Sudalai madan images: சுடலை மாடன் சுவாமிக்கு எத்தனை பெயர்கள் தெரியுமா?

Sudalai madan images: கிராம காவல் தெய்வமான சுடலை மாடன், சிவனுக்கும் பார்வதிக்கும் மகனாக பிறந்தவராக கருதப்படுகிறார். தென் மாவட்டங்களில் சுடலை மாடசாமியை காவல் தெய்வமாக வணங்கி வருகிறார்கள் குறிப்பாக. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பரவலாக சுடலை மாடசாமியை காவல் தெய்வமாகவும் குல தெய்வமாகவும் வணங்கி வருகின்றனர்.
சுடலை மாடன் கிராமத்துக் கடவுளாக இருப்பதால் வழிபாடும் கிராமம் சார்ந்ததாகவே இருக்கிறது. ஒரு சில சுடலை மாட சுவாமிக் கோயில்களைத் தவிர மற்ற அனைத்துக் கோயில்களும் சாதரணமாகவே காணப்படுகின்றன.
பெரிய மண்டபங்களை மாடம் என கூறுவர். பார்வதி கயிலாயத்தில் ஆயிரம் தூண்களை கொண்ட மண்டபத்தில் உள்ள தூண்விளக்கு சுடரில் பிறந்ததால் மாடன் எனவும் சுடலை என்பது உயிரற்ற உடலை குறிக்கும் மயானத்தில் எரிந்த பிணத்தை உண்டதால் சுடலைமாடன் என பெயர் பெற்றார். காளை உருவம் எடுத்து பகவதியம்மன் கோயில் கோட்டையை சிதைத்ததால் இவர் காளையின் தலையுடனும் காட்சியளிப்பதுண்டு.
திருநெல்வேலி மாவட்டத்தில் சீவலப்பேரி சுடலை மாடன் கோயில், சங்கனாபுரம்-அருள்மிகு ஸ்ரீ வடக்கு-அத்தியான் சுடலை மாடசாமி திருக்கோவில், பாலாமடை கீழக்கரை சுடலை மாடன் கோவில், தென்கலம்புதூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் அமைந்திருக்கும் ஐகோர்ட் மகாராஜா கோவில், சிறுமளஞ்சி(ஏர்வாடி) சுடலை மாடன் கோயில், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள ஊர்காடு(உய்காடு)சுடலை மாடன் கோயில், வள்ளியூர் அருகில் உள்ள கலந்தபனை உய்க்காட்டு சுடலை ஆண்டவர் கோவில்,நெல்லை மாவட்டம் பழவூர் எலந்தையடி சுடலை மாடன் கோயில்,கன்னன் குளம் பெருமாள்புரம் தோட்டக்கார மாட சுவாமி போன்றவை மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களாகும்.
அதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவிலுக்கு அருகே வடலிவிளை ஊரில் உள்ள சுடலைமாடன் கோவில் மற்றும் வடக்கு சூரங்குடியில் உள்ள சுடலைமாடன் கோவில் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும்.
பலப் பெயர்கள்:
சீவலப்பெரியான் மாடன், சுடலை ஈஸ்வரன்/சுடலேஸ்வரன், பத்மாபரம ஈஸ்வரன், மயாண்டீஸ்வரன், சிவனைந்தபெருமாள், சுடலையாண்டி, மாயாண்டி, சுடலைமுத்து, மாசானமுத்து, முத்துசுவாமி, வெள்ளைப்பாண்டி.
ஸ்தலப்பெயர்கள்:
சீவலப்பேரி மாடன்
சிவசுடலைமாடன்
மயான/மாசான சுடலைமாடன்
வேம்படி சுடலைமாடன் (ஐகோர்ட் மகாராஜா)
ஊசிக்காட்டு/ஊய்காட்டு சுடலைமாடன்
ஒத்தப்பனை சுடலைமாடன்
செம்பால் சுடலைமாடன்
எலந்தையடி சுடலைமாடன்
பிற அவதார பெயர்கள்
சத்திராதி முண்டன்
தளவாய் மாடன்
பலவேசக்காரன்
நல்ல மாடன்
அக்கினி மாடன்
செங்கிடாக்காரன்
கருங்கிடாக்காரன்
ஒற்றக்கொடைக்காரன்
இருளப்பன்
சந்தன மாடன்
பட்டாணி மாடன்
வன்னார மாடன்
புல மாடன்
களு மாடன்
சாமத்துரை பாண்டியன்
தேரடி மாடன்
சங்கிலி மாடன்
பன்றி மாடன்
குதிரை மாடன்
கரடி மாடன்
ஒற்றைபந்தக்காரன்
உண்டி மாடன்
சப்பாணி மாடன்
பொன் மாடன்
ஆலடி மாடன்
கரையடி மாடன்
இடக்கை மாடன்
பூக்குழி மாடன்
ஆகாச மாடன்
உதிர மாடன்
இசக்கி மாடன்
காளை மாடன்
சந்தயடி மாடன்
தூசி மாடன்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu