Atm Card Request Letter புதிய ஏடிஎம் கார்டு வாங்கபேங்க் மேலாளருக்கு கடிதம் எழுதுவது எப்படி-?

Atm Card Request Letter  புதிய ஏடிஎம் கார்டு வாங்கபேங்க்  மேலாளருக்கு கடிதம் எழுதுவது எப்படி-?
X
Atm Card Request Letter பேங்கில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் நபர் அதற்குண்டான ஏடிஎம் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி? என்பதைப் பற்றி பார்ப்போம்...

Atm Card Request Letter

வளர்ந்து வரும் நாகரிக உலகில் இன்றளவில் ஒரு நபருக்கு பல வங்கிகளில் சேமிப்பு கணக்குகள் இருக்கும். தோராயமாக எடுத்துக்கொண்டால் இன்றுள்ள நபருக்கு குறைந்த பட்சம் 4 அல்லது 5 வங்கிகளில் சேமிப்பு கணக்கு இருக்கும்.

முன்பெல்லாம் பேங்கில் கணக்கு வைத்திருப்பவர் பணம் எடுக்க வேண்டும் என்றால் நேரிடையாக பேங்கிற்கு சென்று வித்ட்ராயல் பார்ம் எழுதிக்கொடுத்த பின் அவர்கள் டோக்கன் தருவார்கள். பின் அந்த டோக்கன் வரிசைப்படி பணம் வாங்கிக்கொள்ளலாம்.

ஆனால் தற்போது தொழில்நுட்ப புரட்சியால் எல்லாமே தலைகீழாகவே மாறிவிட்டது. எந்த பேங்கில் அக்கவுண்ட் வைத்திருந்தாலும் நாம் நேரிடையாக சென்று பணத்தினை டெபாசிட் செய்யலாம். அல்லது அந்த பேங்கின் பணம் கட்டும் மெஷினிலும் பணத்தினைக் கட்டிவிடலாம். ஆனால் பணத்தினை அதிக அளவில் எடுக்க வேண்டும் எனில் பேங்கிற்கு செல்லலாம். ஒரு நாள் லிமிட்டுக்கான பணத்தினை ஏடிஎம்மில் எடுத்துக்கொள்ளலாம். தற்போது நாகரிகம் அந்த அளவிற்கு வளர்ந்து போயுள்ளது.

Atm Card Request Letter


ஏடிஎம் கார்டுக்கு ஆண்டு தோறும் சேவைக்கட்டணத்தினை ஒவ்வொரு வங்கியும் வசூலித்துவிடுகிறது. அதேபோல் கார்டை எப்படி உபயோகிக்கலாம் என வரைமுறைகளையும் வங்கிகள் வகுத்துள்ளன. அந்த கார்டு காலாவதி தேதியோடு நமக்கு தரப்படுவதால் அந்த தேதி வரை அந்த கார்டை உபயோகித்துவிட்டு பின் மீண்டும் புதிய கார்டு பெற்றுக்கொள்ளலாம்.

இந்த ஏடிஎம் கார்டு பெற மேலாளருக்கு கடிதம் எப்படி எழுதுவது என்பதைப் பற்றி பார்ப்போம்.

அனுப்புநர்

எஸ். சுப்பிரமணியன்

33, காந்தி தெரு,

சேலம்-636001

பெறுநர்

உயர்திரு. மேலாளர் அவர்கள்,

பாரத ஸ்டேட் வங்கி,

சேலம்-636 005

அய்யா,

பொருள்: என்னுடைய சேமிப்பு கணக்கிற்கு புதிய ஏடிஎம் கார்டு பெறுதல் தொடர்பாக.

தங்களுடைய வங்கியில் என் பெயரில் சேமிப்பு கணக்கு உள்ளது. அந்த சேமிப்பு கணக்கு எண். 323435367 ஆகும்.

மேற்படி சேமிப்பு கணக்கிற்கு நான் இது நாள் வரை ஏடிஎம் கார்டு பெறவில்லை. எனவே என்னுடைய சேமிப்பு கணக்கிற்கு ஏடிஎம் கார்டை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இதற்கான விண்ணப்ப படிவத்தினையும் பூர்த்தி செய்து இத்துடன் இணைத்துள்ளேன். இதுமட்டும் அல்லாமல் என்னுடைய முகவரிக்கான அத்தாட்சியாக என்னுடைய ஆதார் மற்றும் பான் கார்டு நகலையும் இத்துடன் தங்கள் பார்வைக்கு இணைத்துள்ளேன்.


இப்படிக்கு

தங்கள் உண்மையுள்ள....

எஸ்.சுப்பிரமணியன்.

இணைப்பு : சேமிப்பு கணக்கு முதல்பக்க நகல், ஆதார் நகல், பான்கார்டு நகல், ஏடிஎம் கார்டுக்கான விண்ணப்பம்.

Tags

Next Story
மனித உடலில் நோய் ஏற்படுவதற்கு முன்பே கண்டறியும் AI - நோயின்றி வாழ வழிகாட்டும் புதிய செயற்கை நுண்ணறிவு!