/* */

மார்கழி மாதம் பிறந்தாச்சு; பெண்கள் கடைபிடிக்க வேண்டிய 10 விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

மார்கழி மாதத்தில் பெண்கள் பின்பற்ற வேண்டிய 10 முக்கிய விஷயங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோம்.

HIGHLIGHTS

மார்கழி மாதம் பிறந்தாச்சு;  பெண்கள் கடைபிடிக்க வேண்டிய 10 விஷயங்கள் என்னென்ன தெரியுமா?
X

மார்கழி மாதத்தில் பெண்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் (கோப்பு படம்)

மார்கழி மாதம் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய 10 விஷயங்கள்

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா சொல்லி இருப்பதிலிருந்தே இந்த மாதத்தின் சிறப்புகளை தெரிந்து கொள்ளலாம். மார்கழி மாதம் அறிவியல் ரீதியாகவும் சரி, ஆன்மிக ரீதியாகவும் சரி பல நன்மைகளை தரக் கூடிய மாதமாகும். இந்த மாதத்தில் தான் ஆக்சிஜன் அதிகம் நிறைந்த ஓசோன் படலம் பூமிக்கு மிக அருகில் வருவதால் அந்த சமயத்தில் அதிகாலையில் எழுந்து கோலமிடுவது, பஜனை செய்வது, கோவிலுக்கு செல்வது உடலுக்கும், மனதிற்கும் சிறப்பானதாகும்.

மார்கழி மாதத்தில் அனைவரும் கண்டிப்பாக செய்ய வேண்டியது, தவிர்க்க வேண்டியது என சில விதிமுறைகள் உள்ளன. இது தவிர இந்த மாதத்தில் பெண்கள் கண்டிப்பாக செய்ய வேண்டியதும், தவிர்க்க வேண்டியதுமான விஷயங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். இவற்றை முழுமையாக கடைபிடிப்பதால் மார்கழி மாதத்தில் வழிபட்ட முழு பலனைகளையும் நாம் பெற முடியும்.


மார்கழி மாதம் என்பது மிகவும் விசேஷமான மாதமாகும். சூரிய பகவான், குருவின் வீடான தனுசு ராசிக்குள் பயணம் செய்யும் மாதம். அதனால் இது குருவின் ஆதிக்கம் அதிகம் நிறைந்த மாதமாகும். வழக்கமாக கோவில்களில் காலையில் திருப்பள்ளி எழுச்சி எனப்படும் சுப்ரபாதம் பாடித் தான் இறைவனை துயில் எழுப்புவார்கள். அருகில் உள்ள கோவில்களில் இந்த பாடல்களை கேட்டு நாமும் கண் விழித்திருப்போம். ஆனால் பக்தர்கள் அனைவரும் தேடிச் சென்று, பகவானை புகழ்ந்து பாடி எழுப்பும் மாதம் மார்கழி மாதமாகும்.


மார்கழி மாதத்தில் தான் குருஷேத்திர போர் நடைபெற்றது என புராணங்கள் சொல்கின்றன. இந்த போரில் வெற்றி பெற்றது பாண்டவர்கள் என கதைகள் சொன்னாலும், உண்மையில் வெற்றி பெற்றது பகவானும், அவன் நிலை நிறுத்த நினைத்த தர்மமும் தான். இறைவனின் துணையுடன் நாமும் வாழ்வில் எதிர்கொள்ளும் போராட்டங்களை, பிரச்சனைகளை வெற்றி கொள்ள வேண்டும் என்பதற்காக தான் மார்கழி மாதம் இறை வழிபாட்டிற்குரிய மாதமாக சொல்லப்படுகிறது. இந்த மாதத்தில் அனைவரும், குறிப்பாக பெண்கள் என்ன விஷயங்களை கடைபிடிக்க வேண்டும், எந்தெந்த விஷயங்களை தவிர்க்க வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.


1. பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, குளித்து, வாசலில் கோலமிட்டு, பூஜை செய்து விட வேண்டும்.

2. மார்கழியின் 30 நாட்களும் தினமும் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொள்ள வேண்டும்.

3. காலையில் எழுந்த உடன் முன் வாசல் கதவை திறந்த பிறகு தான் பின் வாசல் கதவை திறக்க வேண்டும். அப்படி திறக்கும் போதும் கஜலட்சுமி என்ற மந்திரத்தை உச்சரித்தபடி திறக்க வேண்டும்.

4. வாசலில் சாணம் அல்லது மஞ்சள் நீர் தெளித்து கோலமிட்டு, அதில் செம்பருத்தி பூ வைத்து அலங்கரிக்க வேண்டும்.

5. காலையில் நிலை வாசலில் 2 தீபங்கள் ஏற்ற வேண்டும். அது நெய் விளக்கோ, நல்லெண்ணெய்யோ, பஞ்சகூட்டு எண்ணெய்யோ அல்லது வழக்கமாக நீங்கள் தீபம் ஏற்ற பயன்படுத்தும் எண்ணெய் கொண்டு விளக்கேற்ற வேண்டும்.


6. மாலையிலும் நிலைவாசலில் 2 தீபங்கள் ஏற்ற வேண்டும்.

7. திருமண வயதில் இருக்கும் பெண்கள், திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்கள் மார்கழி மாதம் காலையில் விநாகருக்கு ஒரு குடத்தில் தண்ணீர் எடுத்து அபிஷேகம் செய்ய வேண்டும்.

8. தினமும் காலையில் திருப்பாவை, திருவெண்பாவை பாசுரங்கள் பாடுவது சிறப்பு. தினமும் கந்தசஷ்டி கவசம் கேட்பதும், படிப்பதும் உயர்ந்த பலனை தரும்.

9. நம்மால் முடிந்த அளவிற்கு அருகில் உள்ள கோவிலுக்கு மார்கழி மாத பூஜைக்கு கொடுக்கலாம். கோவிலுக்கு தேவையான பூஜை பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.

10. வீட்டில் தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

Updated On: 17 Dec 2023 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...