/* */

திருச்சியில் கருணாநிதி நூற்றாண்டு விழா மாரத்தான் ஓட்டப்போட்டி

திருச்சியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மாரத்தான் ஓட்டப்போட்டி நடந்தது.

HIGHLIGHTS

திருச்சியில் கருணாநிதி நூற்றாண்டு விழா மாரத்தான் ஓட்டப்போட்டி
X

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி திருச்சியில் மாரத்தான் ஓட்டப்போட்டி நடைபெற்றது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக 87 வது நிகழ்வாக திருச்சி தெற்கு மாவட்ட மாநகர தொ.மு.சா சார்பில் மாபெரும் மாரத்தான் போட்டி மற்றும் முடிதிருத்துவோர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி தெற்கு மாவட்ட திமுக தொ.மு.ச சார்பில் நடைபெற்றது. திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் தொமுச பொதுச் செயலாளர் கணேஷ் குமார் அனைவரையும் வரவேற்றார். கூட்டமைப்பின் செயலாளர் ஜோசப் நெல்சன் தலைமை வகித்தார்.

மேலும் இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கழகத் துணை பொதுச் செயலாளர் கா. பொன்முடி மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொ.மு.ச. பேரவை பொதுச் செயலாளர் மாநிலங்களவை உறுப்பினருமான சண்முகம், மாநகரச் செயலாளர் மு.மதிவாணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் மராத்தான் போட்டியில் 8வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவ ,மாணவிகள் மற்றும் 12 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவ, மாணவர்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டோர் பல்வேறு பிரிவுகளில் சுமார் 600க்கும் மேற்பட்டோர் போட்டியில் கலந்து கொண்டனர்.

மேலும் இதனையடுத்து முடி திருத்துவோர் சுமார் 400 பேருக்கு மளிகை பொருட்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சுமார் 500 பேருக்கு மளிகை பொருட்கள் ஆகியவற்றை திமுக துணைப் பொதுச் செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் இணைந்து வழங்கினர்.

இவ்விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் பேசுகையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவில் தொமுச பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றும், மேலும் தொமுச நிறுவுவதற்கு கலைஞர் அரும்பாடு பட்டதாகவும், முதன்முதலில் தொழிற்சங்க ஊழியர்களுக்கு விடுப்புடன், ஊதியத்தையும் வழங்கியவர் கலைஞர் தான் என்றும் எனவே இந்த நிகழ்ச்சி கொண்டாடுவதில் தொ.மு.சாவிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், இந்த விழாவிற்கு வந்திருக்கும் பொன்முடி வரவேற்பதாகவும் கூறினார்.

இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் முன்னோடிகள் என உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Feb 2024 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்