/* */

பெண்கள் முகத்தில் ரேஸர் யூஸ் பண்ணலாமா? தெரிஞ்சுக்கலாம் வாங்க…

Female facial hair growth- பெண்களுக்கு முகத்தில் முடிவளர்ச்சி என்பது அதிகரித்து வருகிறது. அதனால் முகத்தில் இருக்கும் முடிகளை அகற்ற ரேஸர் பயன்படுத்தலாமா என்பது பற்றித் தெரிந்துக்கொள்ளலாம்.

HIGHLIGHTS

பெண்கள் முகத்தில் ரேஸர் யூஸ் பண்ணலாமா? தெரிஞ்சுக்கலாம் வாங்க…
X

 Female facial hair growth- பெண்களுக்கு முகத்தில் ஏற்படும் முடிவளர்ச்சி (கோப்பு படம்)

Female facial hair growth- ஆண்களை போல் பெண்களுக்கும் முகத்தில் முடி வளரும். இதற்கு சில ஹார்மோன் ஏற்ற இறக்கங்களே காரணம். சிலருக்கு இயற்கையாகவே முகத்தில் முடி வளரும். இதில் குடும்ப வரலாரும் அடங்கும்.

முகத்தில் வளரும் முடியை ஆண்களை போல் பெண்களும் Shaving செய்யலாமா? முகத்தில் உள்ள முடிகள் உங்கள் அழகை குறைக்கும். ஆகையால் பெண்களும் ஷேவிங் அல்லது லேசர் ஹேர் ரிடக்ஷன் செய்துக்கொள்ளலாம்.


ஆனால் பரவிவரும் சில கட்டுக்கதையினால் பெண்கள் முகத்தில் ரேஸர் பயன்படுத்த யோசிக்கிறார்கள். அதாவது முகத்தில் ஷேவ் செய்தால் மீண்டும் முடி அதிகமாக வளரும் என்று சிலர் கூறுவதை கேட்டு, சில பெண்கள் Shaving செய்யலாமா செய்யக்கூடாதா என்ற சந்தேகத்தில் உள்ளனர்.

முகத்தில் Shaving செய்வது எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. நீங்கள் வேக்சிங் அல்லது த்ரெடிங் செய்யும் போது முடி அடியோடு பிடுங்கி எடுக்கப்படுகிறது. இதனால் முடி வளர்வதில் தாமதமாகிறது. ஆனால் நீங்கள் Shaving செய்யும் போது மேல் முடி மட்டும் அகற்றப்படுகிறது. இதனால் முடி விரைவில் வளர்கிறது. மேலும் நீங்கள் Shaving செய்யும் போது முடி பாதிக்கப்படாது. இதனால் முடி வளரும் போது அடர்த்தியாக வளர்வது போல் தோன்றும்.


நீங்கள் Shaving செய்யும் போது, உங்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களும் நீங்கும். சேவிங் செய்வதற்கு முன்னும் பின்னும் மாய்ஸ்சரை பயன்படுத்த வேண்டும். உணர்திறன் வாய்ந்த சருமம் கொண்டவர்கள், Shaving செய்ய வேண்டாம். இது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். மேலும் ஷேவிங் செய்யும் போது கவனமாக இருப்பது அவசியம். இல்லையெனில் முகத்தில் காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால் சேவிங் செய்வதற்கு முன் தோல் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும். அவர்கள் உங்களுக்கான தீர்வை வழங்க முடியும்.

Updated On: 31 Jan 2024 8:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு