/* */

நீங்கள் மன்னர்கள்..ஆணையிடுங்கள்...! லியோ விழாவில் தளபதி விஜய்!

ஆணையிடுங்கள்...! லியோ விழாவில் தளபதி விஜய் அட்டகாச பேச்சு!

HIGHLIGHTS

நீங்கள் மன்னர்கள்..ஆணையிடுங்கள்...! லியோ விழாவில் தளபதி விஜய்!
X

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவரும் படம் லியோ. இந்த படத்தில் விஜய் ஜோடியாக திரிஷா, நண்பராக கௌதம், ராமகிருஷ்ணன், வளர்ப்பு தந்தையாக மன்சூர் அலிகான், முக்கிய கதாபாத்திரங்களில் அர்ஜூன், சஞ்சய் தத், சாண்டி, மிஸ்கின் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் வசூல் 600 கோடி ரூபாயை நெருங்கி வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விழா எடுத்தது செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ். இந்த விழா நவம்பர் 1ம் தேதி நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் படத்தில் நடித்திருந்த, பணிபுரிந்த அனைவரும் பங்கேற்றிருந்தனர்.

இவ்விழாவில் தளபதி விஜய் பேசியதாவது:

“என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா... நண்பி. இவ்ளோ நாள் நான் தான் உங்கள என் நெஞ்சுக்குள்ள வச்சுருகேன்னு நினைச்சேன். இப்போது தான் உங்கள் இதயத்தில் எனக்கு ஒரு பெரிய இடத்தைக் கொடுத்து உள்ளீர்கள் என்பதை உணர்ந்து கொண்டேன். என்னோட தோலை செருப்பாக தேய்த்து கொடுத்தாலும் உங்கள் அன்புக்கு ஈடாகாது. நான் உங்களுக்கு என்றும் உண்மையாக இருப்பேன். சமீப காலமாக சமூக வலைதளங்களில் உங்களது கோபம் அதிகமாக உள்ளது. ஏன்? இவ்வளவு கோபம் உடம்புக்கு நல்லதில்லை. அதெல்லாம் வேண்டாம் நண்பா.

நாம் யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். அது நம்முடைய வேலையுமில்லை. நமக்கு நிறைய வேலை இருக்கிறது.ஒரு காட்டுக்கு ரெண்டு பேர் வேட்டைக்கு போறாங்க. அந்த காட்டுல மான், மயில், முயல், இந்த காக்கா, கழுகு. காடுன்னு இருந்தா இதெல்லாம் இருக்கும் தானே. அதுக்கு சொன்னேன் பா. ஒருத்தர் வில் அம்பு எடுத்து போறார். உன்னொருத்தர் ஈட்டி எடுத்து போறார். வில் எடுத்து போனவர் முயல அடிச்சி தூக்கிட்டாரு. ஈட்டி வைத்திருந்தவர் யானைய குறி வெச்சு மிஸ் பண்ணிட்டார். ரெண்டும் பேரும் ஊருக்கும் திரும்பி வருவாங்க. இதுல யாருக்கு வெற்றி. அந்த யானைய குறி வைத்தவர் தான் வெற்றி அடஞ்சவர்.ஏன்னா, நம்மால் எதில் எளிதாக வெல்ல முடியுமோ அதை செய்வது வெற்றி அல்ல. எது முடியாதோ அதை செய்வது தான் வெற்றி. முயற்சியாவது செய்ய வேண்டும். பெரிதினும் பெரிது கேள். ஆசைப்பட வேண்டும். அதில் என்ன தப்பு இருக்கு.படத்துல வர பாட்டுல ‘விரல் இடுக்குல தீ பற்றணும்னு’ எழுதியிருக்காங்க அத பேனா என்று எடுத்துக்கொள்ளலாம்.

அதேபோல ‘பத்தாது பாட்டில்’ என்று எழுதியிருக்கிறார்கள். அதை ஏன் சரக்கு என எடுத்துக் கொள்ள வேண்டும். கூல் என்று எடுத்துக் கொள்ளலாம் இல்லையா?. இப்படியான மழுப்பலான கதையெல்லாம் சொல்லி நான் எஸ்கேப் ஆக தேவையில்லை. தயவு செய்து, சினிமாவை சினிமாவாக பாருங்கள். பள்ளி கல்லூரி போகிற வழியில் ஒயின் ஷாப் இருக்கு. ரெண்டு ரவுண்டு போட்டுவிட்டா ஸ்கூலுக்கு போகிறார்கள்.ஒரு முறை ஏவிஎம் சரவணன் சார், வடபழனி மெயின் ரோட்டுல கார்ல போனப்போ சிக்னல்ல இருந்த ஒரு அம்மாவுக்கு உதவி செய்திருக்கார. அந்த அம்மா உடனே நீ நல்லா இருப்ப எம்.ஜி.ஆர்-ன்னு சொல்லி இருக்காங்க. அந்த காலத்துல யார் அள்ளி கொடுத்தாலும் எம்.ஜி.ஆர் அவர்களா தான் இருக்கும். அப்படின்னு பேர். நாம யாரையும் ஒப்பிட்டு பேசல. நாம அவ்வளவு பெரிய ஆளும் இல்ல. ஆனா, நல்ல விஷயத்த எடுத்துக்கலாம். அந்த வகையில எனக்கு ஒரு குட்டி ஆசை. எதிர்காலத்துல எங்க நல்லது நடந்தாலும் அதை நம்ம பசங்கா தான் பண்ணி இருப்பாங்க. அப்படின்னு ஒரு பேர் எடுக்கணும்னு எனக்கு ஒரு ஆசை.

சரி, லியோவுக்கு வருவோம். இயக்குநர் லோகேஷ் கனகராஜை எண்ணி பெருமை கொள்கிறேன். ‘மாநகரம்’ நம்மள பாக்க வெச்ச. ‘கைதி’ எல்லாரையும் பாக்க வெச்ச. ‘விக்ரம்’ இந்தியாவையே பாக்க வெச்ச. இப்போ லியோ. இன்னும் ஹாலிவுட் மட்டும் தான் பாக்கி இருக்குன்னு நினைக்குறேன். உன்ன நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு. 20 வயசுல ஹீரோயின் ஆகுறது பெருசு இல்ல. 20 வருஷமா முன்னணி ஹீரோயினா இருக்குறது தான் பெருசு. நம்ம இளவரசி குந்தவை (திரிஷா) சூப்பர். சஞ்சய் தத் சார், அர்ஜுன் சார், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் சார்னு இந்த படத்துல அங்கமா இருக்குற எல்லாருக்கும் எனது வாழ்த்துகள்.அட்லி, லோகேஷ், நெல்சன் எல்லாரும் நம்ம பசங்க. அவங்களை எண்ணி நான் பெருமை கொள்கிறேன். அவர்கள் மிக திறமையானவர்கள். அவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.

பாருங்க, புரட்சி தலைவர்னா ஒருத்தர் தான். நடிகர் திலகம்னா ஒருத்தர் தான். அதே மாதிரி உலக நாயகன் ஒருத்தர் தான். சூப்பர்ஸ்டார்னா ஒருத்தர் தான். தல-னா ஒருத்தர் தான். நீங்கள் மன்னர்கள். நான் உங்களுக்கு கீழ் இருக்கும் தளபதி. நீங்க ஆணையிடுங்க நான் செய்கிறேன்” என விஜய் தெரிவித்தார்.

Updated On: 2 Nov 2023 4:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  3. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  7. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  8. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  9. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்