/* */

விழிகளின் பார்வையால் இதயம் கொள்ளைபோனதே..! காதலுக்கு வாழ்த்துச் சொல்வோம்..!

உனக்காக நானும்;எனக்காக நீயும் என்று ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளுதலும் விட்டுக்கொடுத்தலும் இருந்துவிட்டால் காதல் கடைசிவரை இனிமையானதாகத்தான் இருக்கும்.

HIGHLIGHTS

விழிகளின் பார்வையால் இதயம் கொள்ளைபோனதே..! காதலுக்கு வாழ்த்துச் சொல்வோம்..!
X

valentine day kavithai in tamil-காதலின் கவிதைகள் (கோப்பு படம்)

Valentine Day Kavithai in Tamil

நாம் காதலிக்கும் ஒருவருக்கு ஒரு தினையளவு துன்பம் வந்தாலும் மனம் தாங்காமல் அவர் துன்பத்தைப் போக்கும் முயற்சியில் ஈடுபடுவதுதான் உண்மைக் காதல்

காதலுக்காக காதலியையே அல்லது காதலனையே விட்டுக் கொடுக்கலாம். ஆமாம் அவர் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் போதும் என்று எந்த மனம் நினைக்கிறதோ அந்த மனம் கொள்வதுதான் உண்மைக் காதல்.

அப்படியான உண்மைக் காதலர்களுக்கான கவிதைகள் இதோ உங்களுக்காக :-

Valentine Day Kavithai in Tamil

காதல் பிடிக்குள் சிக்கி

காற்றும் திணறுகிறது

கொஞ்சம் இடைவெளிவிடு

பிழைத்துப் போகட்டும்

காதலர் தின வாழ்த்துகள் அன்பே

என் கவலைகளுக்கு நீ

மருந்தாகின்றாய் உன்

கவலைகளை மறைத்து

இனிய காதலர் தின

வாழ்த்துகள் என் இதயமே

இன்னிசையாக இதயதுடிப்பும்

உனை காணும் போதெல்லாம்

ஆனந்த யாழாய்

இனிய காதலர் தின

வாழ்த்துகள் என் உயிரே

உன்னை நினைத்து

என்னை மறப்பதுதான்

காதலென்றால் ஆயுள்

முழுதும் வாழ்வேன்

எனை மறந்து

இனிய காதலர் தின

வாழ்த்துகள் என் காதலே

குடைக்குள்

இரு இதயங்கள்

நனைகிறது

காதல் மழையில்

காதலர் தின வாழ்த்துகள்

Valentine Day Kavithai in Tamil

மனதோடு நீ

மழையோடு நான்

நனைகின்றது

நம் காதல்

காதலர் தின வாழ்த்துகள்

மறந்துப் போன

மகிழ்ச்சியை

மறுபடியும் மலர

வைத்தாய் நீ

இனிய காதலர் தின

வாழ்த்துகள் என் அன்பே

எனக்கு பிடித்ததை

எல்லாம் நீ ரசிப்பதால்

உனக்கு பிடிக்காததை

நான் தவிர்க்கிறேன்

காதலர் தின வாழ்த்துகள் அழகியே

உன்னிதழ் மௌனமாக

பேசிட மயங்கித்தான்

போனது என் மனம்

இனிய காதலர் தின

வாழ்த்துகள் என் காதலா

என் உறக்கத்தை

இரையாக்கி

கொள்கிறது

உன் நினைவு

காதலர் தின வாழ்த்துகள் அன்பே

Valentine Day Kavithai in Tamil

நீ தூரமாக இருந்தாலும்

உனது குரலை கேட்காத

நொடிகள் இல்லை கேட்கிறேன்

என் இதய துடிப்பில்

இனிய காதலர் தின

வாழ்த்துகள் என் இதயமே

அழகான இடத்திற்கு அழைத்து

சென்று என் காதலை

சொல்ல ஆசைதான் ஆனால்

நீ என்னுடன் இருக்குமிடம்

எல்லாமே அழகாய் தெரிகிறதே

என்னதான் நான் செய்ய ?

