Mutton Fry Recipe - காரசாரமான மட்டன் ப்ரை செய்வது எப்படி என்று தெரிஞ்சுக்கலாமா?

Mutton Fry Recipe- மட்டன் ப்ரை செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்ளலாம் (கோப்பு படம்)
Mutton Fry Recipe - அசைவ உணவு சாப்பிடுகிறவர்களுக்கு மிலிட்டரி ஓட்டல் ஸ்டைல் அசைவ உணவுகள் மிகவும் பிடிக்கும். மிலிட்டரி ஓட்டல் அசைவ உணவுகளுக்கு என்று தனி சுவையும் மணமும் உண்டு. அதே சுவையில் உங்க வீட்டிலும் மட்டன் வறுவல் செய்ய வேண்டும் என்று நினைத்தால் இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க... சாப்பிட சாப்பிட நாக்கில் எச்சில் ஊறிக்கிட்டே தான் இருக்கும். எப்படி அதை தயார் செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
மட்டன் - அரை கிலோ
தயிர் - 150 மில்லி
கொத்தமல்லி இலை - 1 கைப்பிடி
புதினா - 1 கைப்பிடி
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 3
மஞ்சள்,பொடி - சிறிதளவு
மிளகாய் பொடி - 2 ஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூள்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 ஸ்பூன்
நெய் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, பிரிஞ்சி இலை - தாளிப்பதற்கு
சோம்பு - அரை ஸ்பூன்
செய்முறை
முதலில் மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை சுத்தம் செய்து கழுவி, அதை பேஸ்ட்டாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு அகலமான பாத்திரத்தில் மட்டனைச் சேர்த்துக் கொண்டு, அதில் அரைத்து வைத்திருக்கும் கொத்தமல்லி, புதினா இலை பேஸ்ட்டைச் சேர்க்க வேண்டும்.
அடுத்ததாக அதில் தயிர் சேர்த்து மிக்ஸ் செய்து விடுங்கள். அதையடுத்து மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லிப் பொடி, கரம் மசாலா ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
ஒரு வெங்காயத்தை மட்டும் நீளவாக்கில் நறுக்கி சேர்க்க வேண்டும், 3 பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அதோடு உப்பு சேர்க்க வேண்டும். அனைத்து மசாலாக்களும் மட்டனில் நன்கு மிக்ஸாக ஆகும்படி கலந்து விட வேண்டும்.
இந்த மட்டனை ஒரு மணி நேரம் அப்படியே ஊறவைத்து விட வேண்டும்.
ஒரு மணி நேரம் கழித்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் மற்றும் நெய்யை சேர்த்து காய்ந்ததும் சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சிஇலை, கல்பாசி சேர்த்து கலந்ததும் அதில் மீதமுள்ள இரண்டு வெங்காயத்தை நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும்.
நன்கு வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு, ஊறவைத்திருக்கும் மட்டன் கலவையைச் சேர்த்து நன்கு கிளற வேண்டும். ஒரு ஐந்து நிமிடங்கள் நன்கு சுருண்டு வதங்கிய பிறகு தான் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
மட்டனில் இருந்தே தண்ணீர் விடும். அதனால் மிகக் குறைவாக அளவு (1 சிறிய டம்ளர்) மட்டும் தண்ணீர் விட்டு நன்கு மட்டனை வேக விட வேண்டும்.
குக்கரில் வைப்பதாக இருந்தால் 6-7 விசில் வரை வைத்து எடுக்கலாம்.
மடடன் நன்கு வெந்ததும் அதன் மேல் பச்சை கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் கமகமக்கும் எச்சில் ஊறவைக்கும் மிலிட்டரி ஹோட்டல் மட்டன் ஃப்ரை ரெடி.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu