நீங்க என்ன ராசி..? உங்க கணவர் இப்பிடித்தான் இருப்பார்..!

நீங்க என்ன ராசி..?  உங்க கணவர் இப்பிடித்தான் இருப்பார்..!
X

ராசிப்படி ஒரு பெண்ணுக்கு கிடைக்கும் கணவனின் குணங்கள்.(கோப்பு படம்)

ஒரு பெண்ணுக்கு ராசிக்கு ஏற்ப கிடைக்கும் கணவன் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பது இந்த கட்டுரையில் தரப்பட்டுள்ளது.

ஒரு பெண்ணுக்கு இல்லை ஆணுக்கும்கூட வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நிகழ்வு திருமணம். அது சரியாக அமைந்துவிட்டால் வாழ்க்கை சொர்க்கம் ஆகிவிடும்.

அதுவே திருமண வாழ்க்கை சரியாக அமையாவிட்டால் அதற்குப் பிந்தைய வாழ்க்கை அர்த்தமற்றதாகி விடுகின்றது. குறிப்பாக பெண்களின் வாழ்க்கையில் திருமணம் அவர்களது எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கும் திருப்புமுனையாக அமைகிறது.

ஒவ்வொரு பெண்ணுக்கும் எப்படிப்பட்ட கணவன் கிடைக்கின்றானோ அதுவே அவர்களின் மீதி வாழ்க்கையை தீர்மானிக்கின்றது.

ஜோதிடத்தின் அடிப்படையில் எந்த ராசியுடைய பெண்களுக்கு எப்படிப்பட்ட கணவர் கிடைப்பார் என்பதை இங்கு பாப்போம் வாங்க.

மேஷம்

உங்கள் ராசி மேஷ ராசியாக இருந்தால், உங்களுக்கு அழகான மற்றும் கலையை விரும்பக் கூடிய ஒருவர் கணவராக அமைவார். இவர்களின் வாழ்கையில் துன்பங்கள் இருந்த போதிலும் மகிழ்ச்சியாக இருக்கும். அப்போ துணிஞ்சி கட்டிக்கலாம்.

ரிஷபம்

ரிஷப ராசி பெண்களுக்கு, படிப்பறிவு குறைவான கணவன் கிடைப்பான். இப்படிப்பட்டவர்களின் வாழ்க்கை போராட்டமாக இருக்கும். ஆனால் நிச்சயம் இவர்களின் வாழ்க்கை வெற்றியடையும். ஆனால் இவர்களின் வாழ்க்கை மற்றவர்களுடன் ஒப்பிடும் போது சற்று கடினமானதாக இருக்கும்.

அதனால் வாழ்க்கையை மற்றவர்களுடன் ஒப்பிடாமல் கிடைத்த வாழ்க்கையை ரசித்து வாழுங்கள்.


மிதுனம்

இந்த ராசி பெண்களுக்கு அழகான மற்றும் படித்த ஆண் கணவராக அமைவார். இயல்பில் எப்படிப்பட்டவராக இருக்கிறாரோ அதைப்பொறுத்து நீங்களும் மாற்றிக்கொண்டால் வாழ்க்கை இனிக்கும்.

கடகம்

கடகம் ராசி பெண்ணின் கணவன் வயதில் மிகவும் பெரியவராக இருக்க வாய்ப்புள்ளது. இயல்பிலேயே கோபக்காரர். ஆனால் நல்லவராக இருக்க வாய்ப்புள்ளது. உங்களை சின்ன புள்ளையாட்டம் பாத்துக்குவாரு. (ஏன்னா அவரு உங்களைவிட வயதில் ரொம்ப பெரியவர் இல்லையா)

சிம்மம்

சிம்ம ராசி பெண்களுக்கு சிறந்த கணவன் கிடைப்பார். எல்லா வகையிலும் உங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்யும் ஒரு ஆண் கணவராக அமைவார்.

சிக்கல் இல்லாத சிந்தாமணி. அப்புறம் என்ன வாழ்க்கையை என்ஜாய் பாணி வாழுங்கள்.

கன்னி

உங்கள் ராசி கன்னியாக இருந்தால், உங்களுக்கு விசுவாசமான, அழகான, விவேகமான மற்றும் மத நம்பிக்கை கொண்ட கணவன் அமைவார்.

அப்படின்னா ரொம்ப நல்லவரா இருப்பார். நீங்க இழுத்த இழுப்புக்கெல்லாம் தலை ஆட்டுவார். ஓகே ஓகே பாத்துக்கங்க.

துலாம்

நீங்கள் துலாம் ராசியாக இருந்தால் உங்கள் வருங்கால கணவர் உங்களுடன் பேசும் போது கோபப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

பாத்து பக்குவமா நடந்துக்கிட்டா கோபமாவது ஒண்ணாவது..?

விருச்சிகம்

நீங்கள் விருச்சிக ராசிக் காரராக இருந்தால், உங்களுக்கு அமைதியான சுபாவம், கடின உழைப்பு, நல்லொழுக்கம் மற்றும் உணர்ச்சிவசப்படக்கூடியவர் கணவராக கிடைப்பார்.

அடடா..கொடுத்துவச்ச மகராசி..


தனுசு

தனுசு ராசி பெண்ணுக்கு வெற்றிகரமான தொழிலதிபர் கணவனாக அமையலாம். அத்தகைய பெண்ணின் வாழ்க்கைத் துணை கண்ணியமான மற்றும் அதிர்ஷ்டசாலி.

அப்படின்னா ஆஹா வாழ்க்கைதான் போங்கோ..

மகரம்

மகர ராசிப் பெண்ணின் கணவர் பிடிவாத குணம் கொண்டவராகவும், இரட்டை இயல்புடையவராகவும் இருப்பார். மேலும் இனிமையான குரல் மற்றும் உணர்ச்சி கொண்டவர்.

குரல் இனிமை என்பதால் பாட்டுப்பாடி சமாளித்துவிடலாமோ..?!

கும்பம்

கும்ப ராசிப் பெண்ணுக்கு மற்றவர்களின் அறிவுரைகளைப் பொருட்படுத்தாத பிடிவாத குணம் கொண்ட கணவர் கிடைப்பார். அவர்கள் அழகைப் பற்றி கவலைப்படுவதில்லை. எல்லோருடனும் பழகுவது அவர்களின் இயல்பாக இருக்கும்.

அப்படின்னா நல்லவராகத்தான் இருப்பார்.

மீனம்

மீன ராசியில் பிறந்த பெண்களுக்கு அழகான மற்றும் நல்லொழுக்கமுள்ள கணவர் கிடைப்பார். எப்போதும் மகிழ்ச்சியான இயல்புடையவராகவும் சிரித்த முகத்துடனும் இருப்பார். இவர்களின் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும்.

உங்களுக்கும் ஆஹா வாழ்க்கைதான்..

Tags

Next Story