/* */

நுரையீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுகள்- மிஸ் பண்ணாம சாப்பிடுங்க..!

Foods that Protect Lung Health- மனிதனின் உயிர்வாழ்தலுக்கு மிக இன்றியமையாத விஷயமாக நுரையீரலை பாதுகாப்பது மிக முக்கியம். நுரையீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுகளை சாப்பிடுங்கள்.

HIGHLIGHTS

நுரையீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுகள்- மிஸ் பண்ணாம சாப்பிடுங்க..!
X

Foods that Protect Lung Health- நுரையீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுகள் (கோப்பு படங்கள்)

Foods that Protect Lung Health- கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் நுரையீரலின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது. ஏனெனில் மற்ற உள் உறுப்புகளுடன் ஒப்பிடும்போது சுற்றுச்சூழலுடன் நேரடி தொடர்புள்ள உறுப்பாக நுரையீரல் அமைந்திருக்கிறது. காற்றில் கலந்திருக்கும் தொற்றுகள், தூசுக்கள் சுவாசம் மூலம் எளிதில் நுரையீரலுக்குள் ஊருடுவி பாதிப்பை ஏற்படுத்திவிடும்.


நுரையீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உண்ணும் உணவுப்பொருட்களும் உதவிபுரியும். அத்தகையவற்றுள் உணவுப்பொருட்களை ஏன் அவசியம் சாப்பிட வேண்டும் என்று தெரிந்துக்கொள்வோம்.

தக்காளி:

தக்காளியில் இருக்கும் ஆன்டி ஆக்சிடெண்டுகள் காற்றுப் பாதைகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கக்கூடியவை. ஆஸ்துமாவை தடுக்கவும் உதவுபவை. தினமும் ஏதாவதொரு வகையில் சமையலில் தக்காளி சேர்த்துக்கொள்வது நுரையீரல் நலன் காக்க உதவும்.


பூண்டு:

தினமும் பூண்டு சாப்பிடுவதன் மூலம் நுரையீரலுக்கு போதுமான அளவு அல்லிசின் கிடைக்கும். இது நுரையீரலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை கொன்று நோய்த்தொற்றுகளை தடுக்கக்கூடியது. பூண்டுவை உலரவைத்தும், நெருப்பில் சுட்டும் உட்கொள்ளலாம். ஊறுகாய் தயாரித்தும் ருசிக்கலாம். அதேவேளையில் பூண்டுவை அதிகம் சாப்பிடுவது நெஞ்சரிச்சலை ஏற்படுத்தும் என்பதால் மிதமான அளவில் உட்கொள்ள வேண்டும்.

அக்ரூட் பருப்புகள்:

நுரையீரலை சூழ்ந்திருக்கும் காற்றுப் பைகள் சுருங்காமல் இயல்பான அளவை தக்கவைத்துக்கொள்வதற்கு இந்த பருப்புகள் துணை புரியும். மேலும் அக்ரூட்டில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் தசைகளுக்கு வலிமை அளிக்கும். பெரும்பாலும் முதியவர்கள் சுவாசம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள். அவர்கள் ஒரு கைப்பிடி அக்ரூட் பருப்புகள் சாப்பிட்டு வருவது நல்ல பலனை கொடுக்கும்.

கிரீன் டீ:

கிரீன் டீ நுரையீரல் தசைகளை இலகுவாக்கி வீக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், நுரையீரல் ஆரோக்கியத்தை பேணவும் தினமும் இரண்டு கப் கிரீன் டீ பருகுவதற்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

பிரக்கோலி:

பிரக்கோலியில் இருக்கும் அதிக நார்ச்சத்து நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தை எதிர்த்து போராட உதவிபுரியும். அத்துடன் சல்போராபேன் என்னும் சேர்மம் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களையும் அழிக்க துணை புரியும்.


இஞ்சி:

நுரையீரலில் நச்சுக்கள் படியாமல் இருக்க இஞ்சி உட்கொள்வது சிறந்த வழியாகும். நுரையீரலில் இருக்கும் மாசுக்களை அகற்றும். காற்றுப்பாதையில் ஏற்படும் நெரிசலை குறைக்கவும் செய்யும். கிரீன் டீயுடன் இஞ்சியை சேர்த்தும் ருசிக்கலாம். இஞ்சியை கொதிக்க வைத்த நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு, தேன் கலந்தும் பருகலாம்.

முழு தானியங்கள்:

ஓட்ஸ், பார்லி, கைக்குத்தல் அரிசி உள்ளிட்ட முழு தானியங்களில் ஆன்டி ஆக்சிடெண்டுகள் நிறைந்திருக்கின்றன. மேலும் இவற்றில் உள்ளடங்கி இருக்கும் வைட்டமின் ஏ, செலினியம் போன்றவை நுரையீரலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தக்கூடியவை. மாசுபட்ட காற்றை சுவாசிப்பதன் விளைவாக ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும் செய்யும்.


பச்சை இலை காய்கறிகள்:

பச்சை இலை காய்கறிகள் நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு போதுமான வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. கீரை, முட்டைக்கோஸ் போன்றவற்றை எளிதாக சமைத்து சாப்பிடலாம்.

ஆப்ரிகாட்:

இந்த பழத்தில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது சுவாச குழாய்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வழிவகை செய்யும். நோய்த்தொற்று அபாயத்தையும் குறைக்கும்.

சிட்ரஸ் பழங்கள்:

ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, சாத்துக்குடி போன்ற பழங்களில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இவை சுவாச நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராடி, சுவாசத்தை மேம்படுத்தக்கூடியவை. இவற்றை காலை அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவோ அல்லது ஜூஸாகவோ தயாரித்து சுவைக்கலாம்.

Updated On: 1 Jan 2024 6:56 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  5. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  6. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  7. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  8. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  10. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்