/* */

Tamil TV Shows: தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் அல்லது தமிழ் சீரியல் கடந்து வந்த பாதை

பெரும்பாலான தமிழ் மொழித் தொடர்கள் குடும்ப சார்ந்த கதைக்களத்துடன் தயாரித்து ஒளிபரப்பு செய்து வருகின்றது.

HIGHLIGHTS

Tamil TV Shows: தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் அல்லது தமிழ் சீரியல் கடந்து வந்த பாதை
X

தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் அல்லது தமிழ் சீரியல் உலக நாடுகளில் வாழும் தமிழ் மக்களால் அதிகம் பார்க்கப்படுகின்றன. பெரும்பாலான தமிழ் மொழித் தொடர்கள் குடும்ப சார்ந்த கதைக்களத்துடன் தயாரித்து ஒளிபரப்பு செய்து வருகின்றது. அதே தருணம் நகைச்சுவை, காதல், திகில், பரபரப்பூட்டும், மர்மம், வரலாறு போன்ற வகைகளிலும் தயாரிக்கப்படுகிறது.

தமிழ் மொழியில் முதல் முதலில் 1980-ஆம் ஆண்டுகளில் தொடர்கள் தயாரிக்கப்பட்டு தூர்தர்ஷன் என்ற அலைவரிசையில் ஒளிபரப்பானது. அதை தொடர்ந்து 1990-ஆம் ஆண்டுகளில் பெரும்பாலான தொடர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே ஒளிபரப்பானது. தற்பொழுது சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ், ஜெயா தொலைக்காட்சி, சன் லைப், வசந்தம் தொலைக்காட்சி, பாலிமர் தொலைக்காட்சி, சக்தி தொலைக்காட்சி, ராஜ் தொலைக்காட்சி, பொதிகை தொலைக்காட்சி போன்ற பல தொலைக்காட்சிகள் தமிழில் இயக்குகின்றன.

தமிழ் தொலைக்காட்சியில் வள்ளி என்ற தொடர் அதிக அத்தியாயங்களில் ஒளிபரப்பான முதல் தொடர் ஆகும். இந்த தொடர் டிசம்பர் 7, 2012-ஆம் ஆண்டு முதல் 14 செப்டம்பர் 2019 வரை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 1961 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

தமிழ்நாட்டில் 1980களில் இருந்து தொலைக்காட்சித் தொடர்கள் ஒளிபரப்ப ஆரம்பமானது. தமிழ் தொடர்கள் முதலில் மேடை நாடகங்களை எடுத்து 1980–1990 வரை காலங்களில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூர்தர்ஷன் என்ற அலைவரிசையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து 1986-ஆம் ஆண்டில் ஏவிஎம் மற்றும் கவிதாலயா போன்ற தயாரிப்பு நிறுவனங்களால் குடும்ப சார்ந்த கதைக்களத்துடன் குறுந்தொடர்கள் தயாரித்து ஒளிபரப்பப்பட்டன.

தற்காலத்தில் உலகம் முழுவதும் தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள் மூன்று பிரிவுகளின் கீழ் பிரிக்கப்பட்டு பகல் நேரத்தொடர்கள் (11:00-15:00), மாலை நேரத்தொடர்கள் (18:00-19:59) மற்றும் இரவுத்நேர தொடர்கள் (பிரதான நேரம்) (20:00-23:00) என்ற பிரிவில் ஒளிபரப்பாகி வருகின்றது. இன்று பல அலைவரிசைகள் நாடகத் தொடர்களை ஒளிபரப்பும் போது இலக்கு அளவீட்டுப் புள்ளியை அதிகமாகப் பெறுவதற்குத் தொலைக்காட்சி அலைவரிசைகள் விரும்புகின்றன.

தமிழ் தொடர்கள் முதலில் மேடை நாடகங்களை எடுத்து 1980–1990 வரை காலங்களில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூர்தர்ஷன் என்ற அலைவரிசையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து 1986 ஆம் ஆண்டில் ஏவிஎம் தயாரிப்பில் 'ஒரு மனிதனின் கதை', 'நேற்றைய மனிதர்கள்' (1988), நாணயம் (1991) மற்றும் பிரபல இயக்குனர் பாலச்சந்திரன் என்பவர் 'மின் பிம்பங்கள்' என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் இயக்கிய 'ரயில் சிநேகம்' (1989) போன்ற சில தொடர்கள் தூர்தர்ஷன் என்ற அலைவரிசையில் ஒளிபரப்பானது.

1993 ஆம் ஆண்டில் சன் தொலைக்காட்சி பொதிகை தொலைக்காட்சி ஆகியவை ஆரம்பிக்கப்பட்டன. அதை தொடர்ந்து 1994 ஆம் ஆண்டு ராஜ் தொலைக்காட்சியும் மற்றும் 1994 இல் 'கோல்டன் ஈகிள் கம்யூனிகேஷன்' (தற்பொழுது விஜய் தொலைக்காட்சி) போன்ற பொழுதுபோக்கு அலைவரிசைகள் ஆரம்பமானது. இந்த தொலைக்காட்சிகள் வருகைக்கு பிறகு நாகாவின் மர்மதேசம் (1995–1998), பாலச்சந்திரனின் 'காதல் பகடை' (1996–1998), ரமணி விஸ் ரமணி (1998), பிரேமி (1999), காசளவு நேசம் (1999-2000) மற்றும் ஏவிஎம் இன் தயாரிப்பில் 'முத்துக்கள்' (1995), 'எனக்காகவா' (1995), 'நிம்மதி உங்கள் சாய்ஸ்' (1997), 'ஆட்சி இன்டெர்னஷனல்' (1998), 'ஒரு பெண்ணின் கதை' (1998) மற்றும் நடிகை ராதிகா சரத்குமார் தயாரித்து மற்றும் நடித்த சித்தி (1999-2001) போன்ற பல தொடர்கள் ஒளிபரப்பானது.

இந்த ஆண்டுகளில் எல்லா வீடுகளிலும் தொலைக்காட்சி பேட்டி சென்று அடைந்த காரணத்தால் தமிழ்த் தொலைக்காட்சி துறை மிகவும் பிரபலமானது. 2000 ஆண்டுகளில் மக்கள் தொலைக்காட்சி (2006) கலைஞர் தொலைக்காட்சி (2007), மெகா தொலைக்காட்சி (2007), ஜீ தமிழ் (2008) மற்றும் வசந்த் தொலைக்காட்சி (2008) போன்ற பல பொழுதுபோக்கு அலைவரிசைகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டது.

2000 ஆம் ஆண்டில் குட்டி பத்மினியின் கிருஷ்ணதாசி (2000-2002),கவியாஞ்சலி (2001–2002), மெட்டி ஒலி (2002-2006), கோலங்கள் (2003-2009) கல்கி (2004-2007), காதலிக்க நேரமில்லை (2007-2008) போன்ற பல நெடும் தொடர்கள் ஒளிபரப்பானது.

நடிகை ராதிகா நடித்த சித்தி (1999-2001) என்ற தொடர் இந்திய தொடர்களில் அதிகம் பார்க்கப்பட்ட தொடர்களில் ஒன்றாகும், மேலும் அந்த நேரத்தில் அதிகம் பார்த்த தமிழ் தொடரும் இதுவாகும்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி (2002-2006) என்ற தொடர் மிகப்பெரிய மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான வெற்றித் தொடர் ஆகும். இந்த தொடர் பொதுவாக 48.3 டிஆர்பி பெற்றுள்ளது. இந்த தொடரில் நடித்த கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசால் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டில் விகடன் ஒளித்திரை என்ற நிறுவனம் தயாரித்து நடிகை தேவயானி நடித்த கோலங்கள் என்ற தொடர் அதிக அத்தியாயத்தில் ஒளிபரப்பான முதல் தமிழ் தொடர் ஆகும். இந்த தொடர் 24 நவம்பர் 2003 முதல் 4 டிசம்பர் 2009 வரை சன் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி 1533 அத்தியங்களுடன் நிறைவு பெற்றது.

மாயாவி என்ற தொடர் முதல் இந்திய மற்றும் ஆசிய முப்பரிமாண தொலைக்காட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் 2006ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இது இந்தி, தெலுங்கு மொழி, மலையாளம், மராத்திய மொழி, குஜராத்தி, கொரிய மொழி, மாண்டரின் மொழி, மற்றும் ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு பல நாடுகளில் ஒளிபரப்பான முதல் தமிழ் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டுகளில் பல பிரபல வெள்ளித்திரை நடிகைகளான மீனா, கௌசல்யா, தேவயானி, குஷ்பூ, சங்கவி, சிம்ரன், மற்றும் கௌதமி போன்ற நடிகைகள் சின்னத்திரையில் அறிமுகமான ஆண்டு ஆகும்.

2010 ஆம் ஆண்டுகளில் நாதஸ்வரம் (2010-2015), அழகி (2011-2016),, சரவணன் மீனாட்சி (2011-2013), பொம்மலாட்டம் (2012-2016), தெய்வமகள் (2013-2018), கல்யாணம் முதல் காதல் வரை (2014-2017), நந்தினி (2017-2018) போன்ற பல வெற்றி தொடர்கள் ஒளிபரப்பானது. இந்த காலப்பகுதியில்டிஆர்பி என்பது பரவலாக அறியப்பட்ட வார்த்தையாகும்.

2010 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை பாலிமர் தொலைக்காட்சி, ராஜ் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, ஜீ தமிழ், ஜெயா தொலைக்காட்சி, கலர்ஸ் தமிழ், புதுயுகம் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி மற்றும் வேந்தர் தொலைக்காட்சி போன்ற பல அலைவரிசைகளில் இந்தி மொழி மாற்றுத் தொடர்கள் ஒளிபரப்பாகி நேரடி தமிழ்த் தொடருக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது. அதை எதிர்த்து பல சின்னத்திரை நடிகர்கள் போராட்டம் மேட்கொண்டனர். அதன் விளைவாக 2015 ஆம் பின்பகுதியில் மொழிமாற்று தொடர்களின் ஆதிக்கம் சரிவடைந்து பல தரமான நேரடித் தமிழ் தொடர்கள் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பாகிறது.

2017 ஆம் ஆண்டு காலத்திற்கு பிறகு ஒளிபரப்பாகும் பல தொடர்கள் தெலுங்கு, கன்னடம், மராத்தி, வங்காளம் மற்றும் ஹிந்தி தொடர்களின் மறு ஆக்கத் தொடர்கள் ஆகும். விஜய் தொலைக்காட்சி மற்றும் ஜீ தமிழ் போன்ற சேனல்கள் தமது சகோதர சேனல்களில் ஒளிபரப்பான வெற்றி தொடர்களை மறு ஆக்கம் செய்கின்றன.

Updated On: 27 Nov 2023 7:48 AM GMT

Related News