மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் பேச்சு கூடாது: தேர்தல் கமிஷன் அரசியல்வாதிகளுக்கு அட்வைஸ்

Election Commission Advice
மாற்றுத்திறனாளிகள் எவரையும் அவமதிக்கும் வகையிலான வார்த்தைகளை அரசியல்கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் பொது இடங்களில் பயன்படுத்தக்கூடாது என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் பிரசாரங்கள் மற்றும் அரசியல் கூட்டங்களில் பேசும்போதும், மற்றும்இது தொடர்பான விளம்பரங்களில் எதிர்க்கட்சியினரைக் கேலி செய்வதற்காக பயன்படுத்தும் சில வார்த்தைகள் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் விதமாக இருப்பது எங்கள் கவனத்துக்கு வந்தது.
அதாவது ஊமை, பைத்தியம், குருடு, செவிடு, நொண்டி போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வார்த்தைகள் அனைத்தும் மாற்றுத்திறனாளிகள் மனதைப் பெரிதும் பாதிப்பதோடு மன உளைச்சலைத் தருவதாக உள்ளது.
எனவே அரசியல் கட்சித்தலைவர்கள் இனி பொதுக்கூட்டங்கள், பிரச்சாரக்கூட்டங்கள்,விளம்பரங்கள் உட்பட எதிலும் இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மீறினால் மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் பேச்சுகள், சமூக வலைதள பக்கங்களின் பதிவுகள், விளம்பரங்கள் மற்றும் பத்திரிகை செய்திகளில் பயன்படுத்தப்படும் வார்த்தை பிரயோகங்களை அரசியல் கட்சிகள் உள் ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும்.
அனைத்து அரசியல் கட்சிகளும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாலின உணர்திறனுடன் கூடிய வார்த்தைகளை பயன்படுத்துவதையும், மனித சமத்துவத்தை மதிப்பது, சரிசமமான கண்ணியம் அளிப்பது போன்றவற்றை தங்கள் இணையதளங்களில் உறுதி செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu