கேரளாவில் குண்டு வெடிப்பு: ஒருவர் உயிரிழப்பு; 5 பேர் கவலைக்கிடம்

கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 5 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. என்ன மாதிரியான குண்டு வெடித்தது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் 3 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்ததில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கேரளாவின் கொச்சியில் உள்ள கலமசேரி பகுதியில் உள்ள பிரார்த்தனைக் கூட்டத்தில் இன்று 3 குண்டு வெடிப்புகளில் ஒருவர் இறந்தார் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
காலை 9 மணியளவில் முதல் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும், அதன்பிறகு அடுத்த ஒரு மணி நேரத்தில் பல குண்டுவெடிப்புகள் நடந்ததாகவும் களமசேரி சிஐ விபின் தாஸ் தெரிவித்தார்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, அக்டோபர் 27ஆம் தேதி தொடங்கிய மூன்று நாள் கூட்டத்தின் இன்று கடைசி நாளாகும். குண்டுவெடிப்பு நடந்தபோது 2,000 க்கும் மேற்பட்டோர் பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஹமாஸின் முன்னாள் தலைவர் கலீத் மஷால், காசாவில் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலுக்கு மத்தியில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவிக்கையில், இது மிகவும் துரதிருஷ்டவசமான சம்பவம். சம்பவம் தொடர்பான விவரங்களை சேகரித்து வருகிறோம். அனைத்து உயர் அதிகாரிகளும் எர்ணாகுளத்தில் உள்ளனர். டிஜிபி சம்பவ இடத்துக்கு சென்று வருகிறார். நாங்கள் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். டிஜிபியிடம் பேசினேன். விசாரணைக்கு பிறகே கூடுதல் விவரங்கள் தெரிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu