/* */

Valaikappu in Tamil-வளைகாப்பு ஏன் செய்கிறோம்..? அறிவியலுங்க..அறிவியல்..!

வளைகாப்பு செய்வது ஏதோ சாதாரண காரணமாக எண்ணிவிடவேண்டாம். அதற்கு முக்கிய காரணங்கள் உள்ளன. அவைகள் என்ன என்று தெரிந்துகொள்வோம்,வாங்க.

HIGHLIGHTS

Valaikappu in Tamil-வளைகாப்பு ஏன் செய்கிறோம்..? அறிவியலுங்க..அறிவியல்..!
X

valaikappu in tamil-வளைகாப்பு சடங்கு (கோப்பு படம்)

Valaikappu in Tamil

மிகப்பழமையான இந்து மதத்தின் பல பாரம்பர்ய சடங்குகள் மனிதனின் வாழ்வோடு ஒன்றிய ஒரு அறிவியல் கோட்பாட்டுடன் தொடர்புடையதாக இருக்கிறது. மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை 41 முக்கியமான சடங்குகளை செய்ய வேண்டும் என நமது சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.

Valaikappu in Tamil


அதில் ஒன்று தான் குடும்பத்தின் எதிர்கால சந்ததியை கருவில் சுமக்கும் பெண்ணிற்கு நடத்தப்படும் “வளைகாப்பு” சடங்காகும். இந்த வளைகாப்பு சடங்கின் முக்கியத்துவம் குறித்தும், அதை எப்படி செய்ய வேண்டும் என்பதையும் இங்கு அறிந்து கொள்ளலாம் வாங்க.

வளைகாப்பு சடங்கு” என்பது நமது முன்னோர்கள் வகுத்த ஒரு அறிவியல் பூர்வமான சடங்காகும். ஏழாவது அல்லது ஒன்பதாவது மாதங்களில் உறவினர்கள் சூழ வளைகாப்பு நடத்தப்படுவதால் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பற்றிய பயம் அகன்று மனஅழுத்தங்கள் நீங்கி மிகுந்த தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் உருவாக்குகிறது. இச்சடங்கின் போது பல சத்துமிக்க தானியங்களைக் கொண்டு செய்யப்படும் உணவுகள் கர்ப்பிணி பெண்ணுக்கும், அதன் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் போஷாக்கு அளிக்க கூடியதாகவும் இருக்கிறது.


Valaikappu in Tamil

நமது தமிழ் சித்தர்கள் கண்டுபிடித்த “வர்மக்கலை” தத்துவப்படி பெண்களின் இரண்டு கைகளில் அணிவிக்கப்படும் வளையல்களால் கைகளில் இருக்கின்ற வயிறு மற்றும் கருப்பையை இயக்கும் வர்ம புள்ளிகள் தூண்டப்பெற்று பெண்ணுக்கும், பிறக்க போகின்ற குழந்தைக்கும் உடல்நலம் மேம்படுத்தப்படுகிறது.

மேலும் 7 அல்லது 9வது மாதத்தில் கருவில் இருக்கும் குழந்தை தாய் அணிந்திருக்கும் வளையல் சத்தத்தை தொடர்ந்து கேட்பதால் அக்குழந்தையின் மூளை வளர்ச்சி தூண்டப்படுகிறது என்கிற நமது முன்னோர்கள் கண்டுபிடித்த அறிவியல் உண்மையை நவீன மேலை நாட்டு அறிவியல் ஆய்வாளர்களும் அது உண்மை என்பதை தங்களின் ஆய்வுகளின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

Valaikappu in Tamil

சரி..சரி இப்போது வளைகாப்பு சடங்கை செய்யும் முறை எப்படின்னு பார்க்கலாமா?

வளைகாப்பு என்பது பொதுவாக கர்ப்பம் தரித்த பெண்களின் 7 அல்லது 9ம் மாதத்தில் ஒரு நல்ல நாளில்,சுப முகூர்த்த நேரத்தில் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சியாகும். இந்த தினத்தில் கர்ப்பிணிப் பெண்கள் புதிய பட்டுப்புடவை உடுத்தி, உறவினர் பெண்களால் நன்கு அலங்கரிக்கப்பட்டு வளைகாப்பு சடங்கு நடத்தும் இடத்தில், கணவரோடு அமரவைக்கப்பட வேண்டும்.

இரண்டு குத்து விளக்கில் தீபமேற்றி, பல்வேறு வகையான பூக்கள், பழங்கள், இனிப்புகள், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல் மற்றும் சீர்வரிசை போன்றவை வைக்கப்பட்டு, கேசரி, சாம்பார் சாதம், தேங்காய் சாதம் போன்ற பல வகையான கலவை அன்னங்களும் படைக்கப்பட்டு வைக்கப்பட்ட பின்பு, முகூர்த்த நேரத்தில் வளைகாப்பு நடத்தப்படும். பெண்ணுக்கு உரிய தாய்மாமன் அனைத்து கெடுதல்களும் நீங்கவேண்டும் என்று கருதி தேங்காய் உடைக்க வேண்டும்.


Valaikappu in Tamil

இதன் பின்னர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் கருவுற்ற பெண்ணின் கணவர், தனது மனைவியான கர்ப்பிணிக்கு மாலை அணிவித்து, நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து, இரு கைகளிலும், கன்னங்களிலும் சந்தனத்தை நலுங்கு பூச வேண்டும். பின்பு இரு கைகளிலும் வளையல் அணிவித்து, பன்னீர் தெளித்து, அறுகரிசி படைத்து தனது மனைவியையும், கருவிலிருக்கும் குழந்தையையும் ஆசீர்வதிக்கவேண்டும்.

கணவன் ஆசீர்வதித்தப் பின்னர் அனைத்து உறவினர்களும் ஒருவர் பின் ஒருவராக வந்து, சந்தனம் நலுங்கு வைத்து, குங்குமம் இட்டு பன்னீர் தெளித்து, அறுகரிசி படைத்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும். இறுதியில் வயதான சுமங்கலி பெண்கள் வளைகாப்பு முடிந்த பெண்ணுக்கு திருஷ்டி கழித்து போட வேண்டும்.

Valaikappu in Tamil

இதன் பின்பு நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் உறவினர்கள் வளைகாப்பு நடந்த பெண்ணிற்கு பல பரிசுகளை தந்து அப்பெண்ணை ஆசிர்வதிப்பதால் அப்பெண்ணிற்கு மனமகிழ்ச்சி ஏற்படுகிறது. அதனால் தாய்க்கும் கருவில் வளருகின்ற சேய்க்கும் பல நன்மைகள் ஏற்படுகிறது.

Updated On: 25 Dec 2023 8:20 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு