரு படத்தில் பணிபுரியும்போது தனது கவனம் சிதறிவிடக்கூடாது என்பதால் சமூக வலைத்தளங்களிலிருந்து வெளியேறிவிடுவார். அந்த வகையில் தற்போது அவர் ரஜினிகாந்தை இயக்கும் புதிய படமான ரஜினி 171 படத்தை எழுதும் பணியில் மும்முரமாக இருக்கிறார். விரைவில் ப்ரீ புரொடக்ஷன் பணிகளில் கவனம் செலுத்த இருக்கிறார்.

ரஜினிகாந்த் பிறந்த நாளான நேற்று, அவர் நடிக்கும் லால் சலாம், தசெ ஞானவேலின் வேட்டையன் உள்ளிட்ட படங்களின் அப்டேட்டுகள் வெளியாகின. மேலும் ரஜினிகாந்தின் அடுத்த பட அப்டேட்டும் வெளியாகும், லோகேஷ் கனகராஜ் வெளியிடுவார் என நினைத்து அவரது சமூக ஊடக கணக்குகளுக்கு அடிக்கடி சென்று பார்வையிட்டு வந்துள்ளனர் ரசிகர்கள். ஆனால் அவரது பெயரில் வேறொருவர் இந்த கணக்கை தவறானதாக பயன்படுத்தி வந்திருக்கிறார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

ஷூட்டிங் எப்போ?

ரஜினிகாந்த் தற்போது தலைவர் 170 படத்தின் கடைசி கட்ட ஷெட்யூலில் இருக்கிறார். அவரது கால்ஷீட் இன்னும் 1 மாதத்துக்கு தேவைப்படுவதாக படக்குழுவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பிப்ரவரி மாதம் 15ம் தேதிக்கு பிறகு ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் படத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது. அநேகமாக முதல் 10 நாட்கள் ஷெட்யூல் போட்டு சில காட்சிகள் எடுக்கப்படும் என்றும், அதன் பிறகு மற்றவர்களுக்கான காட்சிகள் எடுக்கப்பட்டு, ரஜினிகாந்துக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஏப்ரல் மாதத்தில் முழுமையாக படத்தை முடித்துவிடுவார் எனவும், அதன் பிறகு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு 3 முதல் 4 மாதங்கள் தேவைப்படும் எனவும் 2024 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த படத்தை வெளியிட வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரே வருடத்தில் 3 படங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் லால் சலாம் திரைப்படம் வரும் ஜனவரி 2024ல் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்து தலைவர் 170 திரைப்படம் விநாயகர் சதுர்த்தி அல்லது சரஸ்வதி பூஜையின் போது வெளியாக வாய்ப்பிருக்கிறது. இதனால் தீபாவளிக்கு லோகேஷ் திரைப்படம் வெளியாகுமா அல்லது பொங்கலுக்கு தள்ளிப் போகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Updated On: 13 Dec 2023 6:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...