/* */

மத்திய அரசின் கிலோ ரூ.29-க்கு ‘பாரத் அரிசி’ விற்பனை தொடக்கம்

அரிசி விலை கடந்த ஓராண்டாக உயா்ந்து வரும் நிலையில், ‘பாரத் அரிசி’ என்ற பெயரில் மத்திய அரசு அறிவித்த ரூ. 29-க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.

HIGHLIGHTS

மத்திய அரசின்  கிலோ ரூ.29-க்கு ‘பாரத் அரிசி’ விற்பனை தொடக்கம்
X

பாரத் அரிசி 

தற்போது சந்தையில் அரிசியின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் அரிசி உற்பத்தி அதிகரித்தாலும், அரிசி விலை குறையவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சாமானியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், மத்திய அரசு பாரத் அரிசியை கொண்டு வந்தது.

ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் தரமான அரிசி வழங்க, பாரத் அரிசி என்ற பெயரில் இந்தியா அரிசியை கொண்டு வந்துள்ளது.

ஏற்கெனவே, ‘பாரத் ஆட்டா’ என்ற பெயரில் ரூ. 27.50-க்கு ஒரு கிலோ கோதுமை மாவும், ‘பாரத் பருப்பு’ என்ற பெயரில் ரூ. 60-க்கு ஒரு கிலோ சென்னாவையும் (வெள்ளை கொண்டைக் கடலை) மத்திய அரசு சில்லறை சந்தையில் விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது மானிய விலையில் அரிசி விற்பனையும் தொடங்கப்பட்டுள்ளது. 5 கிலோ மற்றும் 10 கிலோ பைகளாக சில்லறை விற்பனைச் சந்தையில் ‘பாரத் அரிசி’ கிடைக்கும்.

இத் திட்டத்தை தில்லியில் தொடங்கி வைத்த மத்திய உணவு மற்றும் நுகா்வோர் நலத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் கூறுகையில், தினசரி உணவுப் பொருள்கள் சாதாரண மக்களுக்கு குறைந்த விலையில் கிடைப்பதை உறுதிப்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த முயற்சிகள், தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை வெகுவாக குறைய உதவியது. ‘பாரத் ஆட்டா’ என்ற பெயரில் மானிய விலையில் கோதுமை மாவு விற்பனை செய்யப்பட்டு வருவதன் மூலம், கடந்த 6 மாதங்களாக கோதுமை பணவீக்கம் ‘பூஜ்ஜியம்’ என்ற அளவில் உள்ளது.

தற்போது, ஏழை மற்றும் நடுத்தரப் பிரிவு நுகா்வோர் பலனடையும் வகையில் ரூ. 29-க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்யும் திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம் அரிசி பணவீக்கமும் விரைவில் ‘பூஜ்ஜியம்’ என்ற நிலையை எட்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, வேன்கள் மூலம் விற்பனை செய்யும் வகையில் 100 நடமாடும் விற்பனை நிலையங்களை பியூஷ் கோயல் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (என்ஏஎஃப்இடி) மற்றும் இந்திய தேசிய நுகா்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு (என்சிசிஎஃப்) ஆகிய 2 கூட்டுறவு சங்கங்கள் மூலமும், மத்திய அரசு விற்பனை மையங்கள் மூலமும் (கேந்த்ரிய பந்தா்) ‘பாரத் அரிசி’ விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும் இணைய-வணிக வலைதளங்கள் மூலமும் விற்பனை செய்யப்படும்.

பாரத் அரிசி 5 கிலோ மற்றும் 10 கிலோ பைகளில் கிடைக்கிறது. முதற்கட்டமாக சில்லறை சந்தையில் ஐந்து லட்சம் டன் அரிசி விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்திய பிராண்ட் அரிசியும் இ-காமர்ஸில் விற்கப்படுகிறது. தற்போது கிடைக்காத Amazon, Flipkart, Jiomart போன்ற இ-காமர்ஸ் தளங்களிலும் பாரத் மழையை ஆர்டர் செய்யலாம்.

Updated On: 9 Feb 2024 8:54 AM GMT

Related News

Latest News

  1. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  2. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  3. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  4. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  5. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  6. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  7. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  8. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த
  9. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்தநாள்: பெருந்துறையில் சர்க்கரைப் பொங்கல்...
  10. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை