Facial care- குளிர்காலத்தில் முகப் பொலிவை பாதுகாக்க உதவும் ரகசியங்கள்!

Facial care- குளிர்காலத்தில் முகப் பொலிவை பாதுகாக்க உதவும் ரகசியங்கள்!
X

Facial care- முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ் தெரிஞ்சுக்கலாம் (கோப்பு படம்)

Facial care-குளிர்காலத்தில் முகப் பொலிவை பாதுகாக்க உதவும் ரகசியங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோம்.

Facial care- குளிர்காலத்தில் முகப்பொலிவை பாதுகாக்க உதவும் ரகசியங்கள்!

40 வயதை நெருங்கும் நபர்களுக்கு முகம் மற்றும் உடலில் தோல் சுருக்கம் ஒரு முக்கிய கவலையாக இருக்கலாம். முதுமை என்பது வாழ்க்கையின் இயல்பானது என்றாலும் கூட முகப் பொலிவைப் பேணுவது முற்றிலும் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.

சருமத்தை ஈரப்பதமாக்குங்கள்

குளிர்கால மாதங்களில் வறண்ட வானிலை இருக்கும் போது சருமத்தை இளமையாகக் காண்பிக்க உங்கள் சிறந்த நண்பராக மாய்ஸ்சரைஸர் இருக்கும். அதே நேரம் இயற்கையான சருமத்திற்கு ஏற்ற எண்ணெய்களைப் பயன்படுத்தவும். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் உங்கள் முக அலங்காரத்திற்கு மட்டுமல்லாமல் தோல் பராமரிப்பு ஒழுங்குமுறையின் ஒரு கருவியாக மாய்ஸ்சரைஸரை பயன்படுத்துங்கள். கூடுதலாக ஹைட்ரேட்டிங் நைட் க்ரீம் மற்றும் கண்களுக்குக் கீழ் சீரம் பயன்படுத்துவது மென்மையான சருமத்தை ஈரப்பதம் இழப்பிலிருந்து திறம்பட பாதுகாக்கும்.


சூடான குளியல் தவிர்க்கவும்

ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்க அதிகபட்சமாக ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஷவர் பயன்படுத்தாதீர்கள். சருமத்தை நீண்ட நேரம் அழகாக வைத்திருக்கக்கூடிய ஈரப்பதமூட்டும் பாடி வாஷைத் தேர்வு செய்யவும். குளித்த பிறகு சருமத்தை தேய்ப்பதை விட உலர வைக்கவும். ஈரப்பதமூட்டும் பாடி லோஷனையும் பயன்படுத்துங்கள்.

நைட் மாஸ்க்

இரவில் ஃபேஸ் மாஸ்க் அல்லது க்ரீமை உங்கள் வழக்கத்தில் சேர்த்துக்கொள்ளவும். குளிர்காலத்தில் தோல் வெடிப்பு கவலை தரும்போது உங்கள் முகம், கழுத்து மற்றும் மார்பிற்கு மேல் ஈரப்பதமூட்டும் நைட் கிரீம் தடவுங்கள்.


சன்ஸ்கிரீன் பயன்பாடு

குளிர்காலத்தில் சூரிய ஒளி குறைவாக இருப்பதால் பலர் சன்ஸ்கிரீனின் முக்கியத்துவத்தை உணர்வதில்லை. எனினும் கூட உங்கள் சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்க சன்ஸ்கிரீனின் தேவை மாறவில்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

கற்றாழை பயன்பாடு

கற்றாழை இனிமையான பண்புகளைக் கொண்டுள்ளது. இது எரிச்சலூட்டும் சருமத்தை நிவர்த்தி செய்வதற்கான சரியான தேர்வாக அமைகிறது. உங்கள் சருமத்திற்கு கூடுதல் ஈரப்பதத்தை வழங்கச் சில துளி தேங்காய் அல்லது வைட்டமின் ஈ எண்ணெயைச் சேர்ப்பதன் மூலம் அதன் நன்மைகளை அதிகரிக்க செய்யும். இந்தக் கலவையானது உங்கள் சருமத்தை மென்மையாக்குவது மட்டுமல்லாமல் நச்சுகளை அகறறவும் உதவும்.

குளிர்காலத்தில் சன்ஸ்கிரீன் உபயோகிப்பதால் நன்மைகள்

மார்கழியில் மச்சும் குளிரும் என்ற சொலவடைக்கு ஏற்ப தரையில் கால் வைத்தாலே உடல் எல்லாம் ஜில்லுன்னு ஆகுது. அந்தளவிற்கு குளிர் நம்மைவாட்டி வதைக்கிறது. இதனால் சளி, இருமல், தொண்டை கரகரப்பு, காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுப் பாதிப்புகள் மட்டுமில்லை, சருமத்திலும் பல பிரச்சனைகளை இந்த குளிர் நமக்கு வழங்குகிறது.

அதிலும் குளிர்காலத்தில் வெளியில் செல்ல வேண்டிய சூழல் இருக்கும் பெண்களுக்கு சரும பிரச்சனைகள் அதிகளவில் ஏற்படுகிறது. குறிப்பாக தோல் கருமையாகுதல், முகம் வறண்டு தோல் உரிதல், உதடு வெடிப்பு போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்நேரத்தில் தான் சன்ஸ்கிரீனின் உதவியான அளப்பெரியதாக உள்ளது. ஆமாம். சூரிய ஒளியில் இருந்து தப்பிக்க வெயில் காலத்தில் தான் சன்ஸ்கிரீன் உபயோகிப்போம், குளிர்காலத்திலும் உபயோகிக்கலாம்? என்பது பலரது கேள்வியாக அமைகிறது. குளிர்காலத்தில் கட்டாயம் சன்ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும் என்பது குறித்த விபரங்கள் அறிவோம்.


குளிர்கால சன்ஸ்கிரீன்

ஹைப்பர் பிக்மென்டேஷனை எதிர்த்தல்: குளிர்காலத்தில் அதிக நேரம் வெளியில் இருக்க வேண்டிய சூழல் ஏற்படும் போது சூரிய ஒளிக்கதிர்களால் முகம் கருமையாகும். சருமம் வறண்டு தோல் சொரசொரப்பாக மாறும். சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது இந்த கரும்புள்ளிகளைத் தடுக்கவும், குறைக்கவும் உதவுகிறது.

சரும ஆரோக்கியம்: குளிர்காலத்தில் புற ஊதா கதிர்கள் சருமத்தின் செல்களைப் பாதிப்படைய செய்யும். இது சருமத்தில் எரிச்சல் வடுக்களை ஏற்படுத்தும். எனவே குளிர்ந்த சூழலில் வெளியில் சென்றாலும் சன்ஸ்கிரீனை உபயோகிக்கும் போது ஒட்டு மொத்த சருமத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

குளிர்காலத்தில் சூரிய ஒளியை குறைவாக இருந்தாலும், அதீத பனி புற ஊதா கதிர்களைப் பிரதிபலிக்கிறது. இந்நேரத்தில் நீங்கள் சன் ஸ்கிரீன் அணிவது சூரிய ஒளியில் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. முகம் மற்றும் கைகள் போன்ற பகுதிகளில், அடிக்கடி வெயிலில் வெளிப்படும் என்பதால் அந்த பாகங்களுக்கு சன்ஸ்கிரீன் தவறாமல் பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.


ஈரப்பதத்தைத் தக்க வைத்தல்: குளிர்காலத்தில் சருமம் பிரஸ்ஸாக இருக்கும் என்று நினைப்பது தவறு. வெயில்காலத்தை விட குளிர்காற்று தான் சருமத்தை சீக்கிரமே வறண்டு விட செய்கிறது. இதனால் சருமத்தில் எரிச்சல், முகப்பரு, பொலிவின்மை போன்றவை ஏற்படக்கூடும். இந்நேரத்தில் நீங்கள் கூடுதல் மாய்ஸ்சரைசர்களைக் கொண்ட சன்ஸ்கிரீன்களை உபயோகிப்பதால் சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும்.

முதுமையைத் தடுத்தல்: வெயில் காலமாக இருந்தாலும், குளிர்காலமாக இருந்தாலும் புற ஊதா கதிர்களால் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படக்கூடும். எனவே நீங்கள் இளம் வயதிலேயே உங்களது ஏற்படும் முதுமையானத் தோற்றத்தைத் தடுக்க வேண்டும் என்றால், சன்ஸ்கிரீன் உபயோகிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

Tags

Next Story