/* */

Happy Birthday Wishes in Tamil Words பிறந்தநாள் வாழ்த்துகள் தமிழில்

நீங்கள் பிறந்தநாள் வாழ்த்துகளை தேடிக்கொண்டு இருக்கிறீர்களா? இதோ உங்களுக்காக சிறந்த கவிதைகள்

HIGHLIGHTS

Happy Birthday Wishes in Tamil Words பிறந்தநாள் வாழ்த்துகள் தமிழில்
X

பிறந்தநாள் என்பது ஒரு மனிதனின் வாழ்வில் மிக அற்புதமான நாள் அதை ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாட வேண்டும். நமக்கு பிடித்தவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்துகளை கூறி அவர்களை மகிழ்விக்கலாம்.

நீங்கள் பிறந்தநாள் வாழ்த்துகளை தேடிக்கொண்டு இருக்கிறீர்களா? மிக அருமையான பிறந்தநாள் வாழ்த்துகளை தமிழில் கொடுத்துள்ளோம்.

உன் பிறந்தநாளைப் பார்த்து

மற்ற நாட்களெல்லாம்

பொறாமைப்படுகிறது.

உன் பிறந்தநாளில்

பிறந்திருக்கிலாம் என்று.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


உங்கள் கனவுகள், எண்ணங்கள்

அனைத்தும் நிறைவேறும் படி

இந்த பிறந்தநாள் அமைந்திட

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


உண்மையான அன்பு வார்த்தைகளால்

சொல்ல முடியாது. உணர்ச்சிகளினாலும்

எண்ணங்களினாலும் மட்டுமே சொல்ல முடியும்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


பிறப்பின் நகர்வு அற்புதமானது

ஒவ்வொரு முறை வரும் போதும்

மிகவும் அழகாகிறது.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


உன்னிடம் நட்புறவாட

மொட்டும் மௌனமிழக்கும்,

மலரும் தன்னிதழ் சிதறும்..

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


உன்னுடைய எல்லா கனவுகளும் நிறைவேற

உனது இந்த பிறந்த நாளில் வாழ்த்துகிறேன்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

நட்புக்கு இலக்கணமே நீதான்

என்று சொன்னால் அது மிகையாகாது.

நண்பருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


உண்மையான அன்புக்கு

முகங்கள் தேவை இல்லை,

முகவரியும் தேவை இல்லை,

நம்மை நினைக்கும் உண்மையான

நினைவுகள் போதும்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


சின்ன சின்ன சந்தோஷங்கள்

வாழ்க்கையை அழகாக்குமாம்.

உன் பிறந்தநாளும் அப்படிதான்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


உன் கனவுகள் நிகழ்வுகளாய் மலர,

உன் உள்ளம் அன்பால் நிறைய,

உன் உடல் இளமையாக ஜொலிக்க,

இந்த பிறந்தநாள் அமையட்டும்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

நான் வாடிய தருணங்களில் எல்லாம்

எனக்காக எப்போதும் ஆறுதலாய் இருக்கும்

அன்பு உள்ளத்துக்கு

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


உன் பிறந்தநாளுக்கு

அன்பளிப்பு தேடித்தேடி

தொலைந்தே போனேன்.

கடைசிவரை கிடைக்கவில்லை எனக்கு,

உன்னைவிட விலைமதிப்பான பரிசு..

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


நம் வாழ்க்கை அழகாய் மாறுகிறது

நாம் அன்பு காட்டும் போதும்,

அன்பைப் பெறும்போதும்.

அப்படி என் வாழ்க்கையை

அழகூட்டுகிற உனக்கு

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும்

என்னுடன் துணையாய் பயணிக்கும்

அன்பு உள்ளத்திற்கு

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


என் விழியில் கலந்த உறவே

என் உயிரில் கலந்த உணர்வே

வாழும் காலமெல்லாம் உன்னோடு

நான் வாழும் வரம் தந்திடுவாயே

என் துணையே, இணையே, உயிரே..

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


நான் சோர்வுறும்போதெல்லாம்

ஆறுதலாய் தோள்கொடுக்கும்

உனக்கு இன்று பிறந்தநாள்..

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


உன்னுடன் சேர்ந்து இந்த இனிய நாளை

கொண்டாடுவதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

அன்பு சகோதரிக்கு

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


எவ்வளவு தான் சண்டை போட்டாலும்

எனக்கு ஒன்னுனா முதல்ல துடித்துப் போகும்

என் அன்பு சகோதரனுக்கு

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


வயதால் எவ்வளவு தான் வளர்ந்தாலும்

எனக்கு எப்போதும் நீ குழந்தை தான்..

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


நீங்கள் இல்லாமல் என் குழந்தை பருவத்தில்

இதை நான் ஒருபோதும் செய்திருக்க முடியாது..

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


உன் கனவுகள், ஆசைகள் எல்லாம்

உனக்கு இந்த ஆண்டு மட்டுமல்லாமல்

இனி வரும் அனைத்து ஆண்டுகளும்

நிறைவேறிட வாழ்த்துகிறேன்..

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


வெள்ளை உள்ளமே..

கொள்ளை அழகே..

உதிரும் புன்னகை,

உரித்தாகட்டும் உனக்கே..

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


இந்த உலகிலேயே சிறந்த நபருக்கு

எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


என் வாழ்வின் அன்பான காதலிக்கு

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


நீங்கள் எப்போதுமே எனக்காகவே இருந்திருக்கிறீர்கள்,

நான் எப்போதும் உங்களுக்காகவே இருப்பேன்..

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


எதற்கும் மறுக்காத என்நெஞ்சம் உருகுதடி,

உன் மையல் கொண்ட புன்சிரிப்பினிலே அன்பே..

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


உன் பேச்சின் இனிமைகளை

என் செவிகள் சுவைக்கப் பெற்றேன்..

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும்

என்னுடன் துணை நின்று

என்னை உயர்த்தினாய்.. அதற்கு என் நன்றி.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


என் பெருமை நீ!

என் அன்பு நீ!

என் எல்லாம் நீ!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என் மகனே / மகளே.


நம் குடும்பத்தில் விலைமதிப்பற்ற செல்வம் (செல்லம்) நீ.

வாழ்க்கையில் இன்றுபோல் என்றும் மகிழ்ச்சியாய்

இருக்க இறைவனை வேண்டுகிறேன்!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


உன்னை பிள்ளையாகப் பெற்றதற்கு

நான் மிகவும் பாக்கியமாகவும்,

அதிர்ஷ்டமாகவும் உணர்கிறேன்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


நீ எவ்வளவுதான் வளர்ந்துவிட்டாலும்

உன் அப்பாவிற்கும் அம்மாவிற்கும்

எப்போதும் செல்லப் பிள்ளைதான்!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என் மகனே.


மகிழ்ச்சியான இந்த பிறந்தநாள்

உனக்கு சிறப்பாகவும்,

சிரிப்பாகவும் அமையட்டும்!

என் அன்பு மகளே..


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

உலகிலேயே மிகச் சிறந்த நபரான

என் அப்பாவிற்கு என்னுடைய

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


உங்கள் மீது நான் வைத்திருக்கும்

அன்பையும் பாராட்டையும்

வார்த்தைகளால் விவரிக்க இயலாது..

இந்த பிறந்தநாளில் உங்களை வணங்குகிறேன்..

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அப்பா.


என்னுடன் துணை நின்று

என் எல்லா கனவுகளும்

நிறைவேற உதவி புரிவதற்கு நன்றி..

உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேற

இறைவனை வேண்டுகிறேன்..

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அப்பா.


எளிமையின் சிகரமான அன்பு அப்பாவிற்கு

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


இறைவன் எப்போதும் உங்களை

அன்பு, மகிழ்ச்சி, அமைதி மற்றும் ஆரோக்கியத்துடன்

வைத்திருப்பார் என்று இந்த நாளில் பிரார்த்திக்கிறேன்..

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அப்பா..

Updated On: 29 Oct 2023 8:03 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  3. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  4. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  5. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  6. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  7. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  10. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!