உளுந்தே இல்லாமல் மொறுமொறு மெதுவடை செய்வது எப்படி?

Delicious meduvadi recipe- ருசியான மெதுவடை சாப்பிடலாமா ( கோப்பு படம்)
Delicious meduvadi recipe- வடை என்றால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மழைநேரத்தில் மாலைப்பொழுதில் டீயுடன் வடை வைத்து சாப்பிடவே அவ்வளவு நிறைவாக இருக்கும். மெதுவடை என்றாலெ அதில் உளுந்துதான் பிரதானமாக இருக்கும். ஆனால் உளுந்து கலக்காமல், பச்சரிசி மா கலந்து ருசியான மெதுவடையை தயார் செய்ய முடியும். இதன் சுவையும் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் அருமையாக இருக்கும்.
அந்தவகையில், 10 நிமிடத்தில் உளுந்தே இல்லாமல் மொறுமொறு மெதுவடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி மா- 1 கப்
மோர்- 1 கப்
உப்பு- தேவையான அளவு
இஞ்சி- 1 துண்டு
பச்சைமிளகாய்- 3
சீரகம்- ½ ஸ்பூன்
கறிவேப்பைலை- 1 கொத்து
கொத்தமல்லி- சிறிதளவு
வெங்காயம்- 1
எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு வாணலில் பச்சரிசி மா, மோர், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து தோசை மா போல் கரைத்து வைத்துக்கொள்ளவும்.
பின் அந்த வாணலை அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறினால் நன்கு கெட்டியாகி வரும்.
அடுத்து அதில் நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சைமிளகாய், சீரகம், நறுக்கிய கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலந்துவைத்துக்கொள்ளவும்.
பின்னர் சூடு ஆறியதும் இதை வடை போல் தட்டி ஒரு தட்டில் வைக்கவும்.
இறுதியாக ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் வடையை பொறித்து எடுத்தால் மொறுமொறு மெதுவடை தயார். மெதுவடையை சிலர் சட்னி, சாம்பாரில் முக்கி எடுத்து சாப்பிடுவதில் அதிக ஆர்வம் காட்டுவர். அதனால் தேங்காய் சட்னி, பருப்பு சாம்பார் இதற்கு சைடு டிஷ் ஆக இருந்தால், எண்ணிக்கை கணக்கில்லாமல் மெதுவடைகள் சிலரது வாய்க்குள் போய்க்கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu