/* */

தேன் மற்றும் தயிர் இரண்டும் சேர்த்து சாப்பிட்டால் பலமாகும் உறுப்பு - எதுவென்று தெரியுமா ?

தேன் மற்றும் தயிர் இரண்டு சேர்த்து சாப்பிடுவது உடலில் உள்ள உறுப்பை பலமாக்கும். அதனால் தேன், தயிர் இரணடுமே உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது.

HIGHLIGHTS

தேன் மற்றும் தயிர் இரண்டும் சேர்த்து சாப்பிட்டால் பலமாகும் உறுப்பு - எதுவென்று தெரியுமா ?
X

தேன் மற்றும் தயிர் இரண்டும் கலந்து சாப்பிட்டால், உடல் உறுப்புகள் பலமடையும். (கோப்பு படம்)

பொதுவாக தேன் மற்றும் தயிர் நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்குகிறது .அதுபற்றி தெரிந்துக்கொள்வோம்.

தேன் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும்.பொதுவாகவே தேன் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்று. சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை தேன் மேம்படுத்துவதாக குறிப்பிடுகின்றனர். நாம் இனிப்பு செய்யும் உணவுகளில் சர்க்கரையை விட தேனை கலந்து செய்தால் இதய வளர்ச்சிதை மாற்ற அபாயத்தை குறைக்கிறது. தேனை பதப்படுத்தி சாப்பிடுவது நமக்கு எந்தப் பயனையும் கொடுப்பதில்லை. தேனை பதப்படுத்தும் போது அதில் இருக்கும் நன்மைகள் குறைகிறது. தேன் மற்றும் தயிர் இரண்டையும் சேர்த்து சாலட்டில் கலந்து சாப்பிடலாம். மேலும் கல்லீரல் நோய் பிரச்சனையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.


தயிர் ஓர் அற்புதமான உணவுப் பொருள். பாலில் இருந்து கிடைக்கும் தயிரால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இந்த தயிரை சாப்பிடுவதால் மட்டுமின்றி, சருமத்திற்கு பயன்படுத்தினாலும் நன்மைகள் கிட்டும். முக்கியமாக தயிரை சரியான நேரத்தில், சரியான பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டால் தான் உடலினுள் அற்புதங்கள் நிகழும்.

தயிரை எப்போது சாப்பிட வேண்டும், எந்த பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது, எதோடு சேர்த்து சாப்பிடக்கூடாது என்பன போன்ற விஷயங்கள் குறித்து காண்போம்.

சிறந்த நேரம் தயிரை சாப்பிட சிறந்த நேரம் மதிய வேளை தான். இரவு நேரத்தில் தயிரை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆனால் முடியாத பட்சத்தில், தயிருடன் சர்க்கரை அல்லது சிறிது மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடலாம். இதனால் செரிமானம் மேம்படும். சிறந்த பருவம் தயிரை சாப்பிடக்கூடாத பருவங்கள் என்றால் இலையுதிர் காலம், கோடைக்காலம் மற்றும் வசந்த காலங்களாகும். இதை சாப்பிட ஏற்ற பருவம் என்றால் அது குளிர்காலம் தான்.


தயிருடன் சேர்த்து சாப்பிட வேண்டிய பொருள், தவிர்க்க வேண்டிய பொருட்கள் குறித்து தெரிந்துக்கொள்வோம்.

தயிர் மற்றும் தேன்

தயிருடன் தேன் சேர்த்து சாப்பிட்டால், வாய்ப்புண் சீக்கிரம் குணமாகும். ஏனெனில் இதில் ஆன்டி-பாக்டீரியல் தன்மைகள் ஏராளமான அளவில் உள்ளது. நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் நிறம் மற்றும் மணமற்ற ரேடான் வாயு. இது நம்ம வீட்டிலேயே இருக்காம்.!

தயிர் மற்றும் ஓமம்

தயிருடன் ஓமம் சேர்த்து சாப்பிடுவதன் மூலம், வாய் புண் மற்றும் பல் வலி குணமாகும். தயிர் மற்றும் கருப்பு உப்பு இந்த கலவை உடலில் அமில அளவை சீராக பராமரிக்கவும், அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபடவும் உதவும். மேலும் இதில் பொட்டாசியம், மக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளதால், இதய பிரச்சனைகள் தடுக்கப்படும்.

தயிர் மற்றும் சர்க்கரை

தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். மற்றும் இது சிறுநீரக பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும். தயிர் மற்றும் மிளகு தயிருடன் மிளகுத் தூள் சேர்த்து சாப்பிட்டால், அதில் உள்ள புரோபயோடிக் பாக்டீரியாக்கள் மற்றும் பெப்ரைன் மலச்சிக்கல் மற்றும் அஜீரண பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.


தயிர் மற்றும் ஓட்ஸ்

ஓட்ஸை தயிர் சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய கால்சியம், புரோட்டீன் மற்றும் புரோபயோடிக்குகள் கிடைத்து, தசைகள் வலிமையடைய உதவும். தயிர் மற்றும் பழங்கள் பழங்களுடன் தயிர் சேர்த்து சாலட் போன்று தயாரித்து சாப்பிடுவதால், உடலில் ஆற்றல் அதிகரிக்கும். தயிர் மற்றும் மஞ்சள் மற்றும் இஞ்சி இந்த கலவையில் ஃபோலிக் அமிலம் உள்ளது.

இது குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது.


தயிர் மற்றும் ஆரஞ்சு ஜூஸ்

இந்த கலவை மூட்டு வலியைக் குறைக்க உதவும் மற்றும் இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், முதுமையைத் தடுக்கும். தயிர் மற்றும் சீரகம் தயிருடன் சீரகத்தை பொடி செய்து கலந்து சாப்பிட்டால், அது உடல் எடை குறைய உதவும்.

தயிர் மற்றும் நட்ஸ்

தயிருடன் நட்ஸ் சேர்த்து சாப்பிடவே கூடாது. ஏனெனில் இவை இரண்டிலுமே புரோட்டீன் அதிகம் இருப்பதால், அது செரிமான மண்டலத்திற்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கும். தயிர் மற்றும் சீஸ் அதேப் போல் தயிருடன் சீஸ் சேர்த்தும் சாப்பிடக்கூடாது.

தயிர் மற்றும் மீன்

மீன் சாப்பிட்டால், அப்போது தயிர் சாதத்தை சாப்பிடாதீர்கள். இதுவும் ஒரு மோசமான கலவையாகும். தயிர் மற்றும் வாழைப்பழம் முக்கியமாக தயிருடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடக்கூடாது.

Updated On: 17 Jan 2024 7:41 AM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  4. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  6. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  7. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  8. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  9. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?