/* */

Hard Work Tamil-உலகை இயக்கும் அச்சாணி, உழைப்பு..! உழைப்பில்லையேல் உலகில்லை..!

உலகில் உள்ள அத்தனை உயிரினங்களும் ஒவ்வொரு நொடியிலும் உழைத்துக்கொண்டுதான் இருக்கின்றன.

HIGHLIGHTS

Hard Work Tamil-உலகை இயக்கும் அச்சாணி,  உழைப்பு..! உழைப்பில்லையேல் உலகில்லை..!
X

hard work tamil-கடின உழைப்பு (கோப்பு படம்)

Hard Work Tamil

உழைப்பு என்பது உலகை உந்தவைக்கும் அச்சாணி. நம்பிக்கை என்னும் எரிபொருளில் இயங்கும் மனித இழுபொறிகளின் செயல்திறன். வெற்றிபெற்றவர்களை மட்டுமே இந்த உலகம் கொண்டாடினாலும் தோற்றுப் போவோரையும் பெருமையுடன் சரித்திரத்தில் இடம்பெறச் செய்யும் ஒரு உன்னத செயல்.


உலகில் உள்ள எல்லா உயிரிகளும் உழைக்கின்றன. ஏனெனில் உயிர்வாழ உணவு அவசியம். அந்த உணவைப்பெறுவதற்கு தூங்கிக்கொண்டிருந்தாள் கிடைக்காது. உழைப்பு அவசியம். அந்த உணவைத்தேடிச் செல்வதே உழைப்பின் தொடக்கநிலையாகும்.

Hard Work Tamil

சிங்கம் மானை பிடிக்க உழைக்கிறது. மான் புல் மேய உழைக்கிறது. காக்கை தன் குஞ்சுகளுக்கு இரையூட்ட உழைக்கிறது, உயிரினங்களின் உழைப்பு ஒரு இலக்கை நோக்கியது. அது தேடுதல் எனும் இலக்கு. சூரிய இயக்கத்தில் பூமியும் உழைத்துக்கொண்டுதான் இருக்கிறது.

ஆண்கள் பெற்றோருக்கு மகனாக, பிள்ளைகளுக்கு தகப்பனாக, மனைவிக்கு நல்ல கணவனாக, வேலைசெய்யும் இடத்தில் நல்ல தொழிலாளியாக உழைக்கிறான்.பெண்களும் பெற்றோருக்கு மகளாக, பிள்ளைகளுக்கு தாயாக, கணவனுக்கு நல்ல துணையாக, பார்ப்பவர்கள் முன் ஒரு பிரகாசமான குடும்பத்தலைவியாய் குடும்பத்தை வழிநடத்த, பிள்ளைகளை பாராட்டி சீராட்டி நல்ல நிலைமைக்கு கொண்டு வர அவளும் தினந்தோறும் உழைக்கிறாள்.

Hard Work Tamil

கடின உழைப்பு கண்காணாத சக்தி என்பர் சான்றோர். உழைக்கத் தெரியாதவன் உருப்பட முடியாது என்பார்கள் பெரியோர். உழைக்காவிட்டால் காலத்தின் போக்கில் காணாமல் போவாய் என்பர் சாதனையாளர்கள்.


உழைப்பின் மேற்கோள்களை பார்க்கலாம் வாங்க :

தளர்ந்து விடாதே, இழக்க இனி எதுவுமில்லை என்பவனுக்கு மட்டுமே, வரலாற்றுப் பக்கத்தில் இடம் கிடைக்கும்.

பணக்காரன் ஆவது எப்படி? படத்தில், ஒரே ஒரு பாட்டில். நிஜத்தில், நீ படும் பாட்டில்.

கடந்த கால தவறுகளை நிகழ்காலத்தில் சரி செய்தால் எதிர்காலம் இனிமையாகும்.

எரித்து, உடலை உருக்கிக் கொண்டாலும், உள்ளவரை ஒளியூட்டுகிறது மெழுகு.

Hard Work Tamil


கைத்தட்டல்களும், கரகோசங்களும் உன்னை உற்சாகப்படுத்துமே தவிர, உயர்த்தி விடாது! வளர்ச்சிக்கான பாதையில் உன்னை நீயே மெருகேற்றிக் கொள்.

உன் எதிர்காலத்தைக் கண்டுபிடிக்க, பயத்தைத் தொலைத்து விடு

எதிர்காலத்தை உருவாக்க, நிகழ்காலத்தை உரமாக்கு

சவால்களைத் தொடாதவன், வாழ்க்கையைத் தொலைப்பான்.

வெற்றியின் சின்னம், வியர்வை

நீ ஒன்றை ஆழமாக விரும்பினால், அது எவ்வளவு ஆழத்தில் இருந்தாலும் அது உனக்குக் கிடைக்கும்.

நேற்றை நினைக்காதே; இன்றை இழக்காதே; நாளை நமக்கானதே.

என்று முடியும் என நினைப்பவன், தோற்பான். முடியும் என்று நினைப்பவன், ஜெயிப்பான்

Hard Work Tamil

கடின உழைப்பு திறமையானவரையும் தோற்கடிக்கும், அவர் கடினமாக உழைக்காத போது

முயற்சி செய்பவர்களால் செய்ய முடியாது என்று எதுவும் இல்லை

“கனவு நிஜமாக மாயமந்திரங்கள் தேவையில்லை…. வியர்வை, உறுதிப்பாடு, கடின உழைப்பு தேவைப்படும்….”

“தன் மீதான நம்பிக்கையும், கடின உழைப்பும் வெற்றியை ஈட்டி தரும்”

“கடின உழைப்புக்கு ஈடாக எதுவுமில்லை”

“உயர்ந்த எண்ணம், தேவையான அறிவு, கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகிய நான்கையும் பின்பற்றினால் எதையும் அடையலாம்.”

“வெற்றிக்கான மூலமந்திரம் – கடின உழைப்பு”


Hard Work Tamil

“சாதனையாளர்கள் யாரும் அதிஷ்டசாலிகள் அல்ல… அவர்கள் கடின உழைப்பாளிகள்…”

“வேலையைச் செய்வதற்கான ஒரே வழி, நீங்கள் செய்வதை விரும்புவதுதான்.”

“கடின உழைப்பு நீண்ட காலத்திற்கு பலன் தரும் – வெற்றிக்கு குறுக்குவழிகள் இல்லை.”

“நீங்கள் கடினமாக உழைக்கும் ஒவ்வொரு நாளும், நீங்கள் நல்ல செயல்களைச் செய்கிறீர்கள்.”

“சாியாக சிந்தித்து, இலக்குகளை நிர்ணயித்து, கடினமாக உழைத்து, உயரத்தை அடையுங்கள்.”

“வெற்றிக்கான ரகசியம் கடின உழைப்பும், செய்யக்கூடிய மனப்பான்மையும்தான்.”

Hard Work Tamil

“வெற்றியை நினைத்து நான் கனவு காணவில்லை…. அதற்காக உழைக்கிறேன்……”

“அகராதியில் மட்டும் தான் வேலைக்கு முன் வெற்றி இடம்பெற்றுள்ளது.”

“பிரபலமாக தான் அனைவரும் விரும்புகிறார்களே தவிர உழைக்க யாரும் தயாராக இருப்பதில்லை”

“கடினமாக உழைப்பது தவறல்ல; சரியான விஷயங்களில் கடினமாக உழைக்க வேண்டும்.”

“கடினமாக வேலை செய்யுங்கள், ஒருபோதும் கைவிடாதீர்கள்.”

“எதிர்காலம் தங்கள் கனவுகளின் அழகை நம்புவோருக்கு சொந்தமானது.”


Hard Work Tamil

“நாம் செய்யும் அனைத்து கடின உழைப்பிற்கும் நம்பிக்கையே நமது வெகுமதி.”

“கடின உழைப்பு யாருக்கும் துரோகம் செய்யாது”

“கடின உழைப்பு ஒரு நபரை மதிப்புக்குரியதாக உணர வைக்கிறது.”

“வாழ்க்கையில் மதிப்புக்குரிய எதுவும் எளிதானது அல்ல.”

“கடினமாக உழைப்பதன் மூலம் ஒரு நபர் வாழ்க்கையில் முன்வைக்கும் அனைத்து தடைகளையும் கடக்க முடியும்.”

“கடினமாக வேலை செய்யுங்கள், மகிழ்ச்சியுடன் இருங்கள், வரலாற்றை உருவாக்குங்கள்.”

Hard Work Tamil

“வெற்றி என்பது எப்போதும் மகத்துவத்தைப் பற்றியது அல்ல. இது நிலைத்தன்மை பற்றியது. தொடர் உழைப்பு வெற்றிக்கு வழிவகுக்கும். மகத்துவம் வரும்.”

“நீங்கள் நேற்று செய்ததை விட கடினமாக உழைக்க வேண்டும்.”

“இளமையில் வியர்க்காதது, முதுமையில் கண்ணீராக மாறும்.”

“கடின உழைப்பு பலன் தரும்”

“இன்று வலி, நாளை வலிமையானது”

“நான் துருப்பிடிப்பதை விட, தேய்ந்து போவதையே விரும்புவேன்.”

“வெற்றி அடைந்தவா்கள் அதிர்ஷ்டசாலிகள் அல்ல; அவர்கள் கடினமாக உழைத்தவா்கள்.


Hard Work Tamil

“நீங்கள் சரியான பாதையில் சென்றாலும், நீங்கள் அங்கேயே அமர்ந்திருந்தால், உங்கள் இலக்கை அடைய முடியாது.”

“கடின உழைப்பின்றி வளர கூடியது களைச்செடி மட்டுமே

செய்த கடின உழைப்பு சோர்வடையச் செய்த பிறகும், உழைப்பை தொடர்வதன் பெயர்தான் விடாமுயற்சி.

கடின உழைப்பு விடாமுயற்சி

Updated On: 31 Oct 2023 6:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்