/* */

Jenma Natchathiram ஒருவரின் வாழ்வியல் பலனை நிர்ணயம் செய்வதில் பெரும் பங்கு வகிக்கும் ஜென்ம நட்சத்திரம்

ஜென்ம நட்சத்திர தினத்தன்று ஒருவர் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதை நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர்.

HIGHLIGHTS

Jenma Natchathiram ஒருவரின் வாழ்வியல் பலனை நிர்ணயம் செய்வதில் பெரும் பங்கு வகிக்கும் ஜென்ம நட்சத்திரம்
X

ராசி கட்டம் 

ஒருவரின் சிந்தனை, குணாதிசயம், தினசரி புத்தி செயல்பாடு ஆகியவற்றை தீர்மானிப்பது ஜென்ம நட்சத்திரமாகும். ஒரு ஆன்மாவின் விருப்பங்கள் அனைத்தும் ஜென்ம நட்சத்திரத்தில் தான் பதிவாகியிருக்கும். மனித வாழ்வியல் பலனை நிர்ணயம் செய்வதில் ஒருவரின் பிறந்த ஜென்ம நட்சத்திரம் பெரும் பங்கு வகிக்கிறது.

ஜென்ம நட்சத்திரம் என்பது நாம் எந்த நட்சத்திரத்தில் பிறந்து இருக்கிறோமோ அதுதான் ஜென்ம நட்சத்திரம். ஒருவர் பிறக்கும் போது, சந்திரன் எந்த இடத்தில் சஞ்சாரம் செய்கிறாரோ அது தான் அவரது ஜென்ம நட்சத்திரமாகும்.

ராசி மண்டலத்தில் உள்ள 12 ராசிகளிலும் அமைக்கப்பட்டுள்ள நட்சத்திரங்கள் வழியாகத்தான் ஒன்பது கிரகங்களும் வலம் வருகின்றன. ஒவ்வொரு கிரகமும் மேஷம் முதல் மீனம் வரை உள்ள பனிரெண்டு ராசிகளில் அதனுள் குறிக்கப்பட்டுள்ள ஏதேனுமொரு நட்சத்திர பாதத்தில் தான் சுற்றி வர முடியும்.

ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் ராசி மண்டலத்தை சுற்றி வரும் சந்திரன் நின்ற நட்சத்திரமே அந்த நேரத்திற்குரிய ஜென்ம நட்சத்திரம் கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு கிரகத்திற்கும் மூன்று நட்சத்திரங்கள் (9X 3=27) வீதம் இருக்கும்


மொத்தம் 27 நட்சத்திரங்கள். அவை

1. அஸ்வினி, 2. பரணி, 3.கிருத்திகை, 4.ரோகினி, 5.மிருகசீரிஷம், 6.திருவாதிரை, 7.புனர்பூசம், 8.பூசம், 9.ஆயில்யம், 10.மகம், 11.பூரம், 12.உத்திரம், 13.ஹஸ்தம்,14. சித்திரை, 15.சுவாதி, 16.விசாகம், 17. அனுஷம்,18. கேட்டை, 19. மூலம், 20. பூராடம்,21. உத்திராடம், 22. திருவோணம், 23. அவிட்டம், 24. சதயம், 25. பூரட்டாதி, 26. உத்திரட்டாதி, 27. ரேவதி.

இந்த 27 நட்சத்திரங்களை மூன்றாக பிரிக்கலாம்.

1.தலையற்ற நட்சத்திரங்கள்.

2.உடலற்ற நட்சத்திரங்கள்.

3.காலற்ற நட்சத்திரங்கள்

தலையற்ற நட்சத்திரங்கள்:

சூரியனின் நட்சத்திரங்களான கிருத்திகை, உத்திரம், உத்திராடம் இவற்றிற்கு முதல் பாதம் ஒரு ராசியிலும் மீதம் மூன்று பாதங்கள் அடுத்த ராசியிலும் இருக்கும் என்பதால் இவை தலையற்ற நட்சத்திரங்கள் எனப்படும்..

தலையற்ற நட்சத்திரங்கள் வரும் நாளில், தலைப் பகுதியில் உள்ள நோய்களுக்கும் கண், காது, மூக்கு, மூளை சம்பந்தப்பட்ட நோய் குணமாகவும் முதன் முதலில் மருத்துவரை சந்திக்க கூடாது.

