/* */

Bone Mineral Density Test- உங்க எலும்பு ஸ்ட்ராங்கா இருக்கா, இல்ல வீக்கா இருக்கா? இந்த பரிசோதனை யாரெல்லாம் செய்யணும்?

Bone Mineral Density Test-உங்கள் எலும்பு உறுதியாக இருக்கிறதா, அல்லது பலவீனமாக தெரிந்துக்கொள்ள இந்த பரிசோதனைகளை செய்துகொள்வது மிகவும் அவசியம்.

HIGHLIGHTS

Bone Mineral Density Test- உங்க எலும்பு ஸ்ட்ராங்கா இருக்கா, இல்ல வீக்கா இருக்கா? இந்த பரிசோதனை யாரெல்லாம் செய்யணும்?
X

Bone Mineral Density Test- எலும்புகளின் உறுதியை தெரிந்துக்கொள்ள பரிசோதனை முக்கியம் (மாதிரி படம்)

Bone Mineral Density Test- எலும்பு ஸ்ட்ராங்கா.. இல்ல வீக்கா.. என்று கண்டறியும் பரிசோதனை.. யாரெல்லாம் செய்துக்கணும் என்று தெரிந்துக்கொள்ளுங்கள்!

உடலை தாங்கி பிடிக்கும் எலும்புகள் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை கண்டறிய உதவும் எலும்பு அடர்த்தி பரிசோதனை என்றால் என்ன, யாரெல்லாம் இதை செய்ய வேண்டும் என்பது குறித்து இதில் தெரிந்துகொள்வோம்.

எலும்புகள் தன்னைத்தானே புதுப்பித்துகொள்ளும் தன்மை கொண்டவை. உடல் வயதாகும் போது இது மெதுவாக நிகழும். அப்போது பழைய செல்கள் இருக்கும் இடத்தில் செல்கள் உருவாகாமல் எலும்பு அடர்த்தி குறையும். வயதாகும் போது இன்னும் இதன் அடர்த்தி குறைய செய்யும். உடல் பரிசோதனை கண்டறிவது போன்று எலும்பு அடர்த்தி அல்லது எலும்பு தாது அடர்த்தி சோதனை செய்வது அவசியம்.


​எலும்பு தாது அடர்த்தி சோதனை

எலும்பு தாது அடர்த்தி சோதனை என்பது எலும்பு ஆரோக்கியம் குறித்து மதிப்பிடும் ஒரு ஸ்கேன் பரிசோதனை. எலும்பு உருவாக்கம் என்பது குறிப்பிட்ட வயதுக்கு பிறகு குறைந்து எலும்பு வலு குறைய செய்கிறது. -

வயதான பிறகு எலும்பு உருவாக்கம் விட அழிவு நிலை அதிகரிக்கலாம். இது எலும்பின் அடர்த்தியை குறைத்து எலும்பின் நுண் துளைகளை பலவீனமாக்கி ஆஸ்டியோபோராசிஸ் என்னும் கோளாறை உண்டு செய்யும். எலும்பு பலவீனமாக இருப்பது எலும்பு முறிவு அபாயத்தை அதிகரிக்கும். இதை முன்கூட்டியே கண்டறிய எலும்பின் வலிமை அளவிட செய்யும் பரிசோதனை எலும்பு தாது அடர்த்தி பரிசோதனை என்று அழைக்கப்படுகிறது.

​எலும்பு தாது அடர்த்தி பரிசோதனை யாருக்கு அவசியம்?​வயதான பெண்களுக்கு அவசியம் எலும்பு அடர்த்தி பரிசோதனை அவசியம். ஆனால் ஆண்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கலாம். வயதாகும் போது எலும்பு அடர்த்தி பிரச்சனை உருவாகலாம்.

65 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்

மெனோபாஸ்க்கு பிந்தைய 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்

மெனோபாஸ் காலத்தில் இருக்கும் பெண்களுக்கு எலும்புகள் உடைய வாய்ப்புகள் உண்டு

மெனோபாஸ் நின்ற பெண்களுக்கு 65 வயதுக்கு பிறகு எலும்பு அடர்த்தி குறையும் ஆஸ்டியோபோராசிஸ் என்னும் நிலை உருவாகலாம்.

ஆண்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த அபாயத்தை கொண்டிருக்கலாம்

50 வயதில் எலும்பு உடைதல் சந்திக்கும் நபருக்கு

கூன் விழுந்தவர்களுக்கு

காரணம் இல்லாமல் முதுகுவலி இருக்கும் போது

மாதவிடாய் ஒழுங்கற்று இருப்பது

மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள்

சில வகையான மருந்துகள்

ஆஸ்டியோபொராசிஸ் உள்ளதா என்பதை கண்டறிய இந்த பரிசோதனை உதவும்


எலும்பு தாது அடர்த்தி Central DXA பரிசோதனை

இந்த பரிசோதனையின் மூலம் முதுகெலும்பு, இடுப்பு மற்றும் முன்கையில் உள்ள எலும்புகள் ஆய்வு செய்கிறது. ஏனெனில் ஆஸ்டியோபொராசிஸ் நிலையில் இந்த எலும்புகள் உடையலாம்.

பொதுவான சோதனையாக 2 வகையான எலும்பு அடர்த்தி சோதனைகள் செய்யப்படுகின்றன. இவை இரண்டுமே 15 நிமிடங்களுக்கும் குறைவாக செய்யப்படுகின்றன.

Central DXA (Dual Energy X-ray Absorptiometry என்னும் மத்தியில் செய்யப்படும் பரிசோதனை - இந்த சோதனை முதுகெலும்பு மற்றும் இடுப்பு எலும்புகளை பார்க்க கூடிய சோதனை ஆகும். இது துல்லியமாக இருக்கும் அதிக செலவுகள் ஆகும்.

இந்த சோதனையில் பரிசோதிக்கப்படும் மேஜையில் படுக்க வைக்கப்படுவர். உடல் மேல் இயந்திரமானாது உடல் வழியாக குறைந்த அளவிலான எக்ஸ் கதிர்களை அனுப்பி எலும்புகள் வழியாக எக்ஸ் கதிர்கள் எவ்வளவு மாறுகின்றன என்பதன் அடிப்படையில் எலும்புக்கூட்டின் உருவத்துடன் பரிசோதனை 10 நிமிடங்கள் வரை நடக்கும். முடிவின் அடிப்படையில் மருத்துவர் இதை கண்டறியலாம்.

எலும்பு தாது அடர்த்திக்கு செய்யப்படும் Peripheral test பரிசோதனை

Peripheral test சோதனையான இது புற சோதனையாகும். இது உங்கள் மணிக்கட்டு, விரல் மற்றும் குதிகால் எலும்பு அடர்த்தியை அளவிடக்கூடியது. இடுப்பு அல்லது முதுகுத்தண்டை ஆய்வு செய்யாததால் மலிவாக செய்யகூடியது.

இந்த பரிசோதனை செய்வது மிக எளிதானது என்பதால் வீட்டிற்கே வந்தும் எடுத்து தருவார்கள். மத்தியில் செய்யப்படும் சோதனை செய்ய முடியாதவர்களுக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது.


எலும்பு தாது அடர்த்தி பரிசோதனை கட்டுப்பாடுகள்​

பரிசோதனைக்கு முன்பு கால்சியம் மாத்திரைகள் எடுக்க கூடாது.

எலும்பு பரிசோதனை செய்து கொள்ள வலியுறுத்தும் டாக்டர்களின் பட்டியலில் இருப்பவர்கள் வருடந்தோறும் அல்லது 2 வருடங்களுக்கு ஒருமுறை எலும்பு அடர்த்தி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

ஆஸ்டியோபோராசிஸ் இல்லாத நிலையிலும் மருத்துவர் எலும்பு பலவீனமாக இருப்பதாக அறிந்தால் ஆஸ்டியோபொராசிஸ் இல்லையென்றாலும் உங்களை பரிசோதனைக்கு வலியுறுத்துவார்.

கர்ப்பிணிகள் அல்லது கருத்தரித்தல் கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் பெண்களுக்கு இத்தகைய பரிசோதனைகள் செய்யப்படாது.

சமீபத்தில் பேரியம் பயன்படுத்தப்பட்டவர்கள்

சிடி ஸ்கேன் அல்லது பிற இமேஜிக் ஸ்கேன் சோதனைக்காக contrast injection போட்டவர்களுக்கும் இந்த பரிசோதனை தேவைப்படாது.

​எலும்பு அடர்த்தி பரிசோதனை முடிவுகள் எப்படி இருக்க வேண்டும்?​

2 விதமான மதிப்பெண்கள் அளிக்கப்படும்.

டி மதிப்பெண் - இது பாலினத்துக்கேற்ப ஆரோக்கியமான அதே வயது வந்தவருடன் உள்ள எலும்பு அடர்த்தியை ஒப்பிடும் முறை. இதில் எலும்புன் அடர்த்தி சாதாரணமாக உள்ளதா இயல்பை விட குறைவாக உள்ளதா என்பதை கணக்கிட முடியும். டி ஸ்கோர் T score என்பது..

-1 மற்றும் அதற்கு மேல் இருந்தால் எலும்பு அடர்த்தி சாதாரணமாக உள்ளது.

-1 முதல் -2.5 வரை இருந்தால் எலும்பு அடர்த்தி குறைவாக உள்ளது. இது ஆஸ்டியோபோராசிஸ்க்கு வழிவகுக்கும்.

-2.5 மற்றும் அதற்கு மேல் - ஆஸ்டியோபொராசிஸ் உள்ளது.

இதில் இரண்டாவது இசட் மதிப்பெண் Z score

இதில் வயது,பாலினம் மற்றும் மற்றவர்களுடன் எலும்பு திணிவின் அளவை ஒப்பிட்டு பார்க்க செய்வார்கள்.

இதில் இசட் மதிப்பெண் -2.0 க்கு கீழ் இருந்தால் வயதை காட்டிலும் குறைவான எலும்பு அடர்த்தி இருப்பதாகவும் அது வயது தவிர வேறு காரணங்களாலும் இருக்கலாம். பரிசோதனையின் முடிவுக்கேற்ப டாக்டர்கள் சிகிச்சையளிக்க செய்வார்கள்.

Updated On: 28 Dec 2023 8:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்