கால் வலி: கவலைப்பட வேண்டிய நேரம் எப்போது?

கால் வலி - சாதாரணமான தசைப்பிடிப்பா அல்லது வேறு ஏதாவது மோசமானதா? எப்போது மருத்துவரை அணுக வேண்டும் என்று பலர் குழம்பிப் போகிறார்கள். எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது! உங்கள் கால்களில் தொடர்ந்து வலி இருந்தால், கவனம் தேவை! எப்போதெல்லாம் மருத்துவரை சென்று பார்க்கவேண்டும். எதற்கெல்லாம் பயப்படவேண்டும் என்பதை முதலில் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.
வீக்கம்: வீக்கம் இருந்தால், அது பெரிய பிரச்சனையை குறிக்கலாம். விபத்து, எலும்பு முறிவு போன்ற காரணங்களும் இருக்கலாம்.
காயங்கள்: கவனிக்கப்படாத காயம் நோய்த்தொற்றுடன் கடுமையான வலியைக் கொடுக்கலாம்.
நிற மாற்றம்: சிவப்பு, ஊதா நிற மாற்றம் ஆபத்தை குறிக்கலாம். உடனே டாக்டர்கிட்ட ஓடுங்க!
அதிகக் காய்ச்சல்: தொடர்ந்து குறையாத, அதிக அளவில் வரக்கூடிய காய்ச்சலுடன் உங்க கால் வலி இருந்தால் அது நிச்சயமாக ஆபத்து அடையாளம்!
எலும்பு முறிவு கூட இருக்கலாம்:
ஆஸ்டியோபோரோசிஸ் நோய் பலரை பாதிக்குது. அதனால் லேசான தடுக்கல் கூட எலும்பு முறிவுக்கு கொண்டு போகலாம். முதியவர்கள் கூடுதல் கவனம் எடுக்கணும். ஒரு எக்ஸ்ரே உண்மையை போட்டுடைக்கும்.
பயப்பட வேண்டிய அவசியமில்லை:
நடக்க கஷ்டமா இருக்கா, தூங்க விடாமல் வலி வதைக்குதா? கவலைப்படாதீங்க. மருத்துவர் உங்கள் வரலாறை விசாரிப்பார், காலின் நிலை பார்த்து பரிசோதனை தேவைனு முடிவு பண்ணுவார். எக்ஸ்ரே, ஸ்கேன் எல்லாம் எடுத்து, என்ன சிகிச்சை தேவை என சொல்லுவார்.
கூடுதல் கருத்துக்கள்:
வயது: வயதானவர்களுக்கு கால் வலி அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு. வயதான காலத்தில் அதிக ஓய்வு தேவைப்படும். அதிக நேரம் நின்றுகொண்டு இருந்தாலும், அதிக தூரம் நடந்தாலும், மாடி ஏறினாலும் கால் வலி வருவது இயல்புதான்.
வாழ்க்கை முறை: உடல் பருமன், அதிக வேலை, போதுமான உடற்பயிற்சி இல்லாமை போன்றவை கால் வலிக்கு காரணமாக இருக்கலாம். நீங்கள் ஆரோக்யமாக இருக்க உடற்பயிற்சி அவசியம். போதுமான தூக்கமும், உடல் எடை பராமரிப்பும், அளவான உடற்பயிற்சியும் உங்களுக்கு தேவை.
நோய்கள்: நீரிழிவு, கீல்வாதம் போன்ற நோய்களும் கால் வலிக்கு காரணமாக இருக்கலாம்.
பொதுவான வீட்டு வைத்தியம்:
ஓய்வு: போதுமான ஓய்வு வலி குறைய உதவும்.
பனிக்கட்டி ஒத்தடம்: வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க பனிக்கட்டி ஒத்தடம் கொடுக்கலாம்.
மருந்துகள்: வலி நிவாரணி மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளலாம்.
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்:
- கடுமையான வலி
- வீக்கம்
- சிவப்பு, ஊதா நிற மாற்றம்
- காய்ச்சல்
- நடக்க முடியாமை
- வலி 2 வாரங்களுக்கு மேல் நீடித்தால்
உடல் உங்களோட கோவில். அந்த அலாரம் அடிக்கும் போது கேட்டு, ஆரோக்கியத்தோடு கம்பீரமாய் உங்களோட வாழ்க்கையை வாழுங்க!
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu