/* */

Triphala Churna Benefits in Tamil-திரிபலா சூரணம் ஏன் சாப்பிடணும்?

திரிபலா என்று சொல்லும்போதே அது மூன்று பொருட்களின் சேர்க்கை என்பது நமக்கு புலனாகிவிடும். திரிபலா என்பது நமது மருத்துவத்தில் இன்றியமையாத பொருளாகும்.

HIGHLIGHTS

Triphala Churna Benefits in Tamil-திரிபலா சூரணம் ஏன் சாப்பிடணும்?
X

Triphala Churna Benefits in Tamil

திரிபலா சூரணம் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. நம் வாயைப் பாதுகாப்பது, செரிமானத்தை மேம்படுத்துவது, சருமத்தைப் பராமரிப்பது போன்ற பல நன்மைகளுக்கு இது பயன்படுத்தப்படுகிறது. அதனால்தான் ஆயுர்வேத மருந்துகளில் திரிபலா சூர்ணம் பயன்படுத்தப்படுகிறது.

Triphala Churna Benefits in Tamil

திரிபலா சூரணம்

நமது நாட்டில் கிடைக்கும் மூன்று காய்களைச் சேர்த்து திரிபலா சூர்ணம் தயாரிக்கப்படுகிறது. அவை மலை நெல்லி, கடுக்காய், தான்றிக்காய் ஆகியவை ஆகும். ஆயுர்வேதத்தில் நம் உடலில் மூன்று வகையான ஆற்றல் உள்ளது. இந்த மூன்றையும் முறைப்படுத்துவதன் மூலம் சிறந்த ஆரோக்யத்தைப் பெறலாம். மூன்று காய்களின் பொடிகளை சரியான அளவில் கலந்து தயாரிக்கப்படும் திரிபலா சூர்ணம் சரியான பலனைத் தரும்.

பானமாக அருந்தலாம்

திரிபலாவை தண்ணீரில் கலந்து பானமாக அருந்தலாம். இரவில் பால் அல்லது தேனில் கலந்து சாப்பிடலாம். இதை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். எனவே எவ்வளவு குடிக்க வேண்டும் என்று ஆயுர்வேத நிபுணரின் ஆலோசனையைப் பெறுங்கள். வழக்கமாக தினமும் 2 முதல் 5 கிராம் வரை எடுத்துக் கொள்ளப்படுகிறது.


Triphala Churna Benefits in Tamil

திரிபலா சூரணம் எப்படி கிடைக்கும்?

ஒவ்வொருவரும் மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் இரண்டு முதல் ஐந்து கிராம் திரிபலா சூரணம் எடுத்துக் கொள்ளலாம். சிறந்த திரிபலா சூரணத்தை தேர்வு செய்து உறுதி செய்து வாங்கவும். இது மாத்திரை வடிவிலும் கிடைக்கிறது.

திரிபலா சூரண பலன்கள்

● திரிபலா சூரணம் செரிமானத்தை மேம்படுத்துகிறது. அமிலத்தன்மை பிரச்சனையை குறைக்கும்.

● டைப் 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இந்தச் சருகுக்கு உண்டு.

● இந்த சூரணம் பசிக்கு நல்லது. பெருங்குடலை சுத்தப்படுத்தும்.

● இது கண்கள், தோல், இதயம் மற்றும் கல்லீரல் ஆகியவற்றிற்கு மிகவும் நல்லது.

● இது கருவுறுதலை பெரிதும் அதிகரிக்கிறது.

Triphala Churna Benefits in Tamil

● முதுமை விரைவில் வராது. முடி நன்றாக வளரும். முடி வெண்மையாக மாறாது.

● ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க இந்த சூரணம் உதவும்.

● குறிப்பாக இந்த சூரணம் நினைவாற்றலை மேம்படுத்த பெருமளவு உதவுகிறது.

● அதிக எடை உள்ளவர்கள் திரிபலா சூரணத்தை பயன்படுத்த வேண்டும்.

● இரத்த சோகை உள்ளவர்கள் இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க இந்த பொடியை பயன்படுத்துகின்றனர்.

● தோல் செல்களைப் பாதுகாத்து புற்றுநோயைத் தடுக்கிறது.

● பிபி கட்டுக்குள் வைக்க இந்த சூரணம் உதவும். கெட்ட கொலஸ்ட்ராலை பெருமளவு கரைக்கும்.

● திரிபலா சூர்ணாவுக்கு எச்ஐவி நோயை தடுக்கும் சக்தியும் உள்ளதாக கூறப்படுகிறது.

Triphala Churna Benefits in Tamil

● திரிபலாவை இடித்து சாப்பிட்டால் பல வகையான பலன்கள் கிடைக்கும் என்கின்றனர் ஆயுர்வேத நிபுணர்கள்.

முன்னதாகவே சொன்னதுபோல் திரிபலா சூரணத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. எனவே எந்த ஒரு புதிய ஆரோக்ய நடைமுறையையும் உடலுக்கு எடுத்துக் கொள்ளும் போது மருத்துவரை அணுகுவதே சிறந்த முடிவாகும்.

Updated On: 1 Dec 2023 7:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்