ஃபைட் கிளப் வசூல் எவ்வளவு தெரியுமா?

அப்பாஸ் ரஹ்மத் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள திரைப்படம் ஃபைட் கிளப். இந்த படத்தில் நாயகனாக உறியடி விஜயகுமார் நடித்துள்ளார். இளைஞர்களின் வாழ்க்கையில் போதைப் பொருளும், அதனைக் கொண்டு வந்த அரசியல்வாதிகளின் விளையாட்டும் நுழைந்தால், பெருங்கனவுடன் இருக்கும் இளைஞர்களின் எதிர்காலம் என்ன ஆகும் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
டீசர் வெளியானபோதே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படம் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், படத்தின் மீதான விமர்சனங்கள் படத்துக்கு கூடுதல் வரவேற்பை பெற்றுத் தந்துள்ளன. காரணம் இது இளைஞர்களுக்குரிய படம் என்பதை மீண்டும் மீண்டும் பல்வேறு விமர்சனங்களும் தெரிவித்துள்ள நிலையில், இளைஞர்கள் இந்த படத்தைக் காண திரையரங்குகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.
இந்த படத்தின் முதல்நாள் வசூல் அனைவரும் எதிர்பார்த்த வகையில், சிறப்பாகவே இருந்துள்ளது. முதல் நாளே 1 கோடி ரூபாய் வசூலைத் தொட்டுள்ளது. உறியடி விஜய்குமாருக்கு இது நடிகராக இரண்டாவது படம் மட்டுமே. இந்த படத்தின் பட்ஜெட் உள்பட மொத்த செலவே 6 கோடி ரூபாய் அளவுக்குதான் இருக்கும் என்கிற நிலையில், முதல்நாளே 1 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பது நல்ல நிலைதான் என்கிறார்கள்.
சனி, ஞாயிறுகளில் இந்த படம் கூடுதல் வசூலை அள்ளும் எனவும், எப்படியும் பட்ஜெட்டைத் தாண்டி வசூல் கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கை படக்குழுவுக்கு இருக்கிறது.
நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் Cast & Crew
திரைப்படம் : ஃபைட் கிளப் (2023)
வகை : Genre
மொழி : தமிழ்
ரிலீஸ் தேதி : டிசம்பர் 15
இயக்குநர் : அப்பாஸ் ரஹ்மத்
தயாரிப்பாளர் : லோகேஷ் கனகராஜ்
திரைக்கதை : அப்பாஸ் ரஹ்மத்
கதை : அப்பாஸ் ரஹ்மத்
நடிப்பு : உறியடி விஜய், சரவணவேல், அவினாஷ் ரகுதேவன்
இசை : கோவிந்த் வசந்தா
ஒளிப்பதிவு :
எடிட்டிங் :
தயாரிப்பு நிறுவனம் : ஜி ஸ்குவாட்
ஃபைட் கிளப் படம் எப்படி இருக்கு? | Fight Club Padam Eppadi Irukku ?
ஆக்ரோஷ இளைஞராக வரும் விஜய்குமார், அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கல்லூரிகளுக்கிடையேயான மோதல், பேருந்துகளிலும் சாலைகளிலும் நடக்கும்போது நாம் செய்தியாக கடந்து போயிருப்போம். அதனை கண்முன்னே திரையிட்டு காண்பித்திருக்கிறார் இயக்குநர். படத்தில் வரும் நடிகர்கள் அனைவருமே அறிமுகம் இல்லாத முகம் என்றாலும், அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் இருப்பதை காண முடிகிறது. அந்த அளவுக்கு தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
கேமரா மேன் பிரிட்டோவின் உழைப்பு நிச்சயம் படத்தில் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. பழவேற்காட்டின் அழகை காட்டிய அவர்தான், கொலைவெறி ஊறிய களத்தையும் காண்பித்திருக்கிறார் என்பது ஆச்சர்யப்பட வைக்கிறது. இரண்டிலும் தனது உழைப்பை போட்டிருக்கிறார். கோவிந்த் வசந்தாவின் இசை படம் முழுக்க பேசப்படுகிறது. தமிழில் தரமான ஒரு இசையமைப்பாளராக உருவாகியுள்ளார் கோவிந்த்.
விறுவிறுப்பான திரைக்கதை, மேக்கிங் நம்மை படத்தை ரசிக்க செய்தாலும், சுத்தி சுத்தி ஒரே இடத்தை, ஒரே விசயத்தைதான் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள் போல என்ற எண்ணம் இரண்டாம் பாதியில் வந்து வந்து செல்கிறது. அடிக்கிறாங்க அடிக்கிறாங்க அடிச்சிட்டே இருக்காங்க படம் முழுக்க அடிக்கிறாங்க...
ஃபைட் கிளப் கதைச் சுருக்கம் | Fight Club Story Explained
குத்துச்சண்டை வீரரான பெஞ்சமினுக்கு தன் பகுதியில் இருக்கும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை விளையாட்டு வீரர்களாக ஜொலிக்கச் செய்யவேண்டும் என்பது ஆசை. ஆனால் அவர்களை வைத்து போதைப் பொருள் வியாபாரத்தை நடத்தி வரும், அரசியல்வாதி கிருபா, பெஞ்சமினின் தம்பியைக் கைக்குள் போட்டுக் கொண்டு, அண்ணனையோ கொன்று விட, பின் பெஞ்சமின் தம்பியான ஜோசப் ஏமாற்றப்படுகிறார். இதனால் ஜோசப், கிருபாவை பழி வாங்க துடிக்கிறார். ஆனால் கிருபா அரசியல்வாதியாக இருப்பதால், ஜோசப் வேறொரு திட்டத்தைக் கையிலெடுக்கிறார். அதுதான் நம் கதையின் நாயகனான விஜய்குமாரை வைத்து பழி வாங்குவது. விளையாட்டில் சாதிக்க நினைத்த செல்வம் (விஜய்குமார்) என்ன ஆனார் என்பதே கதை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu