/* */

Using a water purifier- வாட்டர் ப்யூர்பையர் பயன்படுத்தறீங்களா? - அதைப்பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்குங்க!

Using a water purifier- வாட்டர் ப்யூர்பையர் பயன்படுத்துவது இப்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுபற்றிய சில விவரங்களை இங்கு தெரிந்துக் கொள்வோம்.

HIGHLIGHTS

Using a water purifier- வாட்டர் ப்யூர்பையர் பயன்படுத்தறீங்களா? - அதைப்பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்குங்க!
X

Using a water purifier- வாட்டர் ப்யூர்பையர் குறித்து தெரிந்துக்கொள்வோம் (கோப்பு படம்)

Using a water purifier- சுகாதாரமான குடிநீர் என்பது மனித உடலின் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமானது. நல்ல காற்றை சுவாசிப்பது போல நல்ல குடிநீரும் மனிதர்களுக்கு மிக முக்கியமான, அத்யாவசிய தேவையாக இருக்கிறது. அதே வேளையில் அந்த குடிநீரில் இருக்க வேண்டிய அனைத்து சத்துகளும் இருப்பதும் மிக அவசியமாகிறது. குடிநீர் குளிர்ச்சியாக, தொண்டைக்கு இதமாக, மனதுக்கு நிறைவாக இருப்பது மட்டுமின்றி அது பரிபூரணமான தூய்மை நீராகவும் இருப்பதும் ஆரோக்கியமானது.

குடிநீர் சுத்திகரிப்பு கருவியை வாங்குவதற்கு முன்பு, உங்கள் வீட்டில் இருக்கும் தண்ணீரின் தன்மையை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். உங்களுடைய குடிநீர் ஆதாரம் நீர்நிலைகளில் இருந்து பெறப்படும் தண்ணீரா அல்லது நிலத்தடி தண்ணீரா என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். நோய்க்கிருமிகளால் அந்த தண்ணீர் மாசுபட்டிருந்தால் யு.வி. அல்லது யு.எப். போன்ற அம்சங்கள் கொண்ட வாட்டர் பியூரிபையரை தேர்ந்தெடுக்கலாம்.

தண்ணீரில் அதிகப்படியான உப்பு இருந்தால் யு.வி. அல்லது யு.எப். உடன் கூடிய ஆர்.ஓ. சுத்திகரிப்பு கருவியை தேர்ந்தெடுக்கலாம். சில வகை தண்ணீர் சுத்திகரிப்பு கருவிகளின் இயக்கத்தில் மின்சாரம் முக்கியப் பங்கு வகிக்கிறது. மின்சாரம் இல்லாமல் வேலை செய்யக்கூடிய கருவிகளும் கிடைக்கின்றன.

யு.வி. அல்லது ஆர்.ஓ. சுத்திகரிப்பான்கள் மின்சாரம் இல்லாமல் இயங்காது. எனவே அடிக்கடி மின்தடை ஏற்படும் பகுதிகளில் வசிப்பவர்கள், மின்சாரம் இல்லாமல் வேலை செய்யக்கூடிய அல்லது குறைந்த மின் சக்தியை பயன்படுத்தக்கூடிய சுத்திகரிப்பு கருவிகளை தேர்ந்தெடுப்பது நல்லது.

தண்ணீர் அழுத்தம் அதிகம் உள்ள இடங்களில் சுத்திகரிப்பான்களை அமைக்க வேண்டும். 2 வெப்பத்தை வெளியிடும் பொருட்களுக்கு அருகிலோ அல்லது நேரடி சூரிய ஒளி படும் இடங்களிலோ தண்ணீர் சுத்திகரிப்பு கருவியை நிறுவக்கூடாது.


பெரும்பாலான சுத்திகரிப்பு கருவிகளில் பயன்படுத்தப்படும் வடிகட்டி, பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டிருக்கும். அதிகமான வெப்பத்தால் அது சிதைந்து விடும். அதில் உள்ள தண்ணீரை குடிக்கும்போது ஆரோக்கிய சீர்கேடுகள் உண்டாகும்.

குடிநீர் சுத்திகரிப்பு கருவியில் உள்ள வடிகட்டியை அடிக்கடி கழற்றி சுத்தம் செய்யும் வசதி உள்ள இடத்தில் அதை பொருத்துவது சிறந்தது.

உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி நீங்கள் விழிப்புடன் இருந்தால், உங்கள் உணவு மற்றும் பானங்களில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்பது அவசியம். இந்த சிறப்பு கவனம் ஒரு நல்ல தரமான வாட்டர் பியூரிஃபையர்களையும் (Water purifier) உள்ளடக்கியது. இது பல நிலைகளில் தண்ணீரை சுத்தப்படுத்துகிறது. தாதுக்களும் அவற்றில் தக்கவைக்கப்படும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

சிறந்த வாட்டர் பியூரிஃபையர் பற்றிய அனைத்து வகையான தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் அவை வீட்டு உபயோகத்திற்கு ஏற்றவை. இவை அனைத்தும் சிறிய அளவில் வருகின்றன.

குடிநீர் சுத்திகரிப்பு கருவியில் பொருத்தப்படும் வடிகட்டியில், வண்டல் வடிகட்டி, கார்பன் வடிகட்டி, யு.வி. வடிகட்டி, ஆர்.ஓ. வடிப்பான் கள் என பல வகைகள் உள்ளன. உங்கள் வீட்டில் உள்ள தண்ணீரின் தரத்திற்கு ஏற்ற வடிகட்டி பொருத்தப்பட்டுள்ள சுத்திகரிப்பு கருவியை தேர்ந்தெடுப்பது நல்லது.

குளோரின், காப்பர், இரும்பு, ஈயம். பி.எச். சோதனைகளை செய்த பிறகு குடிநீர் சுத்திகரிப்பு கருவியை வாங்குவது நல்லது. சுத்திகரிப்பு கருவியில் உள்ள வடிகட்டியை அவ்வப்போது மாற்றி அமைக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் குடிநீர் சுத்திகரிப்பு கருவியை அமைக்க வேண்டும். தண்ணீரை நேரடியாக பயன்படுத்துவதை தவிர்த்து. தொட்டி அமைத்து அதில் நீரை சேகரித்து பின்னர் அதை கத்திகரிப்பு கருவி மூலம் சுத்தப்படுத்தலாம்.

Updated On: 20 Dec 2023 8:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்