/* */

Radish Leaves Benefits in Tamil-இதை படித்தால், முள்ளங்கிக் கீரையை இனி வீசமாட்டீங்க..!

முள்ளங்கிக் கீரையின் பயன்கள் தெரியாமல் நாம் அதை தூக்கி வீசிவிடுகிறோம். ஆனால் அதில் எண்ணற்ற பயன்கள் உள்ளன என்பதை நாம் அறிவது அவசியம் ஆகும்.

HIGHLIGHTS

Radish Leaves Benefits in Tamil-இதை படித்தால், முள்ளங்கிக் கீரையை இனி வீசமாட்டீங்க..!
X

radish leaves benefits in tamil-முள்ளங்கிக் கீரை நன்மைகள் (கோப்பு படம்)

Radish Leaves Benefits in Tamil

முள்ளங்கிக் கீரையின் நன்மைகள்

முள்ளங்கியானது குத்துச்செடி வகையைச் சேர்ந்த ஒரு வகை கிழங்காகும். முள்ளங்கிக் கிழங்கு மட்டுமல்லாமல், அதன் இலை, தண்டுகள், விதை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்ட‌வை.

பொதுவாகவே நாம் முள்ளங்கி வாங்கும்போது முள்ளங்கியின் கீரையை கழித்துவிட்டுத்தான் வியாபாரிகள் தருவார்கள். ஏனெனில் அவற்றின் நமைகளை அவர்கள் அறியமாட்டார்கள். நாமும் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், முள்ளங்கிக்கீரையில் அவ்வளவு நன்மைகள் உள்ளன. அதன் நன்மைகளை அறிவோம் வாங்க.


Radish Leaves Benefits in Tamil

நம்மில் பெரும்பாலானோர் முள்ளங்கியை மட்டும் பயன்படுத்திவிட்டு, அதன் கீரையை அலட்சியம் செய்து தூக்கி எறிந்துவிடுகிறோம். ஆனால், முள்ளங்கிக் கிழங்கைவிட அதன் கீரையில்தான் ஏராளமான‌ மருத்துவக் குணங்கள் உள்ளன‌.

முள்ளங்கியில் இருப்பதைவிட‌ ஆறு மடங்கு 'வைட்டமின் C' முள்ளங்கிக் கீரையில் இருக்கிறது. 100 கிராம் முள்ளங்கிக் கீரையில் சுமார் 28 கலோரிகள் கிடைக்கிறது. இதில் 90 சதவீதம் மாவுச் சத்தும், 0.7 சதவீதம் நார்ச்சத்தும் உள்ளன. புரோட்டீன், சுண்ணாம்புச் சத்து மற்றும் இரும்புச் சத்துக்களும் முள்ளங்கி கீரையில் உள்ளது. கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், வைட்டமின் A,B,C முதலியவையும் அதிகம் உள்ளன.

Radish Leaves Benefits in Tamil

முள்ளங்கி கீரையின் மருத்துவ பயன்கள் என்னென்ன என்று பார்ப்போம் :

1. முள்ளங்கி கீரையானது இரைப்பைக் கோளாறு, சிறுநீரக நோய்கள், மூலக்கடுப்பு, மஞ்சள் காமாலை போன்றவைகளை குணப்படுத்துகிறது.

2. முள்ளங்கி கீரைய நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகும்.

3. மலச்சிக்கலைக் குணப்படுத்தும் ஆற்றல் முள்ளங்கி கீரைக்கு உண்டு.

4. கல்லீரலில் உண்டாகும் பலவிதமான கோளாறுகளை முள்ளங்கி கீரை குணப்படுத்தும்.

Radish Leaves Benefits in Tamil

5. முள்ளங்கி கீரையானது இருதயத்திற்கு பலம் சேர்க்கும். மேலும் இதயம் பாதிக்கப்பட்டவர்கள், இதயப் படபடப்பு, இதய பலவீனம் உடையவர்கள் வாரம் ஒரு முறையாவது இக்கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

6. முள்ளங்கிக் கீரையின் சாற்றை 5 அல்லது 6 டீஸ்பூன் அளவு எடுத்து, 3 வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்துவிடும். சிறுநீர்ப்பை வீக்கம் இருந்தாலும் குணமாகும். சிறுநீர் கல்லடைப்பு, கரப்பான் என்ற தோல் வியாதிகளையும் குணமாக்கும்.


7. முள்ளங்கிக் கீரையை அடிக்கடி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பலப்படும். வைட்டமின் பற்றாக்குறைகளும் நீங்கும்.

Radish Leaves Benefits in Tamil

8. சிறுநீர் சரியாக பிரியாமல் இருப்பவர்கள் ஒரு ஸ்பூன் பார்லியை முள்ளங்கிக் கீரையுடன் சேர்த்து வேகவைத்துச் சாப்பிட்டால் நீர்க்கட்டு நீங்கி சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

9. மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், முள்ளங்கிக் கீரையின் சாற்றை 1 ஸ்பூன் எடுத்து 3 வேளைகளும் சாப்பிட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் தெரியும்.

10. நமது உடலில் அதிகம் பாதுகாத்து கொள்ள வேண்டிய ஒரு உறுப்பு கண்கள் ஆகும். கண்கள் ஆரோக்கியமாக இருக்கவும் கண் பார்வை கூர்மையாகவும் இருக்க புரதம் குறைந்த, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். முள்ளங்கி கீரையை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு கண்களில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும். கண் பார்வையை கூர்மையாக்கும்.

Radish Leaves Benefits in Tamil

11. நெடுநாட்களாக இருக்கும் மலச்சிக்கல் மூலம் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. மேலும் ஒரு சிலருக்கு அவர்களின் உடலில் மண்ணீரல், கல்லீரல் போன்றவைகளின் செயல்பாடுகளிலும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. மேற்கண்ட இரண்டு பிரச்சனைகளையும் தீர்ப்பதில் முள்ளங்கிக் கீரை சிறப்பாக செயல்படுகிறது. தினம் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை முள்ளங்கிக் கீரை சாப்பிடுபவர்களுக்கு செரிமான உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகள் நீங்கும்.

12. இருட்டில் வெளியே செல்லும் போதும், புதர்களுக்கு அருகில் குழந்தைகள் விளையாடும் போதும் சில விஷ பூச்சிகள் கடித்து விடுவதால் நமது தோலில் வீக்கம், அரிப்பு, தோல் சிவந்து போதல் போன்றவை ஏற்படுகின்றன. இந்த பூச்சிக்கடிகளால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. முள்ளங்கி கீரையையை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் பூச்சி கடி விஷம் மற்றும் ஒவ்வாமை நீங்கும்.

Radish Leaves Benefits in Tamil

13. நாம் சாப்பிடும் உணவை உடலுக்கு தேவையான சத்தாக மாற்றும் அரும்பணியை கல்லீரல் செய்கிறது. இந்த கல்லீரல் கிருமித் தொற்றால் பாதிப்படையும் போது மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. இந்த மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வேளை முள்ளங்கி கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை நோய் விரைவில் தீரும்.

Updated On: 3 Jan 2024 5:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்