Diwali Lights-தீபாவளிக்கு விளக்கேற்றும் முறை..!

diwali lights-தீபாவளிக்கு விளக்கேற்றுதல் (கோப்பு படம்)
Diwali Lights
ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை திதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதேபோல இந்தாண்டு ஐப்பசி 26-ம் நாள் நவம்பர் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று உலகெங்கும் தீபாவளி பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.
பசு நெய்
தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று அர்த்தம். வாஸ்து சாஸ்திரப்படி, தீபாவளி தினத்தன்று பசு நெய் விட்டு விளக்கேற்றுவது என்பது மனதில் உள்ள தீய எண்ணங்களை அகற்றுவதாக கருதப்படுகிறது. விளக்குகள் நம்முடைய ஆன்மாவைக் குறிப்பதாக ஒரு நம்பிக்கை.
Diwali Lights
தீபங்கள் ஏற்றுவதன் மூலம் வீட்டிலும் நம் மனதினலும் உள்ள தீய விஷயங்களை அகற்றி, நல்லவை வீட்டுக்குள்ளும் மனதுக்குள்ளும் நுழையும் என்பது ஐதீகம். தீபாவளி பண்டிகையை அமாவாசை நாளில் கொண்டாடுகிறோம். அதனால் இரவின் இருளைப் போக்கவும், ஒளியை அளிக்கவும் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. இன்றைய நாளில் லட்சுமி, குபேர பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு தீபாவளி அமாவாசைக்கு முதல் நாள் வருகிறது. இருப்பினும் நாம் வழக்கமாக செய்யும் விளக்கேற்றும் நிகழ்ச்சிகளுக்கு எவ்வித தடைகளும் கிடையாது. வழக்கம்போலவே நாம் விளக்கேற்றும் நிகழ்ச்சியை செய்யலாம்.
அதுமட்டுமல்லாமல் நாம் நமது வீட்டுக்குள் இறை சிந்தனையை வரவேற்க விளக்கேற்றும் முறைகளில் சில கவனிக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன.
Diwali Lights
விளக்கேற்றும் முறை :
1. முதல் விளக்கை வீட்டின் பூஜை அறையில் ஏற்ற வேண்டும்.
2. துளசிச் செடி பெருமாளுக்கு உகந்ததாகும். அதில் மஹா லட்சுமி வாசம் செய்கிறாள். எனவே, அடுத்தது துளசி செடி உள்ள இடத்தில், துளசி மாடத்தில் விளக்கேற்ற வேண்டும்.
அடுக்குமாடி குடியிருப்பில் துளசி செடி வளர்க்க வாய்ப்பு இல்லை என்று உள்ளவர்கள் சமையல் அறையில் விளக்கேற்றலாம்.
3. செல்வம் மற்றும் வளங்களை வரவேற்க வீட்டின் வடகிழக்கு மூலையில் விளக்கேற்ற வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்யத்தை அதிகரிக்க கிழக்கு பக்கம் பார்த்தபடி மட்டுமே விளக்கேற்ற வேண்டும்.
4. வீட்டுத் தண்ணீர் தொட்டி அருகில் விளக்கேற்ற வேண்டும். இது வீட்டில் உள்ள தீய எண்ணங்கள், தீய விஷயங்களை அகற்றி, நலம் மற்றும் வளத்தை அதிகரிக்கச் செய்யும்.
Diwali Lights
5. இந்திய பாரம்பரியத்தில் விளக்கேற்றும் நேரம் மிக முக்கியமானதாகும். வீட்டில் விளக்கேற்றி ஒளி வீடு முழுவதும் பரவினால்தான் மஹாலட்சுமி வீட்டுக்குள் நுழைவாள் என்பது நம்பிக்கை.
எனவே, கடமைக்கு விளக்கு வைத்துவிட்டு அணைத்துவிட வேண்டாம். குறைந்தது பூஜை அறையில் ஏற்றி வைத்த விளக்காவது இரவு முழுவதும் எரியும் வகையில் வைக்க வேண்டும்.
6. பித்தளை அல்லது மண் விளக்குகளை நாம் பயன்படுத்த வேண்டும். தெய்வீக கடாட்சத்தை வீட்டுக்குள் ஈர்க்கும் ஆற்றல் பித்தளை விளக்குகளுக்கு உண்டு. அதேபோல தெய்வீகத் தன்மையை ஈர்க்கும் ஆற்றல் மண் விளக்குகளுக்கு உண்டு.
Diwali Lights
ஆகவே இந்த தீபாவளிக்கு வீட்டில் இங்கு கூறியுள்ளபடி விளக்குகள் ஏற்றி நலமும் வளமும் பெறுவோமாக. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu