/* */

Sani Peyarchi benefits-இன்று மாலை மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடையும் சனி பகவான்; பலன்களை தெரிஞ்சுக்கலாமா?

Sani Peyarchi benefits- மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இன்று மாலை சனி பகவான் பெயர்ச்சி அடைகிறார். அதனால் ராசிகளுக்கு ஏற்படும் சாதக, பாதக பலன்கள் குறித்து தெரிந்துக்கொள்வோம்.

HIGHLIGHTS

Sani Peyarchi benefits-இன்று மாலை மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடையும் சனி பகவான்; பலன்களை தெரிஞ்சுக்கலாமா?
X
Sani Peyarchi benefits- சனி பெயர்ச்சி பலன்களை தெரிந்துக்கொள்வோம் (கோப்பு படம்)

Sani Peyarchi benefits- சனிப் பெயர்ச்சி இன்று ( 20ம் தேதி) நடக்கிறது. மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இன்று மாலை சனி பகவான் பெயர்ச்சி அடைகிறார். சனி (வக்ர) பெயர்ச்சியையொட்டி எந்தெந்த ராசிக்காரர்கள் எப்படி வழிபடலாம் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இன்று மாலை சரியாக 4.05 மணிக்கு சனி (வக்ர) பெயர்ச்சி அடைகிறார். இந்த நேரத்தில் சனி பகவானை வழிபடலாம். கருப்பு துணியில் எள் கட்டி நல்லெண்ணைய் ஊற்றி 2 தீபமும், 19 அகல் தீபமும் ஏற்றி மொத்தம் 21 தீபம் ஏற்றி சனி பகவானை வழிபடலாம்.

எள் உருண்டை, எள் சாதம், நெய்வேத்தியமாக செய்து வழிபடலாம். இந்த வழிபாடு செய்வதன் மூலம் பரிகார பலன்கள் கிடைக்கும்.

மேஷம், மிதுனம், துலாம், தனுசு, மகர ராசிக்கு சனி பெயர்ச்சி நல்ல பலன்களை தருகிறது. ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி, விருச்சிகம், கும்பம், மீனம் ராசிகளுக்கு சுமாரான பலன்களை தருகிறது.

மேஷ ராசியில் 11-ம் இடத்தில் லாபஸ்தான மானத்தில் சனி இருக்கிறார். இதனால் அவர்களுக்கு தொட்டதெல்லாம் லாபகரமாக இருக்கும்.

ரிஷப ராசியில் 10-ம் இடத்தில் ஜீவனாஸ்தானத்துக்கு சனி பகவான் செல்கிறார். இந்த ராசிகாரர்களுக்கு தொழில் பாதிப்பு ஏற்படும்.

மிதுன ராசியில் 9-ம் இடத்தில் பாக்கியஸ்தானத்துக்கு சனி பகவான் செல்கிறார். இந்த ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்கும். மரியாதை உயரும்.

கடக ராசியில் அஷ்டம சனியான 8-ம் இடத்தில் சனி பகவான் இருக்கிறார். இந்த ராசிகாரர்கள் கோர்ட்டு, வழக்கு என்று அலைய வேண்டியதிருக்கும்.

சிம்ம ராசியில் கண்டக சனியான 7-ம் இடத்தில் சனி பகவான் இருக்கிறார். இவர்களுக்கு மருத்துவச் செலவு அதிகரிக்கும்.

கன்னி ராசியில் 6-ம் இடத்தில் ரோக ருன சப்தகுரு ஸ்தானத்திற்கு சனி பகவான் செல்கிறார். இந்த ராசிக்காரர்கள் பழைய கடன்களை வட்டியுடன் செலுத்தும் நிலை ஏற்படும்.

துலாம் ராசியில் 5-ம் இடமான பூர்வீக புண்ணிய ஸ்தானத்திற்கு சனி பகவான் செல்கிறார். இந்த ராசிக்காரர்களுக்கு திருமண ஏற்பாடு மும்முரமாக நடை பெறும். பூர்வீக சொத்து பிரச்சினை தீரும்.

விருச்சிக ராசியில் அர்த்தாஷ்டம சனி 4-ம் இடத்தில் சனி பகவான் இருக்கிறார். இந்த ராசிக்காரர்களுக்கு தோல் சம்பந்தமான வியாதிகள் வரும்.

தனுசு ராசியில் 3-ம் இடமான தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி பகவான் இருக்கிறார். இந்த ராசிக்காரர்கள் பழைய சொத்தை நல்ல விலைக்கு விற்கலாம். புதிய சொத்தை குறைந்த விலைக்கு வாங்கும் நிலை உருவாகலாம்.

மகர ராசிக்கு 2-ம் இடமான பாதக சனி. காதல் திருமணம் கைகூடும், மருத்துவச் செலவு ஏற்படும்.

கும்ப ராசிக்கு 1-ம் இடமான ஜென்ம சனி. பணத்துக்கு கஷ்டம், பொருளாதார பாதிப்பு ஏற்படும்.

மீன ராசிக்கு 12-ம் இடமான விரய சனி. ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் நஷ்டம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் பாதிப்பு ஏற்படும்.

பொதுவாக சனி பெயர்ச்சி பலன்களை பொருத்த வரை இந்தமுறை பல ராசிகளுக்கு மோசமான விளைவுகளை தருவதாகவே பலன்கள் கூறுகின்றன. தொழில் நஷ்டம், தொழில் பாதிப்பு, பொருளாதார கஷ்டம், மருத்துவ செலவு, கோர்ட் வழக்கு செலவு என பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அதற்கேற்ப உரிய பரிகாரங்களை செய்தால் அந்த பாதிப்பில் இருந்து ஓரளவு தப்பிக்கவும் அதிக வாய்ப்புள்ளது.

Updated On: 20 Dec 2023 7:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்