/* */

தான் கைது செய்யப்பட்டதை கெஜ்ரிவால் எதிர்க்காதது ஏன்?

கெஜ்ரிவால் டெல்லி மதுக் கொள்கை பணமோசடி வழக்கில் ED கைது செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார்.

HIGHLIGHTS

தான் கைது செய்யப்பட்டதை கெஜ்ரிவால் எதிர்க்காதது ஏன்?
X

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் (கோப்பு படம்)

கேஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றது குறித்து பா.ஜ.க.,வினர் கூறியதாவது:

இவர் பல துரோக செயல்கள் புரிந்ததற்கான ஆதாரம் மத்திய அரசின் வசம் உள்ளது எனும் தகவல் இவருக்கு கிடைக்கப் பெற்றதே வாபஸுக்கு காரணம்? மதுபான ஊழல் என்பது பொதுவான ஊழல் விஷயம் என்பது நன்கு தெரியும். அதை விட உண்மையான காரணம் தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்பதே இவரது மிக அவசரமான கைதுக்கு காரணமாயிற்று.

மோடி மற்றும் அமித்ஷாவிடம் கெஜ்ரிவாலை இப்போது கைது செய்தால் டெல்லி மற்றும் பஞ்சாப்பில் பாஜக சில எம்.பி.,க்களின் வெற்றிகளை இழக்க நேரிடும் என உளவுத் துறை கூறிய பிறகும் இவரை கைது செய்வது தான் தேசியப் பாதுகாப்புக்கு நல்லது என இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கெஜ்ரிவாலை சுற்றி பரவும் கைது வலையின் கதையை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். CBI, ED, இப்போது NIA இந்த வழக்கில் நுழைகிறது. மத்திய அரசு மற்றும் பல அதிகாரிகளை அந்நிய நாட்டுடன் சேர்ந்து உளவு பார்த்து அவர்களுக்கு பல இரகசிய தகவல்களை இவர் அளித்து தேசத் துரோகம் செய்ததாக கெஜ்ரிவால் மீது ஆதாரத்துடன் மத்திய அரசு குற்றம் சுமத்துகிறது.

கெஜ்ரிவால் செய்த தேச துரோகங்கள் பின்வருமாறு சொல்லப்படுகின்றன.

1. கெஜ்ரிவால் "நாட்டிற்கு எதிரான போர்" என்ற ரகசிய முறையில் ஒரு பயங்கரமான சதி தீட்டியது அம்பலகியுள்ளது. இந்த சீன உளவு அமைப்பு, இஸ்ரேல் மொசாட் மற்றும் ரஷ்ய கேஜிபியின் வரிசையில் கெஜ்ரிவால் ஒரு ரகசிய உளவு ஸ்தாபனத்தை உளவாளி மற்றும் இராணுவ அமைப்புடன் அமைக்க திட்டமிட்டு அதற்கு "ஃபீட் பேக் யூனிட்" (FBU) என பெயரிட்டு ஒரு உளவு பிரிவை உருவாக்க முழு தயாரிப்புகளை செய்துள்ளதற்கான ஆதாரம் உள்ளது.

2. இதைப் போன்ற அமைப்புகளை அமைக்க ஒரு மாநில அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. இது தேசிய பாதுகாப்புக்கு மிக எதிரான செயல் மற்றும் இது தேச துரோக செயலில் வரும் குற்றம்.

3. மத்திய அரசுக்குத் தெரியாமல் இந்த சதி செயலை இவர் அரங்கேற்றி உள்ளார். இதற்காக 17-18 ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகளை நியமித்து, அவர்கள் மூலம் நாட்டின் அனைத்து உயர் பதவியில் இருப்பவர்களையும் உளவு பார்த்ததோடு, அவர்களின் தொலை பேசிகளையும் ஒட்டுக் கேட்டு அந்நிய நாடுகளுடன் இதை பகிர்ந்துள்ளார்.

3. கெஜிரிவாலால் உளவு பார்த்தவர்கள் நாட்டின் பிரதமர், பல மாநில முதலமைச்சர்கள், பிரபல உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், பிரபலமான வழக்கறிஞர்கள், மத்திய மாநில அரசு அதிகாரிகள், கடற்படை, ராணுவம் மற்றும் விமானப்படை அதிகாரிகள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் அதுமட்டுமின்றி, தனது சொந்தக் கட்சித் தலைவர்கள், அவர்களது மனைவிகள் மற்றும் மகள்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பதன் மூலம் உளவு பார்த்ததற்கான ஆதாரம் உள்ளது.

4. இதைவிட பயங்கரமான உளவு சதியை நிறைவேற்ற, இஸ்ரேலிடம் இருந்து "மிலிட்டரி கிரேடு ஸ்னூப்பிங் டிவைஸ்" ஒன்றை ஆர்டர் செய்திருக்கிறார் கெஜ்ரிவால். இது பல நாட்டு உளவு நிறுவனங்கள் பயன்படுத்தும் மிக உயர்ந்த தொழில் நுட்பம் மிக்க உளவு கருவி மற்றும் உளவு மென்பொருள்.

5. அந்த இஸ்ரேலிய உளவு நிறுவனம் இந்த சாதனத்தை எந்த மாநில அரசிடமும் கொடுக்க முடியாது. அதற்கு அவர்கள் மத்திய அரசாங்கத்தின் அனுமதியைக் காட்ட வேண்டும் என்று கூறி அந்த சாதனத்தை தர மறுத்து விட்டது.

6. இதனால் கெஜ்ரிவால், இது போன்ற பின்னூட்டப் பிரிவுக்கு (FBU) இந்த கருவி தேவை என்று இந்த கருவியின் பெயரை மாற்றி ஒரு சாதாரண சாதனம் என கூறி உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டுள்ளார்.

7. இந்த விண்ணப்பம் அமித்ஷா பார்வைக்கு வந்த போது, அந்த இஸ்ரேல் நிறுவனமும் கெஜ்ரிவால் ஆர்டர் செய்த விவரத்தை மத்திய அரசிடம் பகிர்ந்துள்ளது.

8. நாட்டிற்கு எதிராக உளவு பார்க்க, சதி செய்ய, ஒரு மாநில முதலமைச்சர் தன்னிடம் அனுமதி கேட்பதை புரிந்து கொண்டார் அமித்ஷா. இதற்கிடையே இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாட் இவர் ஆர்டர் செய்த விஷயத்தை இந்திய உள்துறை அமைச்சருக்கு தெரிவித்தது. மேலும் இரண்டு வருடம் முன்பு டில்லியில் ஒரு வருடத்துக்கும் மேலாக பஞ்சாப் விவசாயிகள் பெயரில் நடந்த போராட்டத்துக்கு full finance கெஜ்ரிவால் தான் என்பதையும் கூடுதல் தகவலாகவும் தந்து விட்டது.

அந்தப் பணம் முழுவதும் liquorgate ஊழல் மற்றும் போதை மருந்து கடத்தல் மன்னர்களின் அன்பளிப்பு என்பதையும் ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. இதற்குப் பிறகு, கெஜ்ரிவாலின் முழுத் திட்டத்தையும் முறியடிக்க, உள்துறை அமைச்சகம் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டது. இப்போது இந்த கெஜ்ரிவால் தப்பிக்க முடியாது என தெரிந்து போய் விட்டது.

8. கெஜிரிவால் சுமார் 700 பேரை உளவு பார்த்துள்ளார். நாட்டின் முக்கிய ஊடக நிறுவனங்கள் இதில் மிகப்பெரிய பங்கு வகித்தன. கெஜ்ரிவால் தொடர்பான குறை, சதி, தோல்வி மற்றும் மோசடி பற்றிய செய்திகள் எதுவும் தங்கள் சேனல்களில் வராமல் பார்த்துக் கொண்டனர் இந்த ஊடகத்தரகர்கள். கெஜ்ரிவால் அவர்களது சேனல்களில் தொடர்ந்து முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். அதற்காக அவர்கள் பெரும் தொகையைப் பெற்றார்கள். பஞ்சாபில் அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டதன் மூலம் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

கெஜ்ரிவால் கைது விஷயத்தில் ஜெர்மனி மற்றும் அமெரிக்க தலையிட்டு கருத்து சொன்னதற்கு இது எங்கள் உள்நாட்டு பிரச்சனை இதில் தலையிட என்ன உரிமை உள்ளது என இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கான ஜெர்மன் தூதுவரை உள்துறை அமைச்சகத்துக்கு அழைத்து அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Updated On: 30 March 2024 5:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு