/* */

King Of Kohli In India Team இந்திய அணியின் ’’ கிங்’’ கோலி 50 வது சதமடித்து அபார சாதனை

King Of Kohli In India Team உலக கோப்பை செமிபைனல் போட்டியில் தனது 50 வது ஒரு நாள் போட்டி சதத்தினை எட்டினால் விராத்கோலி. இன்னும் ஒருபோட்டி உள்ளது. நிச்சயம் வெற்றிக்கனியை இந்தியா பறிக்கும் என எதிர்நோக்கியுள்ளனர்.

HIGHLIGHTS

King Of Kohli In India Team  இந்திய அணியின் ’’ கிங்’’ கோலி   50 வது சதமடித்து அபார சாதனை
X

King Of Kohli In India Team

இந்திய அணியானது நடந்து வரும் உலகக்கோப்பை போட்டிகளில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் அபார சாதனை படைத்துள்ளது.

நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் கேப்டன் ரோகித்சர்மா மற்றும் சுப்மன்கில் ஆகியோர் ஓபனிங் பேட்ஸ் மேன்களாக களம் இறங்கினர்.

இதில் ரோகித்சர்மா 47 ரன்களைத் தொட்டபோது சவுதி வீசிய பந்தில் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு திரும்பினார். பின்னர் கிங் ஆப் கிரிக்கெட் என்று சொல்லக்கூடியவரும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வரும் விராட் கோலி 3 வது பேட்ஸ்மேனாக களமிறங்கினார். பின்னர் இரு ஜோடிகளும் அணியினை வெற்றிப்பாதையை நோக்கி அழைத்துச் சென்ற நேரத்தில் கில்லுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டு வெளியேறினார். அவருக்கு பதிலாக கோலியுடன் ராகுல் ஜோடி சேர்ந்தார். பின்னர் இருவரும் நிதானமாக விளையாடி அணிக்கு ரன்களைச் சேர்த்தனர். விராட் கோலி நேற்றைய போட்டியில் தன்னுடைய 50 வது சதத்தினை எடுத்து டெண்டுல்கரின் சாதனையை அவருடைய மைதானமான மும்பையிலேயே முறியடித்தார்.

நேற்றைய போட்டியைக் காண டெண்டுல்கரும் பார்வையாளர் பகுதியில் அமர்ந்து போட்டியை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் இந்த அரிய சாதனையை விராத்கோலி படைத்தார்.

விராட் கோலியின் சாதனைகள்

*ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் 50 சதமடித்த விளாசிய முதல் வீரர் என வரலாற்று சாதனை படைத்தார்.

*உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் அதிக ரன் எடுத்த இந்திய வீரரானார் கோலி. இதற்கு முன் சவுரவ் கங்குலி 2003 ம் கென்யாவுக்கு எதிராக நடந்த போட்டியில் 111 ரன்களை எடுத்திருந்தார்.

*ஒரு உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் (711 ) எடுத்தர வீரரானார் கோலி. இதற்கு முன்பாக சச்சின் டெண்டுல்கர் 2003 ம் ஆண்டு 673 ரன்கள் எடுத்திருந்தார்.

King Of Kohli In India Team


விராத் கோலிக்கும் நேற்று இடையே தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இருந்த போதிலும் அவர் ஓய்வெடுக்காமல் தொடர்ந்து விளையாடி சாதனை படைத்துள்ளார். அதேபோல் ஒரு பந்தில் த்ரோ செய்ததால் அதற்குள் வந்துவிட வேண்டும் என வேகமாக ஓடிய நிலையில் திடீரென குப்புற விழுந்து ரன் அவுட் ஆகாமல் தப்பித்தார். சொல்லப்போனால் நேற்று கோலி ரசிகர்களுக்கு விருந்துதான் என்றே சொல்லவேண்டும். காரணம் அவர் பிறந்த நாளில் 100 ரன்களை அதாவது 49 சதமடித்து சாதனை படைத்தார். பின் அதனை முறியடிக்கும் விதமாக சதத்தில் பாதி செஞ்சுரி போட்டுள்ளார்.

10 போட்டிகளில் துடிப்புடன் விளையாடி வெற்றி வாகையை சூடிய இந்திய அணி நிச்சயம் இறுதிப்போட்டியிலும் வென்று கோப்பையை பெறும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். காரணம் இன்று நடக்கும் இரண்டாவது செமிபைனலில் ஆஸ்திரேலியாவும் தென்ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. இருவரில் யார் ஜெயித்தாலும் அவர்களுடன் மோதவிருப்பது இந்திய அணிதான். என்னதான் காய் நகர்த்தினாலும் நம்ம பவுலர்களின் டெக்னிக்கில் இவர்கள் வீழவே செய்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்....

Updated On: 16 Nov 2023 7:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!