RamaJanma Boomi Trust Ayodhi ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ர ட்ரஸ்ட் சார்பில் பக்தர்களுக்கு கோரிக்கை...படிங்க...

அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலின் மாதிரி (கோப்பு படம்)
Rama Janma Boomi Trust Ayodhi
இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தியில் ராமருக்கு பிரமாண்ட கோயில் கட்டப்பட்டு அதன் கும்பாபிஷேக விழாவானது இம்மாதம் 22ந்தேதி வெகு விமர்சையாக நடக்க உள்ளது.இதற்கான ஏற்பாடுகளும் ஜரூராக நடந்து வருகிறது. இந்நிலையில் நாட்டிலுள்ள அனைத்து மாநில மக்களுக்கும் அழைப்பிதழ் மற்றும் அட்சதை விநியோகமானது ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர டிரஸ்ட் சார்பில் வீடு வீடாக வழங்கும் நிகழ்வு நடந்து வருகிறது.
அந்த அழைப்பிதழில்,ஆன்மீக அன்பர்களுக்கு அன்பான வேண்டுகோள்,தாய்மார்கள் மற்றும் சகோதர சகோதரிகளே...
வரும் சோபகிருது ஆண்டு தை மாதம் 8ம்தேதி (22.1.2024)திங்கட்கிழமை மதியம் 12.20 மணிக்கு சுக்லபட்ச துவாதசி மிருகசீரிஷ நட்சத்திர சுபயோக சுபதினத்தில் பிரபு ஸ்ரீராமனின் குழந்தை வடிவிலான விக்ரஹம் ஸ்ரீராம ஜென்ம பூமியில் புதியதாக கட்டப்பட்ட ஆலயத்தில் ப்ராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதனால் அயோத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நிலை உருவாகி உள்ளது.
Rama Janma Boomi Trust Ayodhi
நிகழ்ச்சிகள் கோயிலை மையமாக வைத்து அமைய வேண்டும்.
தாங்களும் ப்ராண பிரதிஷ்டை அறிவிக்கப்பட்ட புனித நாளில் தங்கள் பகுதிகளிலுள்ள ஆலயங்களின் அருகில் உள்ள பக்தர்களை அழைத்து ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம மந்திரத்தை குறைந்தது 108 முறை சொல்வதோடு, பஜனை, கீர்த்தனைகள், மேளதாளங்கள் , சங்கொலி, மணியோசை, தீபாராதனை செய்து ப்ரசாதம் வழங்கவும்.
மேலும் ஸ்ரீராம ஜென்ம பூமி ப்ராண பிரதிஷ்டை வைபவம் நேரடியாக அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் ஒளிபரப்பப் பட உள்ளது. நம் பகுதியில் தொலைக்காட்சி அல்லது எல்இடி திரை ஏற்பாடு செய்து ஆலய நிகழ்வுகளை சமுதாயத்திற்கு காண்பிக்கவும்.
ப்ராண பிரதிஷ்டை நாளன்று மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாக நமது வீடுகளில் திருக்கார்த்திகை போன்று தீபம் ஏற்றிக்கொண்டாட வேண்டும்.
ப்ராண ப்ரதிஷ்டை நிறைவுற்ற பின்பு தங்களுக்கு வசதியான நாளில் அயோத்திக்கு வருகை புரிந்து குழந்தை வடிவிலான ஸ்ரீராமபிரானை வழிபட்டு அனுக்ரஹகம் பெற வேண்டுகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அழைப்பிதழில், அயோத்தி கோயிலின் கட்டமைப்பு பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
*ஆலயம் பாரம்பரியமிக்க அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
*ஆலய நீளம் (கிழக்கு மேற்காக) 390 அடி , அகலம் 250 அடி, உயரம் 161 அடி.
*மூன்று தளங்களாக ஆலயம் அமைந்துள்ளது. ஒவ்வொரு தளமும் 20 அடி உயரமுடையது. மொத்தம் 392 துாண்கள் .44 வாசல்கள்.
*தரைத்தளமான கர்ப்ப க்ரஹத்தில் பிரபு ஸ்ரீராமபிரானின் குழந்தை வடிவமும், முதல் தளத்தில் ஸ்ரீராமபிரானின் பட்டாபிஷேக மண்டபமும் அமைய உள்ளது.
*மொத்தம் 5 மண்டபங்கள். நாட்டியமண்டபம், ரங்க மண்டபம், தரிசன மண்டபம், ப்ரார்த்தனா மண்டபம், கீர்த்தனை மண்டபம்.
*துாண்களி்ல் இறைவன் மற்றும் நாட்டிய மாந்தர்களின் சிலைகள்.
*நுழைவு வாயில் முன்பு 32 படிகள் (உயரம் 16.5அடி) ஏறி பிரதான நுழைவாயிலை அடையலாம்.
*மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கு ரேம்ப் மற்றும் லிப்ட் வசதிகள்.
*நான்கு பக்கங்களிலும் கோட்டைச் சுவர்கள் 732 மீ.நீளம், 4.25மீ. அகலம். கோட்டையின் நான்கு மூலைகளில் முறையே சூரியன், சிவன்,கணபதி, தேவி பகவதி, ஆகியோருக்கான ஆலயங்கள், கோட்டையின் தெற்கு முகமாக ஹனுமானும், வடக்கு முகத்தில் அன்னபூரணி ஆலயங்கள்.
*ஆலயத்தின் தென்பகுதியில் பழமையான சீதை கிணறு உள்ளது.
*கோட்டையின் வெளியே தென்திசையில் வால்மீகி மகரிஷி, வசிஷ்ட மகரிஷி, விஸ்வாமித்ர மகரிஷி, அகஸ்திய மகரிஷி, குகன் சபரிமாதா மற்றும் தேவி அகல்யாவிற்கான ஆலயங்கள்.
*தென்மேற்கில் குபேரன் குடிலில் உள்ள சிவாலய புனர்பிரதிஷ்டை மற்றும் ராமபக்த ஜடாயுவின் பிரதிஷ்டைகள் என அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu