/* */

ப.சிதம்பரத்திற்கு பெரிய சந்தேகம் : மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்..?!

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடக்குமா? என்பதே கேள்விக்குறிதான் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ப.சிதம்பரத்திற்கு பெரிய சந்தேகம் :  மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்..?!
X

பிரதமர் மோடி, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் (கோப்பு படம்)

இப்போதே பதவியில் இருக்கும் இரண்டு முதல்வர்களை கைது செய்து இருக்கிறார்கள். இது மிகப்பெரிய பேராபத்து என்று காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் கூறியதாவது:-

2024 தேர்தல் சாதாரணமான தேர்தல் கிடையாது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல். 5 ஆண்டுகளுக்கு பிறகு நடக்குமா? நடக்காதா? என்பது மிகப்பெரும் கேள்விக்குறியாகும். 10 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை, பதவியில் இருக்கும் முதல்வரை மத்திய அரசு கைது செய்ய முடியும். சிறையில் அடைக்க முடியும் என்று யாராவது நினைத்து பார்த்தீர்களா?

இது நடக்கும் என்று கற்பனை செய்து பார்த்தீர்களா? எதாவது திரைப்படத்தில் இந்த காட்சி நடந்து இருக்கிறது. ஆனால், இந்த சம்பவம் இந்த ஆண்டு நடைபெற்றுள்ளது. சுதந்திர இந்தியாவில் நடக்காத நிகழ்வு இந்த ஆண்டு நடைபெற்றுள்ளது. ஜார்க்கண்ட் முதல்வரை கைது செய்து சிறையில் அடைத்து இருக்கிறார்கள்.

டெல்லி முதல்வரை கைது செய்து சிறையில் அடைத்து இருக்கிறார்கள். இது கெஜ்ரிவாலுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை இல்லை. அனைத்து முதல்வர்களுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்று மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரு அறிஞர் எழுதியிருக்கிறார்.அனைத்து முதல்வர்களுக்கும் மோடி எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.

நான் கிழிக்கும் கோட்டை நீ தாண்டிவிட்டால் உன்னை கைது செய்து சிறையில் அடைப்பேன் என்று. இது மிகப்பெரிய பேராபத்து. மக்கள் தேர்வு செய்யும் முதல்வரை அவருக்கு பெரும்பான்மை இருக்கும் போது மத்திய அரசு கைது செய்ய முடியும் என்பது மிகப்பெரும் பேராபத்து. காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்குகிறார்கள். இன்று காலை 1,871 கோடி ரூபாய் வருமான வரி விதித்து இருக்கிறார்கள்.

1961-ல் நிறைவேற்றப்பட்ட வருமான வரி சட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு வருமான வரி கிடையாது என்று ஷரத்து இருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சிறு பிழையை எடுத்து ஒவ்வொரு ஆண்டாக கணக்கிட்டு வரி, வட்டி என நோட்டீஸ் வந்து இருக்கிறது. ஒரு அரசியல் கட்சியை முடக்குவதற்கு இதைவிட சிறந்த வழிகள் இருக்க முடியாது. வங்கி கணக்கை முடக்குவது.. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு வருமான வரி விதிப்பது. இப்போது மற்ற கட்சிகளை முடக்குவதற்கும் வழி கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

பாஜ கட்சியுடன் கூட்டணி வைத்தால் சைக்கிள் கிடைக்கும். பாஜகவுடன் கூட்டணி வைத்தால் மாம்பழம் கிடைக்கும்.. திமுகவுடன் கூட்டணி வைத்தால் பம்பரம் கிடைக்காது. ஒரு அரசியல் கட்சியை முடக்குவதற்கு பல வழிகளை ஆராய்ந்து செயல்படுத்துகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.200 கோடி வரி பாக்கி இருப்பதாக கூறி காங்கிரஸ் கட்சியின் 4 வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது. இதன் பின்னர், காங்கிரஸ் கட்சியின் வருமான வரியை மறுமதிப்பீடு செய்யும் வேலையில், வருமான வரித்துறை தொடங்கியது. இதற்கு காங்கிரஸ், எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது.

நீதிமன்றம் இந்த விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்று தெரிவித்து விட்டது. இதன் பின்னர் சில மணி நேரங்களில் ரூ.1823 வரி பாக்கி இருப்பதாக காங்கிரசுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதாவது, கடந்த 1993 - 1994 முதல் 2020ம் ஆண்டு வரை வரிக் கணக்குகளில் உள்ள முரண்பாடுகளுக்காக இந்த தொகையை அபராதமாக வருமான வரித்துறை விதித்துள்ளதாக கூறியுள்ளது.

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எதிர்க்கட்சிகளை முடக்கும் பணியில் பாஜக ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இதேபோல் காங்கிரசும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில் தான் மத்திய பாஜக அரசை விமர்சித்து ப சிதம்பரமும் பேசியுள்ளார்.

Updated On: 30 March 2024 5:40 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    வாழும் போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்: கலெக்டர்...
  5. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பாதையில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை
  6. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  7. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  9. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!