/* */

Palli Palan in Tamil-உங்களுக்கு பல்லி எங்கே விழுந்தது? பலன் பார்க்கலாம் வாங்க..!

பல்லி விழுதல் என்பது பல்லி விழும் சாஸ்திரம் என்று தனி ஜாதக நூல் உள்ளது. அதில் எந்தப்பகுதியில் பல்லி விழுந்தால் என்ன பிளான் என்பது விளக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

Palli Palan in Tamil-உங்களுக்கு பல்லி எங்கே விழுந்தது? பலன் பார்க்கலாம் வாங்க..!
X

palli palan in tamil-பல்லி விழும் பலன் (கோப்பு படம்)

Palli Palan in Tamil

கடவுள் மனிதர்களோடு உரையாட பல வழிகளை கொண்டுள்ளார் என்று நமது புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதில் பல்லியும் ஒன்றென கூறப்படுகிறது.

பல்லி விழும் பலன்:

பல்லி என்பது நவகிரகங்களில் கேதுவை குறிக்கிறது. கேது என்பது ஸ்வரபானு என்கிற அசுரனின் உடலாகும். பல்லி கத்துவது முதல், அது நம் உடலில் எங்கே விழுகிறது என்பது வரை அதன் சில செயல்கள் பல முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் என்பதையும், அப்படி பல்லி விழுவதால் ஏற்படும் தோஷத்தை போக்கும் பரிகாரம் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Palli Palan in Tamil

தலையில் பல்லி விழும் பலன் :

தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம் உண்டாகும். தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம் உண்டாகும்.

நெற்றியில் பல்லி விழுந்தால் என்ன பலன்

நெற்றியின் இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தி உண்டாகும். நெற்றியின் வலது பக்கம் பல்லிவிழுந்தால் லக்ஷ்மிகரம் உண்டாகும்.

Palli Palan in Tamil

வயிற்றில் பல்லி விழுந்தால் என்ன பலன்

வயிற்றின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி உண்டாகும். வயிற்றின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம் சேரும்.

முதுகில் பல்லி விழும் பலன்

முதுகு இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை உண்டாகும். முதுகு வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் ஏற்படும்.

Palli Palan in Tamil

கண் பல்லி பலன்

கண் இடது பக்கம் பல்லி விழுந்தால் பயம் உண்டாகும். கண் வலது பக்கம் பல்லி விழுந்தால் சுகம் உண்டாகும்

தோளில் பல்லி விழும் பலன்

தோள் இடது பக்கம் பல்லி விழுந்தால் போகம் உண்டாகும். வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி உண்டாகும்.

பல்லி விழும் பலன் – பிருஷ்டம்:

பிருஷ்டம் இடது பக்கம் பல்லிவிழுந்தால் செல்வம் உண்டாகும். பிருஷ்டம் வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம் உண்டாகும்.

Palli Palan in Tamil

கபாலம் பகுதியில் பல்லி விழுந்தால்

கபாலம் இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு உண்டாகும். கபாலம் வலது பக்கம் பல்லி விழுந்தால் கதனம் உண்டாகும்.

கணுக்கால் பகுதியில் பல்லி விழுதல்:

கணுக்கால் இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம் ஏற்படும். கணுக்கால் வலது பக்கம் பல்லி விழுந்தால் பிரயாணம் செய்ய நேரிடும்.

Palli Palan in Tamil

மூக்கு பகுதியில் விழுந்தால்

மூக்கு இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை உண்டாகும். மூக்கு வலது பக்கம் பல்லி விழுந்தால் வியாதி உண்டாகும்

மணிக்கட்டு பகுதியில் பல்லி விழுந்தால்:

மணிக்கட்டு இடது பக்கம் பல்லி விழுந்தால் கீர்த்தி உண்டாகும். மணிக்கட்டு வலது பக்கம் பல்லி விழுந்தால் பீடை உண்டாகும்.

தொடையில் பல்லி விழும் பலன்

தொடை இடது பக்கம் பல்லி விழுந்தால் சஞ்சலம் உண்டாகும். வலது பக்கம் பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும்.

Palli Palan in Tamil

நகத்தில் பல்லி விழும் பலன்:

நகம் இடது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் உண்டாகும். நகம் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு உண்டாகும்.

காது பல்லி விழும் பலன் – காது இடது பக்கம் பல்லி விழுந்தால் லாபம் உண்டாகும். காது வலது பக்கம் பல்லி விழுந்தால் ஆயுள் கூடும். மார்பில் பல்லி விழும் பலன் இடது மார்பில் பல்லி விழும் பலன் – சுகம் உண்டாகும். வலது மார்பில் பல்லி விழும் பலன் – லாபம் உண்டாகும்.

கழுத்தில் பல்லி விழுந்தால் என்ன பலன் – கழுத்து இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி உண்டாகும். கழுத்து வலது பக்கம் பல்லி விழுந்தால் பகை உண்டாகும்.

உதட்டில் பல்லி விழுந்தால் என்ன பலன் – உதடு இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு உண்டாகும். உதடு வலது பக்கம் பல்லி விழுந்தால் கஷ்டம் உண்டாகும்.

Palli Palan in Tamil

முழங்காலில் பல்லி விழுந்தால் என்ன பலன்

முழங்கால் இடது பக்கம் பல்லி விழுந்தால் பந்தனம் உண்டாகும். முழங்கால் வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் உண்டாகும்.

பாத விரல் – பல்லி விழும் பலன்கள் பாத விரல் இடது பக்கம் பல்லி விழுந்தால் நோய் உண்டாகும். பாத விரல் வலது பக்கம் பல்லி விழுந்தால் பயம் உண்டாகும்.

கையில் பல்லி விழும் பலன்

இடது கை மீது பல்லி விழுந்தால் துன்பம் உண்டாகும். வலது கை மீது பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும். கை விரல் பல்லி விழும் பலன் இடது கை விரல் மீது பல்லி விழுந்தால் சஞ்சலம் உண்டாகும். வலது கை விரல் மீது பல்லி விழுந்தால் சன்மானம் கிடைக்கும்.

Palli Palan in Tamil

பாதத்தில் பல்லி விழும் பலன்

பாதம் இடது பக்கம் பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும். பாதம் வலது பக்கம் பல்லி விழுந்தால் நோய் உண்டாகும்.

இதனாலேயே ஊர்வன வகையான உயிரினங்களில் ஒலியை எழுப்பும் சிறப்பு சக்தியை பல்லிக்கு மட்டுமே இறைவன் கொடுத்துள்ளார். பல்லியை கடவுளின் தூதன், செய்தியாளன் என நம் இதிகாசங்கள் கூறுகின்றன.

பல சிறப்புக்கள் மிக்க பல்லியின் பல செயல்களுக்கு பின் பல அர்த்தங்கள் உள்ளது. நமது வீட்டில் சில இடங்களில் பல்லி கத்தினாள் நல்லது நடக்கும். சில இடங்களில் கத்தினாள் தீயவை நடக்கும் என்று கூறுவதும் இதனாலேயே.

Palli Palan in Tamil

அதுபோல பல்லி நம் உடல் மீது எங்கு விழுகிறதோ அதை பொருத்தும் தனி பலன்கள் உண்டு. பண்டைய காலத்தில் பல்லியை குறித்து ஒரு தனி படிப்பே இருந்தது என்றால் இதன் சிறப்பை பாருங்கள். அது தான் கௌளி சாஸ்திரம்.

பல்லிக்கு சில சக்திகள் இருப்பதாலேயே காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோவிலில் கர்பகிரகத்தின் மேல் கூரையில் தங்கம் மற்றும் வெள்ளியில் பல்லி உருவங்கள் இடம்பெற்றிருக்கிறது. அதே போல் ஸ்ரீரங்கம் ரங்கநாதன் சுவாமி கோவிலிலும் பல்லி வணங்கப்படுகிறது.

Palli Palan in Tamil

பல்லி விழுந்தால் பரிகாரம் என்ன

பல்லி விழுவதால் ஏற்படும் தீமைகளுக்கு பரிகாரம் உள்ளது என பழைய சாஸ்திரங்கள் கூறுகின்றன. உங்கள் உடலின் எந்த ஒரு பகுதியிலும் பல்லி விழுந்தாலும், நீங்கள் முதலில் செய்ய வேண்டியது நன்கு குளித்து விட்டு சிவன், விஷ்ணு, விநாயகர் போன்ற எந்த ஒரு கோவிலுக்கும் சென்று அங்குள்ள தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும்.

கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் தங்களின் வீட்டின் பூஜையறையிலேயே தெய்வங்களின் படத்திற்கு முன்பாக திருவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வதும் நல்லது. சிவபெருமானுக்குரிய ம்ரித்யுன்ஜெய மந்திரத்தை ஜெபிப்பதாலும் பல்லி விழுந்ததால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும்.

சித்த வைத்தியத்தில் மருந்தாகவும், கோயில் சடங்குகளில் அபிஷேக பொருளாகவும் பசு மாட்டிலிருந்து பெறப்படும் 5 விதமான பொருட்களால் செய்யப்படும் பஞ்சகவ்யா திகழ்கிறது. பசுமாட்டின் உடலில் தேவர்கள் வாசம் செய்கிறார்கள் என்பதால் பசுமாட்டிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்யாவை உண்பதால் பல்லி நம்மீது விழுந்ததால் ஏற்படும் தோஷம் நீங்குகிறது.

வசதி மிகுந்தவர்கள் கோயிலில் இருக்கும் தெய்வங்களுக்கு தங்கம் அல்லது தங்க ஆபரணங்களையோ தானமாக அளிப்பதாலும் பல்லி விழுந்ததால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். மேலும் கோயில்களில் விளக்கெண்ணெய் கொண்டு மண் விளக்குகள் ஏற்றுவதாலும் பல்லி விழுந்ததால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.

Palli Palan in Tamil

இவையெல்லாவற்றிற்கும் மேலான பரிகாரமாக இருப்பது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருக்கின்ற தங்கம் மற்றும் வெள்ளியினால் செய்யப்பட்ட பல்லி உருவம். மேலும் அந்த பல்லி உருவத்தோடு சூரியன் மற்றும் சந்திரனின் சித்திரத்தையும் காண முடியும்.

தங்கம் மற்றும் வெள்ளியினால் செய்யப்பட்ட பல்லி உருவத்தை தொடுவதால் நம் மீதுள்ள ராகு – கேது, சனி போன்ற கிரகங்களின் தீய தாக்கங்கள் மற்றும் முன்னாள் மற்றும் வருங்காலத்தில் வரப்போகும் தோஷங்கள் அனைத்தும் முற்றிலும் நீங்கும்.

Updated On: 30 Nov 2023 6:48 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...