/* */

தைத்திருநாளும் புகழ்பெற்ற கும்பகோணம் பித்தளை பாத்திரங்களும்...! - மகத்துவம் தெரியுமா உங்களுக்கு?

Thai Thirunal, Kumbakonam vessels-தைத்திருநாளும் புகழ்பெற்ற கும்பகோணம் பித்தளை பாத்திரங்களும் குறித்த மகத்துவம் தெரிந்துக் கொள்வோம்.

HIGHLIGHTS

தைத்திருநாளும் புகழ்பெற்ற கும்பகோணம் பித்தளை பாத்திரங்களும்...! - மகத்துவம் தெரியுமா உங்களுக்கு?
X

Thai Thirunal, Kumbakonam vessels - புகழ்பெற்ற கும்பகோணம் பித்தளை பாத்திரங்கள் குறித்து அறிவோம். (கோப்பு படம்)

Thai Thirunal, Kumbakonam vessels- கும்பகோணம் என்றாலே வெற்றிலை, ஐம்பொன் சிலைகள் மற்றும் கோவில்களுக்கு மட்டுமில்லை தாராசுரம் பித்தளை பாத்திரங்களுக்கும் புகழ்பெற்றது.

“தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பார்த்து சொல்லடியோ, ....போடா எல்லாம் விட்டு தள்ளு பழச எல்லாம் விட்டு தள்ளு” என்ற பாடல்கள் தான் தை திருநாள் ஆரம்பித்தாலே நமது காதுகளை இனிமையாக்கும். இவற்றைக் கேட்டாலே நம்மை அறியாமலே மகிழ்ச்சியில் மனம் துள்ளிக் குதிக்கும். இந்த சந்தோஷத்தோடு நம்முடைய உழவர் திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை ஒவ்வொருவரும் மேற்கொள்ளுவோம். இதில் முக்கியமான ஒன்று தான் பொங்கல் வைப்பதற்காக வாங்கப்படும் பானைகள்.

முன்பெல்லாம் நாம் மண்பானைகளில் தான் பொங்கல் வைப்போம். ஆனால் இன்றைக்கு அனைவராலும் பின்பற்ற முடியவில்லை. சிலர் மட்டுமே அதைப் பின்பற்றி வருகின்றோம்.. அதே சமயம் இதற்கு மாற்றாக பித்தளை பானைகள் தான் பொங்கலில் பிரதானமாக அமைகிறது. புதுமணத்தம்பதிகளுக்கு தாய் வீட்டு பொங்கல் சீர் கொடுப்பதற்காக மற்றும் வீடுகளில் பொங்கல் வைப்பதற்காக ஆர்வத்துடன் பித்தளை பானைகள் வாங்குவதைப் பார்த்திருப்போம். இதற்காக உங்களது ஊர்களில் பொங்கல் பித்தளை பாத்திரங்கள் விற்பனை செய்யப்படும். இருந்தாலும் நாம் புகழ்பெற்ற கும்பகோணம் பித்தளை பானைகள் மற்றும் அவற்றின் சிறப்புகள் குறித்து தற்போது அறிந்துக் கொள்வோம்


கும்பகோண பித்தளை பாத்திரங்கள்:

கும்பகோணம் என்றாலே வெற்றிலை, ஐம்பொன் சிலைகள் மற்றும் கோவில்களுக்கு மட்டுமில்லை தாராசுரம் பித்தளை பாத்திரங்களுக்கும் புகழ்பெற்றது.. தலைமுறை தலைமுறையாக கும்பகோணத்தில் தாராசுரம், நாச்சியார் கோவில், எலுமிச்சங்காபாளையம், சுவாமிமலை, மாங்குடி, திருநாகேஸ்வரம், அண்ணலக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 700 குடும்பங்கள் பித்தளைப் பாத்திரங்களைத் தயார் செய்து வருகின்றனர். விதவிதமான டிசைகளில் , நல்ல தரத்துடன் செய்யப்படும் இந்த பித்தளை பாத்திரங்கள் தான் பொங்கலில் தனிச்சிறப்பு. தமிழகத்தின் பல இடங்களில் பித்தளைப் பாத்திரங்கள் விற்பனை செய்தாலும் இந்த கும்பகோணம் தாராசுரம் பாத்திரத்திற்கென்று தனி மவுசு உள்ளது. தமிழகம் முழுவதும் இந்த பானைகள் விற்பனைக்குகொண்டு வரப்பட்டாலும், தஞ்சை, கடலூர், சிதம்பரம், கும்பகோணம், உள்ளிட்ட பல சோழ நாடுகளில் மிகவும் புகழ்பெற்றதாக விளங்குகிறது.

உழவர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் தை திருநாளை முன்னிட்டு, ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே பானைகளை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். குறிப்பாக புதுமணத் தம்பதிகளுக்கு தாய் வீட்டிலிருந்து பொங்கல் சீர் கொடுப்பது ஐதீகம் என்பதால் விதவிதமான மற்றும் புதிய டிசைன்களில் வரக்கூடிய பானைகளை வாங்குவதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. முன்னதாக இந்த பானைகள் தயாரிக்கப்பட்டிருந்தாலும், பொங்கல் பண்டிகைக்காக இரவு,பகல் பாராமல் தயாரிப்புப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பொங்கலுக்கு இன்னமும் 10 நாள்கள் உள்ள நிலையில், அடுத்த வாரம் முதல் பொங்கல் பானை விற்பனை படுஜோராக இருக்கும். நீங்களும் இந்த தைத்திருநாளில் இந்த கும்பகோணத்து பொங்கல் பானை வாங்கி மகிழ்ச்சியோடு கொண்டாட மறந்துவிடாதீர்கள்.


பொங்கல் பண்டிகைக்குத் தயாராகும் கிராமங்கள்!.

தைப் பொங்கல் என்றாலே நகரத்திலிருந்து கிராமத்திற்குத் தான் படையெடுக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் அனைவருக்கும் எழக்கூடும்.

“தைத்திருநாள், தமிழர் திருநாள், தைப் பொங்கல், சூரிய பொங்கல்“ என அனைத்துப் பெயர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது தான் தை முதல் நாள் கொண்டாடக்கூடிய பொங்கல் திருநாள். தீபாவளி, புத்தாண்டு போன்ற பண்டிகைகளை உலகின் எங்கு இருந்தாலும் நாம் சிறப்பாக கொண்டாடி விடுவோம். ஆனால் தைப் பொங்கல் என்றாலே நகரத்திலிருந்து கிராமத்திற்குத் தான் படையெடுக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் அனைவருக்கும் எழக்கூடும்.

உழவர்களுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் பண்டிகைகளை அங்கு கொண்டாடுவதில் எவ்வித தவறும் இல்லை. குறிப்பாக கிராமத்தில் பொங்கலுக்கு முந்தைய வாரத்தில் இருந்தே கொண்டாட்டங்கள் களைக்கட்டும். வீட்டிற்கு வெள்ளையடிப்பது முதல் புத்தாடைகளை வாங்குவது என பொங்கலுக்கு ஏற்பாடுகள் தயாராகும்.

நாம் எந்த பண்டிகைகளைக் கொண்டாடினாலும், முதலில் கோலங்களில் இருந்தது தான் ஆரம்பிப்போம். ஒவ்வொரு பண்டிகைக்கும் ஏற்றவாறு கோலங்கள் போட வேண்டும் என்ற தேடல்கள் இருக்கும். அதிலும் கிராமத்துக் கொண்டாட்டங்களில் பெண்கள் போட்டிப் போட்டுக் கொண்டு என்ன கோலங்களை வாசலில் போடலாம் என்ற தேடலில் இருப்பார்கள். இதே மட்டுமின்றி பொங்கலுக்கான பராம்பரிய சேலைகளை வாங்குவதிலும் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டனர். மேலும் வீடுகளில் உள்ள பெண்கள், தேவையில்லாத பொருள்களையெல்லாம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள். மேலும் வாசல்களில் மாவிலைத் தோரணங்கள், மஞ்சள் மற்றும் அம்மங்காப்பு செடிகளைத் தோரணமாக கட்டுவார்கள்.


பழங்காலத்தில் கிராமத்துப் பொங்கல்:

இன்றைக்குத் தான் கிராமத்திலும் வீடுகளின் அமைப்பு மாறிவிட்டது. மார்பிள், டைல்ஸ் கற்கள் பதித்த மாடி வீடுகள் பெரும்பாலும் வந்துவிட்டது. ஆனால் முன்பெல்லாம் அப்படியில்லை. பெரும்பாலும் வீடுகள் குடிசைகளாகத் தான் இருக்கும். இதனால் தான் ஆண்டிற்கு ஒருமுறை அதை புதுப்பிப்பார்கள். மண் தரை என்பதால் சாணம் மற்றும் கரம்பை மண் சேர்த்து மொழுகி அழகுப்படுத்துவார்கள்.

மேலும் சுண்ணாம்பு பால் கொண்டு வீட்டு திண்ணையில் விதவிதமாக சிக்கு கோலம் போடுவார்கள். அதிலும் இந்த சிக்கு கோலத்திற்கும் பெண்களின் வாழ்க்கையும் தொடர்பு இருக்கிறதாம். வளைவு நெளிவுகளையும், சிக்கல்களையும் சமாளித்து எப்படிகோலமிடுகிறார்களோ? அதைப் போன்று குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களையும் சமாளிக்கும் திறன் பெண்களிடம் உள்ளது என முன்னோர்கள் தெரிவிக்கின்றனர்.

இதோடு மட்டுமின்றி வீடுகளில் உள்ள பழைய துணிகள் மற்றும் பொருள்களையெல்லாம் அப்புறப்படுத்தி கிராமத்து மத்தியில் வைத்து எரிப்பார்கள். மேலும் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் புத்தாடைகள் எடுத்துக்கொடுத்து பொங்கல் வைத்து வழிபாடுகள். கிராமம் என்றாலே மாடுகள் இல்லாமல் இருக்காது. மாட்டுப்பொங்கல் தினத்தன்று மாடுகளைக் குளிக்க வைத்து, கொம்புகளில் வண்ணம் தீட்டி, கலர் பொட்டிட்டு தங்களது குழந்தைகள் போன்று பராமரித்துப் பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.


இதோடு மட்டுமின்றி கிராமத்து மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போட்டிகள் வைத்துக் கொண்டாடுவார்கள். மேற்கூறியுள்ள பழக்கங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிட்டாலும், இன்னமும் சில கிராமங்களில் ஊரே சேர்ந்து விதவிதமான போட்டிகளை வைத்துக் கொண்டாடும் வழக்கத்தில் உள்ளனர். ஊர் முழுவதும் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் இதற்காக வரி போட்டு பொங்கல் திருவிழாவை 3 நாள்களும் கொண்டாடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

வருகின்ற இந்த தைத்திருநாளை நீங்களும் வயல்வெளிகளில் இயற்கையோடு இயற்கையாக கிராமங்களுக்குச் சென்று கொண்டாடுங்கள். நிச்சயம் ஒரு புது அனுபவமாக உங்களுக்கு இருக்கும் என்பது தான் நிதர்சன உண்மை.

Updated On: 5 Jan 2024 6:25 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்