/* */

சூப்பரான காளான் பெப்பர் ப்ரை சாப்பிடுங்க - வீட்டில் எப்படி செய்றதுன்னு தெரிஞ்சுக்கலாமா?

Mushroom Pepper Fry - சைவத்தை விரும்பும் உணவு பிரியர்களுக்கு காளான் ஒரு வரப்பிரசாதம். அதில் காளான் பெப்பர் ப்ரை செய்தால், உங்களுக்கு சாப்பிட சாப்பிட இன்னும் சாப்பிடத் தோன்றும்.

HIGHLIGHTS

சூப்பரான காளான் பெப்பர் ப்ரை சாப்பிடுங்க  - வீட்டில் எப்படி செய்றதுன்னு தெரிஞ்சுக்கலாமா?
X

Mushroom Pepper Fry- காளான் பெப்பர் ப்ரை (கோப்பு படம்)

Mushroom Pepper Fry- நீங்கள் சாப்பிடுவது பெரும்பாலும் ஏ.சி. அறையில் செயற்கையாய் வளர்க்கும் காளான். நீலகிரியில் விளைவதுதான் இயற்கையான காளான். அதுவே உடலுக்கு உகந்தது, என்கின்றனர் நீலகிரி மாவட்ட காளான் உற்பத்தியாளர்கள். அவைசப் பிரியர்களுக்கு மட்டன், சிக்கன், மீன், முட்டை என விதவிதமான உணவுகள் இருக்கும் நிலையில், சைவப் பிரியர்களுக்கு வரப் பிரசாதமாக கிடைத்தவை காளான்கள். நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த பழங்கள் மற்றும் காய்கறிகளில் இல்லாத தாதுப் பொருளான `செலினியம்’ காளானில் உள்ளது. இந்த தாதுப் பொருள் புற்றுநோய் செல்களை அழிக்கவும் உதவுகிறது. இதய நோய் மற்றும் நீரழிவு நோய்களுக்கு சிறந்த உணவாகவும் அறியப்படுகிறது.

ஒரு கோப்பை நறுக்கப்பட்ட காளானில் 15 கலோரிகள் உள்ளன. கொழுப்பு இல்லை. 2.2 கிராம் புரதம், 2.3 கிராம் கார்போஹைட்ரேட், 0.7 கிராம் நார்ச்சத்து மற்றும் 1.4 கிராம் சர்க்கரை உள்ளது. இதனால், உடல் பருமன் ஏற்படுத்தாத உணவாக காளான் உள்ளதால், உணவுக் கட்டுப்பாடு கடைப்பிடிப்பவர்களிடம் காளானுக்கு வரவேற்பு அதிகம்.


காளான் உணவு

காளானில் புரதச் சத்தும் அதிகம் உள்ளதால், தற்போது காளானைக் கொண்டு பிரியாணி முதல் சில்லி காளான், காளான் 65, காளான் மஞ்சூரியன் உட்பட வகை வகையான உணவுகள் காளானைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. குழந்தைகள் முதல் முதியோர் வரை விரும்பி உண்ணும் காளான், பிராய்லர் கோழி வளர்ப்புபோல செயற்கையாக உற்பத்தி செய்யப்படுகிறது எனவும் நீலகிரி காளான் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

குளிர் பிரதேசத்தில் மட்டுமே விளையும் காளான் 18 முதல் 23 டிகிரி செல்சியஸ் தட்பவெப்பத்தில் மட்டுமே விளையும் என்ற நிலையில், சராசரியாக 30 டிகிரிக்கு மேல் உள்ள சமவெளிப் பகுதிகளில் விளையாது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

காளான் பிரியரா நீங்கள் இருப்பீர்கள். அல்லது உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுபவர்களாக இருப்பார்கள். அடிக்கடி உங்கள் வீட்டில் காளானை வாங்கி செய்தாலும், ஒரே மாதிரி காளானை சமைத்து போர் அடித்துவிடுகிறது. அப்படியானால் அடுத்த முறை 20 நிமிடத்தில் செய்யக்கூடிய ஒரு சுவையான மற்றும் காரசாரமான காளான் பெப்பர் ஃப்ரை செய்யுங்கள். இது சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

மிளகு – ஒன்றரை ஸ்பூன்

சீரகம் – 1 ஸ்பூன்

சோம்பு – 1 ஸ்பூன்

மல்லித் தூள் – அரை ஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

கடுகு – அரை ஸ்பூன்

உளுந்து – அரை ஸ்பூன்

பூண்டு – 10 பல்

பச்சை மிளகாய் – 1

கறிவேப்பிலை – சிறிதளவு

பெரிய வெங்காயம் – 2

இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

காளான் – 200 கிராம்

உப்பு – தேவையான அளவு

மல்லித் தழை – சிறிதளவு


செய்முறை

மிளகு, சீரகம், சோம்பு மசாலா பொருட்களை மிக்சி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும், அதில் கடுகு, உளுந்து, பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பச்சை வாசனை போனவுடன், மஞ்சள் தூள், காளான், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். கடைசியாக தயார் செய்து வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். மூடிவைத்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.

பின்னர் சிறிது கறிவேப்பிலை, மல்லித்தழை தூவி இறக்க வேண்டும். தேவைப்பட்டால் வறுத்த முந்திரிகளை கூட சேர்த்துக் கொள்ளலாம். அவ்வளவு தான் சுவையான காளான் பெப்பர் தயாராகி விடும்.

Updated On: 1 Jan 2024 7:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்