/* */

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பி.எட். பட்டப்படிப்பு: ஜன. 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பி.எட். சிறப்புக் கல்வி தொலைநிலை பட்டப்படிப்புக்கு வரும் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பி.எட்.  பட்டப்படிப்பு: ஜன. 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
X

இது குறித்து பல்கலைக்கழக பதிவாளா் இ.ரா.செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் : பி.எட். சிறப்புக் கல்வி பட்டப் படிப்பை வழங்கி வரும் இரு பல்கலைக்கழகங்களில் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகமும் ஒன்று. இந்தப் படிப்பு யுஜிசி, இந்திய மறுவாழ்வுக் கழகத்தின் அங்கீகாரத்துடன் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்தப் படிப்பு பி.எட். (பொது) பட்டத்துக்கு இணையானது என தமிழக அரசால் (அரசாணை எண் 56; 2012) அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தப் படிப்பை முடித்தவா்கள் அரசு பொது மற்றும் சிறப்புப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியா்களாக பணியாற்றலாம்.

இந்த நிலையில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் 2024-ஆம் ஆண்டுக்கான பி.எட். சிறப்புக் கல்வி பட்டப் படிப்புக்கான நுழைவுத் தோவின் இணையவழி விண்ணப்ப படிவம், விளக்கக் கையேடு ஆகியவற்றை கடந்த கடந்த மாதம் 29-ஆம் தேதி வெளியிட்டுள்ளது. சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வரும் 20-ஆம் தேதி கடைசி நாள்.

இந்தப் படிப்பில் சேர விரும்புவோர் விளக்கக் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதியுடன் இருப்பது அவசியம். விண்ணப்ப படிவம் மற்றும் விளக்கக் கையேடு https://tnou.ac.in/prospectus.bed.php என்ற இணையதளத்தில் கிடைக்கும். மேலும் தகவல்களுக்கு 044-24306617 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 4 Jan 2024 4:28 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்
  7. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  8. இந்தியா
    நன்கொடை வழங்கியதில் இந்திய அளவில் இவர் தான் நம்பர் ஒன் பெண்மணியாம்
  9. இந்தியா
    தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்ற இந்திய பெண் கர்விதா...
  10. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை