Qualities of Intelligent People- புத்திசாலிகளின் குணங்கள் என்னவென்று தெரியுமா?

Qualities of Intelligent People- புத்திசாலிகளின் குணங்கள் (கோப்பு படம்)
Qualities of Intelligent People-- புத்திசாலிகளை கண்டறிய உதவும் சில குணங்கள்
புத்திசாலிகளுக்கு எப்போதும் தோல்வி கிடையாது. விடாமுயற்சியுடன் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தேடல் இருக்க வேண்டும்
நம்மில் சிலர் நாம் என்ன செய்தாலும் நீ என்ன பெரிய புத்திசாலியா? இதெல்லாம் உனக்கு தேவையா? என கிண்டல், கேலி செய்வார்கள். இந்த வார்த்தைகளில் பல அர்த்தங்களும் உண்மைகளும் மறைந்துள்ளது. ஆம் அனைவராலும் சில விஷயங்களை எளிதில் புரிந்துக் கொள்ளவும், அதை செயல்படுத்தவும் முடியாது. அதே சமயம் உண்மையிலேயே புத்திசாலிகள் சில நடத்தைகள் மற்றும் பண்புகளை வெளிப்படுத்துவார்கள் என உளவியல் ஆய்வுகள் கூறுகின்றனர். இதோ அவற்றில் சில குணங்கள் என்னென்ன என்பது குறித்து நாமும் அறிந்துக் கொள்வோம்.
புத்திசாலியாக இருப்பதற்கான சில அறிகுறிகள்:
ஆர்வம்: குழந்தைகளாக இருக்கும் போது சில விஷயங்களைப் பற்றி ஆராய்வதில் ஆர்வம் அதிகம் இருக்கும். அதே ஆர்வம் வயதாகும போது பலருக்கு இருக்கக்கூடும். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் புதிய விஷயங்களையும், சுற்றுப்புறங்களையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகம் காட்டுவார்கள். இந்த நிலை கடைசி வரை தொடர்ந்தால் நீங்கள் புத்திசாலி தான். சில சந்தர்ப்பங்கள் எதையும் செய்யவிடவில்லை என்று காரணம் கூறுவது தவது. அதையும் ஏன்? எப்படி? என ஆராயும் போது தான் உங்களது மூளையின் செயல்திறன் அதிகரிக்கிறது. அணுகுமுறை:பெண்களின் புத்திசாலித்தனத்தின் மற்றொரு அடையாளம் அணுகுமுறை தான். எந்த இக்கட்டான சூழலையும் நீங்கள் எப்படி அணுகுதலோடு அதை எப்படி தீர்க்கிறீர்கள்? என்பதைப் பொறுத்து உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும்.
நுண்ணறிவு:ஆண் மற்றும் பெண் இருவருக்கும் நுண்ணறிவு திறன் இருப்பதைப் பொறுத்தும் ஒருவரின் புத்திசாலித்தனத்தைக் கணக்கிடமுடியும். குறிப்பாக சமூக சிக்கல்களை வழிநடத்தவும் மற்றும் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை உறவுகளை நியாயமான மற்றும் உணர்ச்சியுடன் நிர்வகிக்கக்கூடிய திறன் இருக்க வேண்டும். விமர்சன சிந்தனை:புத்திசாலிக்களுக்கான மற்றொரு அடையாளம் விமர்சன சிந்தனை.உங்களது வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களைத் தெளிவாகவும் நியாயமாகவும் சிந்தித்து செயல்பட வேண்டும். ஒரு தலைபட்சமாக செயல்பட்டு கருத்துக்களை கூறுவது புத்திசாலிகளுக்கு அழகில்லை.
திறந்த மனப்பான்மை: புத்திசாலித்தனத்தின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று. தனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் ஒரு போதும் இருக்கக்கூடாது. உலகம் முழுவதும் கற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்கள் கொட்டிக்கிடப்பதால்,எப்போதும் திறந்த மனப்பான்மையுடன் எதையும் கற்றுக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
பணிவு:பெரும்பாலும் கவனிக்கப்படாத புத்திசாலிகளின் அறிகுறிகள் ஒன்று பணிவு. எந்த சூழலிலும் புதிய அனுபவங்களையும், செயல்களையும் கற்றுக்கொள்ள வேண்டும். இதோடு எங்கும் நான் என்கிற கர்வம் இருக்கக்கூடாது.
விடாமுயற்சி: புத்திசாலிகளுக்கு எப்போதும் தோல்வி என்பதே கிடையாது. விடாமுயற்சியுடன் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தேடல் இருக்க வேண்டும். வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கும் பண்புகள் புத்திசாலிகளிடம் அதிகமாக வெளிப்படும்.
சுய ஒழுக்கம்: வாழ்க்கையில் முன்னேறுவதற்கும், மற்றவர்களின் மரியாதையைப் பெற வேண்டும் என்றால் சுய ஒழுக்கம் முக்கியம். இந்த நற்குணம் எந்தவொரு தடைகளைத் தாண்டி, நீண்ட கால இலக்குகளை அடைவதற்கு உங்களுக்குப் பேருதவியாக இருக்கும்.
வாழ்நாள் முழுவதும் கற்றல்: உங்களது கல்வி மற்றும் திறமையால் உச்சத்தை அடைந்தாலும் இன்னும் கற்றுக்கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது என்ற எண்ணம் அவசியம் இருக்க வேண்டும். எப்போதும் தங்கள் அறிவை விரிவுபடுத்தவும், அவர்களின் திறன்களை மேம்படுத்தவும், தங்களைச் சுற்றியுள்ள உலகத்தை நன்கு புரிந்துகொள்ளவும் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.
தோல்வி பொருட்டல்ல: ஒரு மனிதனின் வாழ்வில் வெற்றி தோல்வி என்பது சகஜம் என்பதற்கான உதாரணமாக புத்திசாலிகளை கருதலாம். மனிதன் எனும் அடிப்படையில் நாம் அனைவரும் தோல்வியை காண விரும்புவதில்லை. ஆனால் புத்திசாலிகள் தோல்வியை கண்டு அஞ்சுவதில்லை. அவர்கள் தோல்வியை சந்தித்தால் அதுவே வெற்றிக்கான முதல் படி என எண்ணி அவற்றை தாண்டிச் சென்றுவிடுவார்கள்.
தீய எணணங்கள் இல்லை: புத்திசாலிகள் தீய எண்ணங்களை அகற்றி நல்ல எண்ணங்களை உள்வாங்கிக்கொள்வார்கள். நாம் எப்பொழுது தீய எண்ணங்களை உள்வாங்கிக் கொள்கின்றோமோ அந்த நாள் முதல் நம் வாழ்வில் தீய விடயங்களே முன்னிலை வகிக்கும்.
விமர்சனங்களுக்கு அஞ்சுவதில்லை: சுற்றியுள்ளவர்கள் தம்மைப் பற்றி என்ன நினைக்கின்றனர் என புத்திசாலிகள் ஒருபோதும் எண்ணமாட்டார்கள். மற்றவர்களுக்காக தமது இயல்பை மாற்றிக்கொள்ள முயற்சிக்க மாட்டார்கள். இவர்கள் தம்மைச் சுற்றி அறிவுள்ள மக்களையே வைத்துக்கொள்வார்கள்.
நேரத்தை மதிப்பவர்கள்: புத்திசாலிகளுக்கு நேரம் பொன்னானது. எதனை, எப்பொழுது, எவ்வாறு, எங்கு செய்ய வேண்டுமென சரிவர பிரித்து வைத்திருப்பார்கள். அதனால் எதனையும் திட்டமிட்டே செய்வார்கள். வேலையை இலகுவாக செய்துமுடிக்க திட்டமிடல் என்பது மிகவும் முக்கியம். அந்தவகையில், அவர்களின் சரித்திரத்தில் நேரத்தை வீணடிக்கும் விடயங்களுக்கு இடமில்லை.
எதிலும் பொறுமை, நிதானம்: அவசர உலகில் நாமும் சேர்ந்து அவசரமாக சென்று கொண்டிருக்கின்றோம். அதாவது சொல்லப் போனால் விரைவான முடிவுகளை எதிர்பார்க்கின்றோம். அவசர முடிவுகளின் விளைவு தோல்விதான். ஒரு விடயத்தின் முடிவை அறிய அவசரப்படுகின்றோம். செய்தது சரியா தவறா என்றுகூட பார்ப்பதில்லை. இந்த சந்தர்ப்பத்தில் சகல முடிவுகளும் தோல்வியைத்தான் சந்திக்கின்றன. ஆனால் புத்திசாலிகள் அவசர முடிவுகளை எதிர்பார்ப்பதில்லை. எதிலும் பொறுமை மற்றும் நிதானத்தை கடைப்பிடிப்பார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu