/* */

இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய அமெரிக்கா..!

ஊழல் செய்தால் உங்கள் நாட்டில் அதிபர் பதவி தருவீர்களா? என்ற இந்தியாவின் காட்டமான கேள்வியால் ஜெர்மன் ஆடிப்போய் கிடக்கிறது.

HIGHLIGHTS

இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய அமெரிக்கா..!
X
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் (கோப்பு படம்)

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பல முறைகேடுகளில் சிக்கி கைதுசெய்யபட்ட நிலையில் முதலில் முணுமுணுத்த நாடு ஜெர்மனி. அந்த நாட்டின் முணுமுணுப்பினை அறிந்த இந்தியா டில்லியில் உள்ள அந்த நாட்டிற்கான இந்திய தூதரை அழைத்து "உங்கள் நாட்டில் ஊழல் செய்தால் அதிபராக்கி மகிழ்வீர்களா? இல்லை விசாரிப்பீர்களா? என்று கேள்வி எழுப்பியது. ஆடிப்போன துாதர் கட்டாயம் விசாரிப்போம் என பதிலளித்தார். நாங்களும் அப்படி இவரை விசாரிக்கின்றோம், இந்த மனித உரிமை பற்றி எங்களுக்கு பாடம் எடுக்கவேண்டாம்" என எச்சரித்து அனுப்பியது

ஏற்கனவே உலக பொருளாதார அடைவு நிலையில் எந்நேரமும் இந்தியா தன்னை வீழ்த்தி 3ம் இடம் பிடிக்கலாம் என அஞ்சும் ஜெர்மனி அத்தோடு ஒதுங்கி கொண்டது.

பின் அமெரிக்கா களத்துக்கு வந்து தன் வழமையான வார்த்தை ஜாலத்தை சொன்னது. "கெஜ்ரிவால் கைது செய்யபட்டது வருத்தம். அவர் மேலான விசாரணை நியாயமாக நடக்க விரும்புகின்றோம்" என கவலை தெரிவித்தது.

அமெரிக்காவின் கவலைக்கு பதில் கவலையினை டெல்லி அமெரிக்க தூதரக அதிகாரியிடம் இந்தியா தெரிவித்தது, குளோரியா பார்பெனா என்ற அதிகாரியிடம் "ஏ குளோரியாவே, உங்கள் நாட்டில் ஊழல் செய்தால் வெள்ளை மாளிகையில் வைத்து பாராட்டுவீர்களோ, உங்கள் நாட்டில் பொய் சொன்னாலே விடமாட்டீர்கள், இங்கு இவர் இவ்வளவு குழப்பம் செய்திருக்கின்றாரே, எப்படி விடுவது? இது உங்கள் நாடென்றால் என்ன செய்வீர்கள்?" என கேட்ட பின் அமெரிக்கா அமைதியாகி விட்டது.

கவனியுங்கள், கெஜ்ரிவாலுக்கு ரூ. 134 கோடி கொடுத்தோம் என்கின்றான் காலிஸ்தான் தலைவன். அவனுக்கு அடைக்கலமும் காவலும் கொடுத்து தன் நாட்டில் பொத்தி வைத்திருக்கும் நாடு அமெரிக்கா. இப்போது கெஜ்ரிவால் மாட்டியவுடன் மெல்ல முணங்கும் நாடும் அதே அமெரிக்கா தான். ஜெர்மன் கெஜ்ரிவாலருக்காக ஏன் உறுமுகின்றது என்றால் அங்கும் சில தொடர்பு இருக்கலாம் என்கிறது இந்திய அரசின் விசாரணை அமைப்பு. ஆக எல்லாம் கவனித்தால் என்ன புரிகின்றது?

கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட உடனே ஜெர்மனியும், அமெரிக்காவும் பதறக் காரணம் என்ன என்பது விசாரித்தால் தெரிந்து விடும் என இந்திய விசாரணை அமைப்புகள் தெளிவாக தெரிவித்துள்ளன. விரைவில் இந்த விஷயத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம்.

Updated On: 29 March 2024 5:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!
  2. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...
  3. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை
  4. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  5. லைஃப்ஸ்டைல்
    6th wedding anniversary quotes- 6 வருட திருமண வாழ்க்கையின் வெற்றிக்கான...
  6. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  7. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  8. குமாரபாளையம்
    ராமர், சீதா திருக்கல்யாண வைபோகம்
  9. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  10. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய