/* */

Life Lesson Quotes in Tamil-வாழ்க்கையை கற்றுக்கொள்ள ஒருமுறை தோல்வி அடையுங்கள்..!

வாழ்க்கையில் வெறும் கல்வி மட்டுமே அனுபவத்தைக் கற்றுத் தராது. அனுபவம் உங்களுக்கான புத்தகம். அதை நேசித்து வாசியுங்கள்.

HIGHLIGHTS

Life Lesson Quotes in Tamil-வாழ்க்கையை கற்றுக்கொள்ள ஒருமுறை தோல்வி  அடையுங்கள்..!
X

life lesson quotes in tamil-வாழ்க்கை பற்றிய மேற்கோள்கள் (கோப்பு படம்)

Life Lesson Quotes in Tamil

வாழ்க்கை என்பது பல சவால்கள் நிறைந்தது. அதில் பல சிந்தனை உடையவர்கள் இருப்பார்கள். அதில் நல்லவர்கள், கெட்டவர்கள் கலந்துதான் இருப்பார்கள்.

அதில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்பதை அவ்வளவு எளிதாக அடையாளம் காண முடியாது. ஏனெனில் எல்லோரும் நல்லவர்களாகவே தோன்றுவார்கள். அதில் நடிப்பவர்கள் யார்? உண்மையான நல்லவர்கள் யார் என்பதை அடையாளம் காண்பதே நமது அறிவுக்கான சவால்.


நல்லவர்களை அடையாளம் கண்டுவிட்டால் தீயவர்கள் தனித்து தெரிவார்கள். அவர்களை ஒதுக்கிவிட்டு நமது பயணத்தை தொடரவேண்டும். நம்பிக்கை இல்லாத வாழ்க்கை துடுப்பில்லாத படகு போன்றது. எங்கு செல்கிறோம்? எப்படி செல்கிறோம் என்பதை அறிய முடியாத திக்கற்ற வாழ்க்கை ஆகிவிடும். அதனால் நம்பிக்கை ஒன்றுமட்டும் இருந்துவிட்டால் எதையும் சாதித்துவிடலாம்.

வாழ்க்கை பற்றிய மேற்கோள்கள்

உலகிலேயே மிக விலை உயர்ந்த விஷயம், நம்பிக்கை. அதை அடைய வருடங்கள் ஆகலாம். அது உடைய சில நொடிகளே போதும்.

தேவையில்லாத மூன்று செயல்கள்: 1. கடந்து போனதை நினைத்து இடிந்து போவது. 2. அடுத்தவரோடு ஒப்பிட்டுப் பார்த்து, துவண்டு போவது. 3. அனைவரையும் திருப்திபடுத்த நினைத்து, நம் நிம்மதியை இழப்பது.

வாழ்க்கையில் பாடங்களை கற்றுத் தருவது, பசித்த வயிரும், பணம் இல்லாத வாழ்க்கையும், உடைந்த மனமும் தான்.

எல்லாரிமும் சிரித்த முகத்துடன் பழகு. ஆனால் யாரையும் நம்பாதே.

Life Lesson Quotes in Tamil

மொட்டுக்களில் ஒளிந்திருக்கும் 'மலர்' போல, உங்கள் உள்ளங்களில் மறைந்திருக்கும் நல்ல எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்.

யார் என்ன சொன்னாலும் உன் பாதையை மாற்றாதே... ஏனெனில் உனக்கு அறிவுரை கூறும் எந்த வாயும் உனக்கு உதவப் போவது இல்லை!

அடுத்தவரின் குறைகளை களைவதைவிட, நம்மில் இருக்கும் குறைகளை களையெடுக்கலாமே.

தேவைக்கு தொடக்கம் உண்டு! ஆசைக்கு முடிவு இல்லை.

வெறும் பெருமைக்காக எதையுமே செய்யாதே! உன் மன நிறைவுக்காக, உனக்கு பிடித்ததை பெருமையோடு செய்.

என்றுமே மறக்கக் கூடாத இரண்டு: நன்றி, நன்னெறி


Life Lesson Quotes in Tamil

ஒரு விஷயம் கேட்கும் வரை தகவல், பார்க்கும் வரை நிகழ்வு, நமக்கு நடந்தால் அனுபவம். அனுபவபட்டால் மட்டுமே அதன் ஆழமும், வலியும் புரியும்.

கண்காணிக்கப்படாத ஒரு தவறு, அடுத்தடுத்த தவறுகளுக்குப் பாலம் கட்ட செங்கல் எடுத்து வைக்கிறது...

சிந்தித்து செயலாற்று சந்திக்கப் போகும் விளைவுகள் பற்றி.

நண்பன் முன் அன்பைக் காட்டு; முதியவர்கள் முன் பணிவைக் காட்டு; எதிரியின் முன் துணிவைக் காட்டு; துரோகியின் முன், வாழ்ந்து காட்டு!

நல்லோரைத் தேர்ந்தெடுத்து பழகுங்கள்! முன்னேற்றம் தானே வரும்.

Life Lesson Quotes in Tamil

விரிந்த வானைப் போல் திறந்த மனதோடு இரு.

சோகமாக இருக்கும் போது கூட சிரித்து கொண்டே இரு. உன் சிரிப்புக்காகவே உன்னை ஒருவர் நேசிக்க கூடும்.

ஒருவரின் அன்பைப் பெற, அவர்களிடம் என்றும் உண்மையாக இருங்கள்.

என்னதான் நமக்கு நீச்சல் தெரிந்திருந்தாலும், சாக்கடையில் விழுந்து விட்டால் எழுந்து வரவேண்டுமே தவிர, அங்கும் நீச்சல் அடிக்கக் கூடாது.

கொடுப்பது சிறிது என்று தயங்காதே... வாங்குபவர்க்கு அது பெரிது! எடுப்பது சிறிது என்று‌ திருடாதே... இழப்பவர்க்கு அது பெரிது.

அறிவுரை சொல்வதை குறைத்துக் கொள்... உன்னை பிறர் அலட்சியம் செய்வது குறைந்து விடும்...


Life Lesson Quotes in Tamil

நட்பாயினும் உறவாயினும் நாலடி தள்ளியே நில்லுங்கள். இடைவெளி உள்ள உறவே, இடையில் விலகாது தொடரும்!

புத்திசாலியாய் இருங்கள். முட்டாளாய் நடியுங்கள். வாழ்க்கையில் நிறைய கற்றுக்கொள்ளலாம்.

நீ ஒவ்வொரு முறை வாழ்க்கையில் வரும் போதும் நிறைய கற்றுத் தருகிறாய். இருந்தும் எங்களுக்கு உன்னை

பிடிப்பது இல்லை. நீ தான் வெற்றியின் முதல் படி. ”தோல்வி”

எதிரில் நிற்பது யார் என்பது முக்கியமில்லை. எப்படி எதிர் கொள்ள போகிறோம் என்பதே முக்கியம்.

நான் யார் தெரியுமா? என்ற கேள்வியை கேட்கும் சூழ்நிலை ஏற்பட்டால் முதலில் நீ உன்னிடம் கேட்டுப் பார்ப்பதே சிறந்தது.

கஷ்டங்கள் வந்து கொண்டே தான் இருக்கும். நாம் கடந்து சென்று கொண்டே இருப்போம். சோர்ந்து விடாதே சோர்ந்து இருந்து விடாதே.

இன்பமும் துன்பமும் ஆற்று வெள்ளம் போன்றது. நிலையாக நிற்க்காது ஓடி விடும். நமக்கு தேவை அன்பு மட்டுமே. அன்பு கொண்ட உள்ளம் மட்டுமே.

பயணம் முடிவில் கிடைக்கும் இருக்கை போன்றது வாழ்க்கை. ஓடி உழைத்து உக்காந்து சாப்பிடும்

போது முடிந்து விடுகிறது வாழ்க்கை.

கடந்து போவதெல்லாம் ஏதோ ஒன்றை கற்றுக் தராமல் போவதில்லை. அவற்றில் சில மாற்றங்கள்

சில ஏமாற்றங்கள்.


Life Lesson Quotes in Tamil

இருக்கும் போது மரியாதை வேண்டும் என்றால், பணம் வேண்டும். இறந்த பிறகு மரியாதை

வேண்டும் என்றால், நல்ல குணம் வேண்டும்.

வாக்கியங்களில் உள்ள எழுத்துக்களின் பிழையை சரி செய்துவிடலாம். வாழ்க்கையில் உள்ள பிழையை

தலை எழுந்து என்று நினைத்து வாழ பழகிக் கொள்ள வேண்டியது தான் போலும்.

ஒரே நேரத்தில் பல பறவைகள் பறக்கின்றன. ஒன்றுடன் ஒன்று முட்டி கொண்டதாக சரித்திரம் இல்லை.

ஆறறிவு எங்கே? ஐந்தறிவு எங்கே?

வாழ்க்கையில் யாரையும் மிகையாகவோ அல்லது குறையாகவோ எடை போடாதீர்கள். உலகத்தையே மூழ்கடிக்கும் கடலால் கூட ஒரு துளி எண்ணெய்யை மூழ்கடிக்க முடிவதில்லை.

ஒரு பழத்தில் எத்தனை விதைகள் என்று சொல்லி விடலாம். ஒரு விதையில் எத்தனை பழங்கள் என்று சொல்ல முடியாது. நிகழ் காலத்தை நினைத்து பெறுமையும் கொள்ளாதே. சிறுமையும் கொள்ளாதே. எதிர்காலத்தில் என்ன என்பது யாருக்கும் தெரியாது.


Life Lesson Quotes in Tamil

நடக்கையில் செருப்புக்குள் சிக்கிய கல்லும், வாழ்க்கையில் விடாமல் துரத்தும் கவலையும், உறுத்திக் கொண்டே தான் இருக்கும். நீங்கள் உதறித் தள்ளும் வரை.

திறக்க முடியாத பூட்டு எதுவும் இல்லை. தீர்க்க முடியாத துன்பம் எதுவும் இல்லை. பூட்டுக்கு சரியான சாவியை

பயன்படுத்தாதவர்கள் தான் அதிகம். துன்பத்துக்கு சரியான தீர்வை கண்டு பிடிக்காதவர்கள் தான் அதிகம்.

கடவுள் இல்லை என்று சொன்னாலும், மரணம் இல்லை என்று சொல்ல முடியாது. அப்போ கடவுள் இருக்கிறாரா இல்லையா? நம் நம்பிக்கை தான் கடவுள்.

Updated On: 28 Oct 2023 6:03 AM GMT

Related News