தலைமைப் பொறுப்பேற்க கூடாது. இந்த நட்சத்திர நாட்களில் தலைமைப் பதவியை ஏற்றால் நிலைத்து இருக்காது அல்லது அவப்பெயரே மிஞ்சும்.

உடலற்ற நட்சத்திரங்கள்:

செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் இவற்றிற்கு முதல் இரண்டு பாதங்கள் ஒரு ராசியிலும், அடுத்த இரண்டு பாதங்கள் அடுத்த ராசியிலும் இருக்கும் என்பதால் உடலற்ற நட்சத்திரங்கள் எனப்படும்.

அடுத்து உடலற்ற நட்சத்திரங்கள் வரும் நாளில், உடல் வலி, ஜீரண உறுப்புகள் சம்பந்தப்பட்ட நோய்கள் அகல முதன் முதலில் மருந்து மாத்திரைகளை சாப்பிடக்கூடாது

காலற்ற நட்சத்திரங்கள்:

குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி இந்த நட்சத்திரங்களுக்கு முதல் மூன்று பாதங்கள் ஒரு ராசியிலும், கடைசி பாதம் மட்டும் அடுத்த ராசியிலும் இருக்கும்.

காலற்ற நட்சத்திரங்கள் வரும் நாளில், உத்தியோகம் சம்பந்தமாக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொண்டவர்களுக்கு அது அனுகூலமாக இருக்காது. கால் வலி, காலில் உள்ள நரம்பு, எலும்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் அகல மருத்துவரை சந்திக்க கூடாது.

பொதுவாக தலையற்ற, உடலற்ற, காலற்ற நட்சத்திர நாட்களில் திருமணம், கிரகப்பிரவேசம் வைக்கக்கூடாது. தூரதேசப் பயணங்களை தவிர்க வேண்டும்.

மேலும் அசுவினி, ரோகிணி, பூசம், ஹஸ்தம், அனுஷம் , மூலம், திருவோணம், உத்திரட்டாதி மற்றும் ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் சுப நிகழ்விற்கு மிகவும் உன்னதமானது.

பரணி, மிருகசீரிஷம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், சுவாதி, கேட்டை, பூராடம், உத்திராடம், அவிட்டம் மற்றும் சதயம் மத்திமமான பலனைத் தரும் சுப நட்சத்திரங்களாகும்.

கிருத்திகை, திருவாதிரை, புனர்பூசம், சித்திரை, விசாகம் மற்றும் பூரட்டாதி நட்சத்திர நாட்களில் சுப நிகழ்வுகளை தவிர்ப்பது உத்தமம்.

தீதுறு நட்சத்திரங்களான பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சித்திரை, சுவாதி, மகம் ஆகிய இந்த பண்ணிரெண்டு நட்சத்திரங்களில் யாருக்காவது பணம் கொடுத்தால் திரும்பிவராது. நகை அடமானம் வைக்க கூடாது.

பலர் தங்களது ஜென்ம நட்சத்திரத்துக்கு உகந்த நேரங்களை பார்க்காததால், பல முயற்சிகளில் தோல்வி அடைகின்றனர். நற்செயல்களை நல்ல நாள் நட்சத்திரத்தில் ஆரம்பித்தால் ஜெயம் உண்டாகும். அதன்படி நமக்கு நன்மை செய்கின்ற நட்சத்திரங்கள் வரும் நாளில் முக்கியமான விஷயங்களை ஆரம்பிக்கலாம்.

நல்ல விஷயங்கள் பேசலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். வங்கி கணக்கு தொடங்கலாம். கம்ப்யூட்டர், செல்போன் போன்ற சாதனங்கள் வாங்கலாம். பரிகார பூஜைகள் செய்யலாம். வேலைக்கான முயற்சிகளை தொடங்கலாம்.

ஒருவர் தன் வாழ்நாளில் எப்படி இருப்பார் என்பதை நிர்ணயம் செய்வதே ஜென்ம நட்சத்திரம் தான். அதனால்தான் ஜென்ம நட்சத்திர தினத்தன்று ஒருவர் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதை நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர்.

12 ராசிகளுக்கும் அதன் பாதங்களை பொறுத்து 27 நட்சத்திரங்களை வகுத்துள்ளனர்.

ஒவ்வொருவரும் தங்கள் ஜன்ம நட்சத்திரத்தன்று செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை என வரையறுக்கப்பட்டுள்ளது.

ஜென்ம நட்சத்திரத்தன்று செய்யக்கூடியவை: புதிதாகக் கல்வி கற்றல், உயர் பதவி ஏற்பு, அசையும், அசையா சொத்துக்களை பார்வையிடுதல் வாங்குதல், பத்திரம் பதிவு செய்தல், யாகங்கள் செய்தல், அன்னதானம் தர்ம காரியங்கள் செய்தல், உபநயனம் செய்தல், கிரஹப்பிரவேசம் செய்தல் போன்ற காரியங்களை செய்யலாம்.

ஜென்ம நட்சத்திரத்தன்று செய்யக்கூடாதவை: நோயாளிகள் முதன்முதலாக மருந்து எடுத்துக்கொள்ளுதல், தம்பதியருக்குத் திருமணம் செய்வித்தல், திருமணம் ஆன பெண்ணுக்கு சீமந்தம் செய்தல், சாந்தி முகூர்த்தம் செய்தல், காது குத்துதல், முடி இறக்குதல் போன்ற காரியங்களை செய்யக்கூடாது.

உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்கு நன்மை தரும் நட்சத்திரங்கள்:

அஸ்வினி: பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், பூரம், அஸ்தம், சுவாதி, பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி

பரணி: கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், உத்திரம், சித்திரை, விசாகம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி.

கிருத்திகை: ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி.

ரோகிணி: மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், பூரம், சித்திரை, விசாகம், கேட்டை, அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி.

மிருகசீரிஷம்: திருவாதிரை, பூசம், அசுவினி, கிருத்திகை. சுவாதி, அனுஷம், மகம், உத்திரம், சதயம், உத்திரட்டாதி, மூலம்

திருவாதிரை: புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி.

புனர்பூசம்: பூசம், மகம், உத்திரம், சித்திரை, அனுஷம், மூலம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம்.

பூசம்: ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி, கேட்டை, பூராடம், திருவோணம், ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை.

ஆயில்யம்: மகம், உத்திரம், சித்திரை, விசாகம், மூலம், உத்திராடம், அவிட்டம், அசுவினி, கிருத்திகை, மிருக சீரிஷம், புனர்பூசம்.

மகம்: பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், பூராடம், திருவோணம், சதயம், பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம்.

பூரம்: உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை, உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம்.

உத்திரம்: அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம்.

அஸ்தம்: சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், பூரம்.

சித்திரை: சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, திருவாதிரை, பூசம், மகம், உத்திரம்.

சுவாதி: விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம், பூரட்டாதி, ரேவதி, பரணி, புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம்.

விசாகம்: அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, பூசம், மகம், உத்திரம், சித்திரை.

அனுஷம்: கேட்டை, பூராடம், திருவோணம், சதயம், ரேவதி, பரணி, ரோகிணி, ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி.

கேட்டை: மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், பூசம், மகம், உத்திரம், சித்திரை, விசாகம்.

மூலம்: பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம்.

பூராடம்: உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை.

உத்திராடம்: திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, மிருகசீரிஷம், திரு வாதிரை, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம். .

திருவோணம்: அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம்.

அவிட்டம்: சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, புனர்பூசம், பூசம், மகம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம்

சதயம்: பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி, பூசம், ஆயில்யம், பூரம், விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம்

பூரட்டாதி: உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், ஆயில்யம், மகம், உத்திரம், அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம்.

உத்திரட்டாதி: ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, மகம், பூரம், அஸ்தம், கேட்டை, பூராடம், திருவோணம், சதயம்.

ரேவதி: அஸ்வினி, கிருத்திகை, மிருக சீரிஷம், புனர்பூசம், பூரம், உத்திரம், சித்திரை, மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி.

அவரவரின் ஜென்ம நட்சத்திரத்திற்கு சாதகமான நட்சத்திரத்தன்று செய்யும் அனைத்து செயல்களும் ஜெயமாகும். மேலும் சுய ஜாதகத்தில் சந்திரனை பலப்படுத்த இந்த எளிய பரிகாரத்தை ஜென்ம நட்சத்திரத்தில் செய்தால் சந்திரபலம் கூடும்.

Updated On: 27 Nov 2023 9:02 AM GMT

Related News