/* */

Kavingar Kannadasan-கண்ணதாசன் என்றொரு கவி இன்னும் வாழ்கிறான்..!

கவிஞர் என்றாலே கண்ணதாசன் தான் என்ற ஒரு காலம் இருந்தது. அவரது பாடல்கள் சாகா வரம் பெற்றவை.

HIGHLIGHTS

Kavingar Kannadasan-கண்ணதாசன் என்றொரு கவி இன்னும் வாழ்கிறான்..!
X

kavingar kannadasan-கவிஞர் கண்ணதாசன் 

Kavingar Kannadasan

வாழும்போது வரலாறு படைத்துக்கொண்டிருக்கும் மாமனிதர்கள் இறந்த பின் மரணத்தையும் வென்று, மக்கள் மனதில் ஈரமான நினைவுகளாக தினம் தினம் உலா வந்துகொண்டிருக்கின்றனர். அப்படி உலா வந்துகொண்டிருக்கின்ற உன்னத கவிஞன் தான் கண்ணதாசன்.

காலம்கடந்தும் மறக்க முடியாத பல பாடல்களைக் கொடுத்து, மக்களின் உணர்வுகளோடு கலந்துவிட்ட கண்ணதாசனின் நினைவு நாள் அக்டோபர் 17ம் தேதியாகும். அவரைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம் வாங்க.


Kavingar Kannadasan

சிவகங்கை மாவட்டம் சிறுகூடல் பட்டியில் பிறந்தவர் கண்ணதாசன். இவரது இயற்பெயர் முத்தையா. சாத்தப்பனார் - விசாலாட்சி தம்பதிக்கு 8-வது பிள்ளையாக பிறந்தார் கண்ணதாசன். தன் திறமையை வளர்த்துக்கொள்ள திரைப்படங்கள் தான் சிறந்தது என முடிவு செய்த கண்ணதாசன், திரைப்பட வாய்ப்புகளை தேடிப் போனார்.

16 வயதில் வீட்டுக்குத் தெரியாமல் சென்னைக்கு கிளம்பி வந்தார் கண்ணதாசன். சந்திரசேகரன் என்று புனைப் பெயர் சூடிக்கொண்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புத் தேடினார். ஆனால், சென்னை அவருக்கு பல கொடுமையான அனுபவங்களைத் தந்தது.

ஒரு நிறுவனத்தில் உதவியாளராக வேலை கிடைத்தது. அந்நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே கதைகள் எழுதத் தொடங்கினார்.

Kavingar Kannadasan

கிரகலட்சுமி என்ற பத்திரிகையில் ”நிலவொளியிலே” என்ற அவரது முதல் கதை வெளிவந்தது. முதல் கதையை அச்சில் கண்ட உத்வேகத்தில், இன்னும் தீவிரமாக எழுதத் தொடங்கினார்.

ஒரு நண்பரின் பரிந்துரையோடு, புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த திருமகள் என்ற பத்திரிகையில், "ப்ரூப் திருத்துனர்" வேலை கேட்டார். நேர்க்காணலில், பத்திரிகையின் அதிபர், உங்கள் பெயரென்ன? என்று கேட்டார். அப்போது அந்த நொடியில் அவர் அவரது பெயரை ”கண்ணதாசன்” என்று பதில் சொன்னார். முத்தையா, கண்ணதாசனாக மாறியது அந்தத் தருணத்தில் தான்.

கண்ணதாசனின் திறமையால் ஒருநாள் இதழுக்கு தலையங்கம் எழுதச் சொன்னார். இந்திய தேசிய ராணுவம் பற்றி கண்ணதாசன் எழுதிய தலையங்கம், பத்திரிகை அதிபரை பெரிதும் கவர்ந்தது. உடனடியாக பத்திரிகையின் ஆசிரியராக பணி அமர்த்தப்பட்டார். அப்போது அவருக்கு வயது 17.


பிறகு திரை ஒலி, சண்டமாருதம், தென்றல், தென்றல் திரை உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றினார். கண்ணதாசன் என்ற பத்திரிகையை அவரே நடத்தினார். அனைத்து பத்திரிகைகளிலும் அவரது கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் வெளிவந்தன.

கவிதைகள் மூலம் அடையாளம் கிடைத்த பிறகு, திரைப்படங்களுக்கு பாடல் எழுத வேண்டும் என்ற எண்ணம் கண்ணதாசனுக்கு ஏற்பட்டது. சண்டமாருதம் பத்திரிகை நிறுத்தப்பட்ட பிறகு, மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் கண்ணதாசனும் சேர்க்கப்பட்டார். கதை இலாகா சந்திப்புகளில் கருணாநிதியின் நட்பு கிட்டியது. அதன் வழி திராவிட இயக்கத்தின் மீது ஆர்வம் அதிகமானது.

Kavingar Kannadasan


பிறகு பத்திரிகை பணிகளை உதறிவிட்டு முழுமூச்சாக திரைப்படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்புத் தேடினார். ஜூபிடர் நிறுவன தயாரிப்பில், தான் இயக்கிய கள்வனின் காதலி படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கொடுத்தார் கே.ராம்நாத். இந்த பாடல் தான் கண்ணதாசனின் முதல் பாடல். அதன்பிறகு, அடுத்த 30 ஆண்டுகள் திரைத்துறையை முற்றுமுழுதாக ஆளுமை செய்தார் கண்ணதாசன்.

வாய்ப்பு தேடிப்போன அவருக்கு பல அவமானங்களையும், அனுபவங்களையும் கற்றுக்கொடுத்தது, திரைத்துறை. ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்த கன்னியின் காதலி என்கிற திரைப்படத்தில் இடம்பெறும் ‘கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்கிற பாடல் தான் கண்ணதாசன் எழுதிய முதல் பாடலாகும். முதல் பாடலிலேயே உடைந்துபோன உள்ளங்களுக்கான ஆறுதலான வரிகள் மற்றும் பிரிவின் துயரத்தை பேசியிருந்தது இந்த பாடல்.

கதை, வசனம், தயாரிப்பு என சகல துறைகளிலும் இயங்கினார் இசையமைப்பாளர்கள் எல்லாம் தங்கள் இசையில் அவருடைய பாடல் இடம் பெறுவதை பெருமையாகக் கருதினர்.


Kavingar Kannadasan

கண்ணதாசனும், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் கூட்டணி சேர்ந்தாலே அந்த பாடல் ஹிட் என சொல்லும் அளவுக்கு இவர்கள் இருவரும் கூட்டணியில் வெளியான பாடல்கள் அனைத்தும் காலம் கடந்து கொண்டாடப்படுகின்றன. இளமை ததும்பும் காதல் பாடல்களாக இருந்தாலும் சரி, இதயம் உருகும் சோகப் பாடல்களாக இருந்தாலும் சரி இவர்கள் இருவரின் காம்போவில் வந்தாலே அப்பாடல்களுக்கு தனி மவுசு உண்டு.

இவ்வாறு தமிழர்களின் உணர்வுகளில் கவிதையாக கலந்துவிட்ட கண்ணதாசன், உடல்நலக்குறைவு காரணமாக 1981-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந் தேதி அமெரிக்காவின் சிக்காகோ நகரில் உயிரிழந்தார். மறைந்தாலும் தன் பாடல் வரிகளால் மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம்பிடித்திருக்கும் கண்ணதாசன் ஒரு மகா கவிஞன் என்பதற்கு அவர் எழுதிய பாடல்களே சாட்சி.

தொடக்கத்தில் திராவிட இயக்கத்தில் தீவிரமாக இயங்கிய கண்ணதாசன் பிற்காலத்தில் இந்து மதத்தில் பற்றுடையவரானார்.


Kavingar Kannadasan

கண்ணதாசனுக்கு மூன்று மனைவியர், 15 பிள்ளைகள். கண்ணதாசன் எழுதிய பெரும்பாலான பாடல்கள் அவரின் அனுபவத்தில் விளைந்தவை. இன்றைக்கும் பலருக்குத் தாலாட்டாக, பலரின் துயரங்களுக்கு ஆறுதலாக, மனம் தொய்ந்து கிடக்கும் பலருக்கு உத்வேகமாக இருப்பவை கண்ணதாசனின் பாடல்கள்.

36 ஆண்டுகள் கடந்தும் கண்ணதாசன் மறைந்தாலும் இன்னும் நம் மத்தியில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார், அவரது பாடல் வரிகளாக.

Updated On: 1 Nov 2023 6:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  3. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  4. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  5. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  6. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  7. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...
  8. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அளவிலான தீ, தொழில் பாதுகாப்பு குழுக் கூட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!