பிடித்த தனிமையும்

கொடுமையானது

உன்னுள்

தொலைந்ததிலிருந்து

இனிய காதலர் தின

வாழ்த்துகள் என் ராட்சஷியே

தேநீரில் கரைந்த

சக்கரையாய்

கலந்துவிட்டாய்

என்றும் திகட்டாத

தித்திப்பாய் மனதில்

இனிய காதலர் தின

வாழ்த்துகள் என் அழகியே

இன்று ஜெயிப்பது வெற்றி

அல்ல ஆயுள்வரை தோற்காமல்

இருப்பதுதான் உண்மையான வெற்றி

காதலர் தின வாழ்த்து என் காதலே

திணறடிக்கும் உன் அன்பில்

சிறையிருக்க வேண்டும்

ஆயுளின் கடைசி நொடி

வரை ஆயுள் கைதியாய்

உன் இதயத்தில்

காதலர் தின வாழ்த்துகள்

Valentine Day Kavithai in Tamil

எல்லோருக்கும் அழகை

வர்ணிக்க தானே

கவிதை தேவைப்படும்

எனக்கு மட்டும் கவிதையை

வர்ணிக்க நீ தேவைப்படுகிறாய்

இனிய காதலர் தின

வாழ்த்துகள் என் தங்கமே

இரண்டு நிமிடம் பேசிவிட்டு

24 மணிநேரம் நினைக்க

வைக்க உன்னால்

மட்டுமே முடியும்

இனிய காதலர் தின

வாழ்த்துகள் என் காதலா

கருங்கூந்தலை கலைத்திடும்

தென்றல் காற்றும்

உன் ஸ்பரிசத்தையே

நினைவூட்டி செல்கிறது

இனிய காதலர் தின

வாழ்த்துகள் என் அழகியே

கனவு கலைந்த பின்னும்

விழிகள் மூடிக் கிடக்கின்றேன்

உன் பிம்பம் கலைந்திட கூடாதென

காதலர் தின வாழ்த்துகள் என் காதலே

வரிகளில் இல்லாத ரசனை

உன் இரு விழிகளில் உணர்ந்தேன்

இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்

Valentine Day Kavithai in Tamil

காதல் என்றும் சுகமானது

கனவுகளும் நினைவுகளும்

புது விதமானது

இனிய காதலர் தின வாழ்த்துகள்

காதலர் தினம் கொண்டாட

காதலி இருக்கணும்னு

அவசியம் இல்லை மனசுல

காதல் இருந்தாலே போதும்

இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்

என்னில் வைக்கும் அன்பை

மிஞ்ச எவரும் இல்லை

உன்னை விட அதனாலேயே

உன்னை கெஞ்சி நிற்கிறேன்

என்னை காதலி என்று

இனிய காதலர் தின

வாழ்த்துகள் என் காதலா

ஆயிரம் ஆசைகள் அனைத்தையும்

நிறைவேற்ற ஆயிரம் ஆயுள்

வேண்டும் உன்னோடு மட்டும்

இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்

ரோஜா இதழ்களும்

தலை குனிந்ததோ

உன் இதழிடம்

தோற்ற சோகத்தில்

இனிய காதலர் தின

நல்வாழ்த்துகள் என் அழகியே

Valentine Day Kavithai in Tamil

உலகை காட்டியது

பெற்றோரென்றாலும்

அதை ரசிக்க வைத்துக்

கொண்டிருப்பது நீ

காதலர் தின நல்வாழ்த்துகள்

கனவுகளை நிஜங்களாக்கி

கனவுக்குள் வைத்து வாழ்வதே

புது சுகமாகும்

இனிய காதலர் தின வாழ்த்துகள்

சத்தமிட்டு சிரிப்பதும்

சத்தமில்லாமல் அழுவதும்

உன்னிடம் மட்டுமே

இனிய காதலர் தின வாழ்த்துகள்

Updated On: 9 Feb 2024 8:32 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  2. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  3. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  4. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  5. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  6. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  10. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?