/* */

மோடியை பார்த்து எதிர்க்கட்சிகள் கலங்குவதன் காரணம் என்ன?

இரண்டு முதல்வர்களையும், முதல்வரின் மகள் ஒருவரையும் சிறையில் வைத்தது டிரையல் தான் என மோடி சொன்னது எல்லோரையும் கலங்கடித்துள்ளது.

HIGHLIGHTS

மோடியை பார்த்து எதிர்க்கட்சிகள்  கலங்குவதன் காரணம் என்ன?
X

தேனி மாவட்ட பா.ஜ.க., வர்த்தக அணி தலைவர் கே.கே.ஜெயராம்நாடார்.

பா.ஜ.க., தேனிமாவட்ட வர்த்தக அணி தலைவர் கே.கே.ஜெயராம் நாடார் கூறியதாவது:

ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நாளுக்கு நாள் மோடி தீவிரப்படுத்திக் கொண்டே வருகிறார். தற்போதய நிலையில் நாடு முழுவதும் ஊழல் செய்த ஏராளமான அரசியல் பிரமுகர்கள் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டுள்ளனர். இந்நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் கூட இரண்டு மாநில முதல்வர்களையும், ஒரு மாநிலத்தின் முன்னாள் முதல்வரின் மகளையும் கைது செய்து சிறையில் வைத்துள்ளார். இப்படி செய்தது மட்டுமல்லாமல், இதுவரை நடந்தது எல்லாம் டிரையல் தான் இனி தான் முழுபடமும் உள்ளது என பிரசாரம் செய்து, அத்தனை பேரின் வயிற்றிலும் புளியை கரைத்துள்ளார்.

இதனையெல்லாம் பார்த்த அரசியல் பிரமுகர்கள், அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் பலரை கலக்கத்தில் வைத்துள்ளது. இதனால் மோடி மீண்டும் வந்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.

மோடி மூன்றாவது முறையாக வென்றால் அந்த ஆட்சியில் காங்., கட்சிக்கு சங்கு நிச்சயம். அனேகமாக அது கட்சியை கலகலக்க வைக்க மட்டுமல்ல, மாற்றுத் தலைவர்கள் மூலம் கட்சியின் ட்ரஸ்ட் சொத்துக்களையும் கைப்பற்றலாம். எந்த அளவுக்கும் செல்வார் மோடி.

இதற்காக கடந்த 10 ஆண்டுகளாக தேவையான மாற்றங்களை, காய் நகர்த்தல்களை செய்து விட்டார்கள். தேவையான ஆதாரங்கள் இப்போது அரசின் கையில். இனிமேல் ஊழல் செய்த பல கட்சித்தலைவர்களின் நிலை அவ்வளவு தான். இல்லாவிடில் கழுத்தில் கத்தி தான்.

ஒரு லட்சம் கொடுப்பேன் என்று சென்ற முறை சொன்னதை மக்கள் ஏற்கவில்லை. அதற்கு மாறாக இருக்கும் மக்களின் சொத்துக்களை எடுத்து ராபின்ஹூட் ஸ்டைலில் இல்லாதவர்களுக்கு கொடுப்போம் என்ற கம்யூனிஷ வழி கைகொடுக்கும் என்று காங்., நம்புகிறது. அதற்கான வாக்குறுதிகளை காங்., கொடுத்துள்ளது. ஆனால் அதை சட்ட ரீதியாக நடத்த முடியாது என்பது விபரம் அறிந்தவர்களுக்கு தெரியும். அப்படியெனில் பாஜகவின் 400 டார்கெட்டுக்கு பிரச்சினை கொடுக்கலாம். இது சாதாரண விஷயமல்ல என்பதால், இந்து மதம் என்ற அஸ்திரத்தை மோடி மீண்டும் கையில் எடுத்துள்ளார் மோடி.

ஆனால் Inheritance Tax எல்லாம் சாத்தியமா? அமெரிக்காவிலேயே 6 மாநிலங்களில் தான் இந்த சட்டம் உள்ளது. அங்கேயே இப்படி தடுமாறுகிறது. இப்படியிருக்கும் போது, காங்., கட்சிக்கு வாழ்வா சாவா என்ற நிலையில் இந்த ராபின்ஹூட் அஸ்திரத்தை வீசியுள்ளது, அவர்களுக்கு நன்கு தெரியும். எப்படியும் ராகுல்காந்தி... விரைவில் வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளது என பா.ஜ.க.,வினர் கூறி வருகின்றனர்.

Updated On: 27 April 2024 6:45 AM GMT

Related News