லோக்சபா பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம் 31 ந்தேதி துவக்கம்

புதிய லோக்சபா கட்டடத்தின் வெளிப்புற தோற்றம் (கோப்பு படம்)
Lokshbha Interim Budget Session
லோக்சபா பட்ஜெட் கூட்டத்தொடரானது இம்மாதம் 31ந்தேதி துவங்குகிறது. இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இந்த கூட்டத்தொடர் பிப்ரவரி 9 ந்தேதி நடக்க உள்ளது.இந்த ஆண்டுக்கான லோக்சபா பட்ஜெட் கூட்டத்தொடரானது இம்மாதம் 31 ந்தேதி முதல் துவங்குகிறது. அன்றைய தினம் லோக்சபா மற்றும் ராஜ்ய சபா கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்துகிறார்.
புதிய லோக்சபா கட்டடத்தில் முதன் முறையாக உள்ளே நுழையும் அவர் லோக்சபாவில் தன் உரையை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.லோக்சபா தேர்தல் நடக்க உள்ளதால் 2024 -25 ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய முடியும். அதன்படி பிப்ரவரி1ந்தேதி அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
தேர்தல் முடிந்து புதிய அரசானது பதவியேற்கும் வரை அரசின் செலவினங்களுக்காக அரசு கருவூலத்திலிருந்து நிதி கோரி பட்ஜெட் தாக்கல் செய்து ஒப்புதல் பெறப்படும். வரும் ஜூன் 16ம் தேதியுடன் தற்போதைய 17 வது லோக்சபாவின் ஆயுட்காலம் முடிவுக்கு வர உள்ளது.
மேலும் இந்த கூட்டத்தொடரானது இரண்டாவது முறையாக ஆட்சியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் கடைசி கூட்டத்தொடர் மற்றும் இந்த அரசின் கடைசி பட்ஜெட்கூட்டத்தொடராக இது இருக்கும்.
இந்த இடைக்கால பட்ஜெட் தொடரை பிப்ரவரி 9ந்தேதி வரை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தல் முடிந்து புதிய அரசை யார் அமைக்கிறார்களோ அவர்கள் பதவியேற்புக்கு பிறகுதான் மீண்டும் லோக்சபா கூட்டத்தொடர் கூட்டப்படும் எனவும் தெரிகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu