விஜய்யின் GOAT போஸ்டர்: ஒளிந்துள்ள ரகசியங்கள்..!

விஜய்யின் GOAT போஸ்டர்: ஒளிந்துள்ள ரகசியங்கள்..!
X
விஜய்யின் GOAT போஸ்டர்: ஒளிந்துள்ள ரகசியங்கள்..!

தளபதி விஜய்யின் GOAT பட போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் விஜய்யின் 68வது படமான GOAT - தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் பொங்கல் ஸ்பெஷல் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பொங்கல் வாழ்த்துகளுடன் வெளியான இந்த போஸ்டரில் விஜய்யுடன் 3 பிரபலமான நடிகர்களும் இருப்பதால் இது ஒரு மல்டி ஸ்டாரர் மூவி என்பது உறுதியாகியுள்ளது.

போஸ்டரில், விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் மெஷின் கன் உடன் செம்ம கெத்தாக போஸ் கொடுத்துள்ளனர். 'Meet The GOAT squad' என்ற கேப்ஷனுடன் வெளியான இந்தப் போஸ்டரில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் சிரித்தபடி கெத்து காட்டியுள்ளனர்.

இதனால், GOAT படத்தில் இந்த நால்வருமே நண்பர்களாக நடித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தில் பணம் கொள்ளையடிக்க திட்டம்போடும் நான்கு பேருடன் அஜித்தும் ஐந்தாவதாக இணைவார். வெங்கட் பிரபு இயக்கத்தில் மங்காத்தா படம் அஜித்தின் திரைப்பட வரலாற்றிலேயே மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற படமாக அமைந்தது.

மங்காத்தா படமே சமீப கால வெற்றிப்படங்களில் வரிசையில் முதலில் வந்து நினைவில் நிற்கும். அதேபோல இங்கே GOAT படத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் நான்கு பேரும் ஒரு கூட்டணியாகவே நடித்துள்ளதை பார்க்க முடிகிறது. இதனால் GOAT செம்ம மாஜாவான மூவியாக இருக்கும் விஜய் ரசிகர்கள் கமெண்ட்ஸில் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

போஸ்டரை பார்த்த ரசிகர்கள், “விஜய்யின் GOAT போஸ்டர் ரஜினியின் வேட்டையன் போஸ்டரை மிஞ்சிவிட்டது”, “பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் விஜய்யுடன் சேர்ந்து நடிப்பது செம்ம மாஸ்ஸா இருக்கும்”, “GOAT படம் செம்ம சூப்பரா இருக்கும்னு தெரியுது” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த போஸ்டர் வெளியான சில மணி நேரங்களிலேயே டிவிட்டரில் டிரெண்டாகிவிட்டது. தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற ஹேஷ் டேக் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

GOAT படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கீதை படத்துக்கு பிறகு தளபதி படத்துக்கு இரண்டாவது முறையாக இசை அமைக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. யுவனின் பாடலில் விஜய்யின் நடனத்தைக் காண ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் புத்தாண்டில் வெளியான நிலையில், தற்போது மேலும் போஸ்டர் வெளியிட்டு ரசிகர்களைக் குதூகலப்படுத்தியுள்ளனர்.

கோட் படத்திலிருந்து முதல் பாடல் வரும் காதலர் தினத்தில் வெளியாகும் என தகவல் வந்துள்ள நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி மாத இறுதியில் நிறைவடையும் என்றும், அதன் பிறகு கிராபிக்ஸ் காட்சிகளுக்காக 3 மாதங்கள் முதல் 4 மாதங்கள் வரை எடுத்துக் கொள்வார்கள் என்று தெரிகிறது. இதனால் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று தகவல் பரவி வருகிறது.

Tags

Next Story
ai applications in future