குழந்தைகள் விரும்பி சாப்பிடும் காலிஃபிளவர் பரோட்டா செய்வது எப்படி?

Cauliflower Parotta Recipe- காஃலிபிளவர் பராத்தா செய்வது குறித்து தெரிந்துக் கொள்ளலாம். ( கோப்பு படம்)
Cauliflower Parotta Recipe- குழந்தைகள் விரும்பும் காலிஃபிளவர் பரோட்டா செய்முறை!
குழந்தைகள் விரும்பிச்சாப்பிடக்கூடிய காய்கறிகளில் ஒன்று காலிஃபிளவர். கோபி மஞ்சூரியன் என்று சொல்லக்கூடிய காலிஃபிளவர் 65, கோபி மசாலா என விதவிதமான ரெசிபிகளின் வரிசையில் இன்றைக்கு காலிஃபிளவர் பராத்தா எளிய முறையில் செய்வது குறித்து அறிந்துக் கொள்ளலாம்.
காலிஃபிளவர் பராத்தா செய்முறை:
தேவையானப் பொருட்கள்:
கோதுமை மாவு- 3 கப்
பாலக்கீரை - 1 கப்
சூடான தண்ணீர் - 1 கப்
ஓமம்- ஒரு டீஸ்பூன்
நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம்- 1 கப்
பச்சை மிளகாய்- ௩
செய்முறை:
காலிஃபிளவர் பராத்தா செய்வதற்கு முதலில் அதை நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் சாப்பிடக்கூடிய உணவுப்பொருட்கள் என்பதால் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆம் பொதுவாகவே காலிஃபிளவரில் சிறிய சிறிய புழுக்கள் இருக்கும் என்பதால் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் சூடான தண்ணீர் சேர்த்து கொஞ்சம் நேரம் கொதிக்க விட்டு இறக்கிவிட வேண்டும். பின்னர் சூடு ஆறியதும் பூவை மட்டும் கேரட் போன்று துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தில் கோதுமை மாவு, வேக வைத்து அரைத்து வைத்துள்ள பாலக்கீரை, உப்பு, ஓமம் சேர்ந்து கலந்துக் கொள்ளவும். பின்னர் கொஞ்சமாக கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பிசைந்துக் கொண்டு சுமார் அரை மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
இதையடுத்து ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி துருவிய காலிஃபிளவர், பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் சிறிதளவு மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
ஏற்கனவே பரோட்டா செய்வதற்காக பிசைந்து வைத்துள்ள மாவை சிறிய சிறிய உருண்டைகளாகத் திரட்டி எடுத்துக் கொள்ளவும். பின்னர் சப்பாத்தி கல்லில் மாவைத் தூவி அதில் உருட்டிய மாவை தேய்த்துக் கொண்டு அதனுடன் தயார் செய்த மசாலைவை வைத்து லேசாக தேய்த்துக் கொள்ளவும.
இதையடுத்து தோசைக்கல்லை சூடேற்றி தேய்த்து வைத்துள்ள பராத்தாவை வேக வைக்கவும். சிறிதளவு எண்ணெய் ஊற்றி இருபக்கமும் லேசாக மொறு மொறுவென்று வந்ததும் எடுத்தால் போதும் சுவையான காலிஃபிளவர் பராத்தா ரெடி.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu