/* */

நீண்ட காலத்திற்கு தமிழகத்தை ஆட்சி செய்யுமா மு.கருணாநிதியின் வம்சம்..!

கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களும் அவர்களது குழந்தைகளும் அடுத்து வரும் பத்தாண்டுகளுக்கு பிறகு அரசியலில் இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

HIGHLIGHTS

நீண்ட காலத்திற்கு தமிழகத்தை ஆட்சி செய்யுமா மு.கருணாநிதியின் வம்சம்..!
X

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி.

முன்னாள் முதல்வரும் திமுகவின் முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் வம்ச வாரிசுகள் தொடர்ந்து தமிழகத்தை ஆட்சி செய்வார்களா என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் அடுத்து வரும் 25 ஆண்டுகள் தொடர்ந்து தி.மு.க., தான் ஆட்சி செய்யும் எனக்கூறியிருக்கிறார். ஆனால் அது எந்த அளவு உண்மை என்பது எல்லோருக்கும் தெரியும். காரணம் கடந்த இரண்டரை ஆண்டு ஆட்சியில் மக்களின் அதிருப்தியை சந்தித்துள்ளனர்.

இதனால் தான் இவ்வளவு பெரிய கூட்டணி அமைத்தும், 40 தொகுதிகளையும் கைப்பற்ற வாய்ப்புகள் இல்லை எனக்கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்து வரும் 25 ஆண்டுகள் எப்படி தி.மு.க., ஆட்சி செய்யும். கருணாநிதியின் வாரிசுகள் 100 ஆண்டுகளுக்கு அரசியலில் எப்படி தாக்குப்பிடிப்பார்கள்.

தமிழகம் ஒருமுறை கூட கருணாநிதியை இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கவில்லை. எனவே, இதை வம்ச ஆட்சி என்று சொல்ல முடியாது. மு.க.ஸ்டாலினை தவிர தமிழகத்தின் அனைத்து முதல்வர்களும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில்லாமல் தான் வாழ்ந்து வந்தனர். எனவே ஸ்டாலின் வருகைக்கு முன்பு வரை தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு இடமில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆனால் ஜனநாயகத்தில் வம்ச ஆட்சிக்கு சிறந்த உதாரணம் காங்கிரஸ் கட்சி தான். அந்த கட்சியில் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தவிர வேறு யாரும் இல்லை. அவர்களே 100 ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை. இப்போது நடக்கும் தேர்தலில் தோற்றால் காங்கிரஸ் மாநில கட்சியை விட மோசமான நிலைக்கு சென்று விடும்.

இருக்கட்டும். இப்போது வாரிசு முதல்வர் எனக்கூறப்படும் மு.க.ஸ்டாலின் அவ்வளவு எளிதில் முதல்வராகி விடவில்லை. பல தசாப்தங்களாக அரசியலில் இருந்த அவர், 68 வயது வரை (ஜெயலலிதா அந்த வயதில் இறந்தார்) வாய்ப்புக்காக பொறுமையாக காத்திருக்க வேண்டியிருந்தது. அதாவது மு.க., ஸ்டாலினே 68 ஆண்டுகள் காத்திருந்த பின்னரே, மிகப்பெரிய அளவில் அரசியல் அனுபவம் பெற்ற பின்னரே, மிக கடும் சோதனைகளை சந்தித்த பின்னரே இந்த இடத்திற்கு வந்துள்ளார். மு.க., ஸ்டாலினின் அனுபவத்துடன் அவரது மகன் உதயநிதியை ஒப்பிடவே முடியாது.

அனுபவமில்லாத உதயநிதி தனது தந்தை ஓய்வு பெற்ற பிறகு எதிர்காலத்தில் இன்னும் அதிகமான, அதிபயங்கரமான போட்டியை சந்திக்க நேரிடும். அந்த போட்டியில் அவர் தோல்வியடைந்தால் அடுத்து வரும் ஆண்டுகளில் அவர் எந்த அளவு தாக்குப்பிடிப்பார் என தெரியவில்லை. காரணம், இப்போதே மேடைப்பேச்சே உதயநிதிக்கு வரவில்லை.

தவிர பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் சொதப்பி வருகிறார். அண்ணாமலையை போல், அதிரடி அரசியல் உதயநிதிக்கு கைகூடி வரவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது. வெளிப்படையாக சொல்லப்போனால், முதல்வர் ஸ்டாலின் இருக்கும் போதே, உதயநிதி தனது அரசியல் எதிரிகளை கையாளுவதில் பெரும் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறார். தனது தந்தையிடம் இருந்து அவர் இன்னும் மிக, மிக அதிகம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படி கற்றுக் கொண்டு பழுத்த அரசியல் அனுபவம், ஞானம் பெற்றால் மட்டுமே தி.மு.க.,விற்கு எதிர்காலம் இருக்கும். இவ்வாறு கூறினர்.

Updated On: 10 March 2024 6:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை எனும் பயணத்தில்.. திருமண நாள் வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    நண்பர்களுடன் போதை பொருளை தேடி செல்லும் இளைஞர்கள் !#friends #drugs...
  3. நாமக்கல்
    கல்லூரி கனவு நிகழ்ச்சியில் பங்கேற்ற நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா
  4. ஒட்டன்சத்திரம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மூன்று மடங்கு உயர்ந்த எலுமிச்சை...
  5. சோழவந்தான்
    மதுரை அருகே எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவில் வழங்கப்பட்ட...
  6. திருப்பரங்குன்றம்
    மதுரை உலக அன்னையர் தின விழாவில் நடந்த உணவு வழங்கல் நிகழ்ச்சி
  7. காஞ்சிபுரம்
    ‘எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக இயங்கும்’- செங்கோட்டையன்
  8. லைஃப்ஸ்டைல்
    அக்கா உன் மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..!
  9. வீடியோ
    போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டியது யார் ? #drugmafia #drugs #dmk...
  10. நாமக்கல்
    வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு